மின்சார டிரான்ஸ்பாரில் காப்பர் கம்பிகள் திருட்டு

மின்சாரம்

கோவை,  நவம்பர் 21:

அரசூர்-பெத்தாம்பாளையத்தில் மின்வாரியத்துக்கு சொந்தாமான மின்சார டிரான்ஸ்பாரில் இருந்து காப்பர் கம்பிகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலாஸர் தேடி வருகின்றனர்.

கோவை ஊரகப் பகுதியான சூலூர் அருகே உள்ள அரசூரிலிருந்து பெத்தாம்பாளையம் செல்லும் பாதையில் மின்வாரியத்துக்குச் சொந்தமான மேல் மட்ட மின்சார டிரான்ஸ்பார்மரை ரை கீழே தள்ளிவிட்டு அதிலிருந்த காப்பர் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்காக தனியாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டு மின்சாரம் சென்றுகொண்டிருந்தது. தொழிற்சாலை கடந்த ஆறு மாதங்களாக செயல்படாமல் இருந்ததையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்த ட்ரான்ஸ்ஃபார்மரில் நீண்ட நாளாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எப்படியோ தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு டிரான்பார் பொருத்தப்பட்ட கம்பத்தின் மேலே ஏறி டிரான்ஸ்பார்மரை கீழே தள்ளி அதிலிருந்த காப்பர் வயர்களை திருடி சென்றுள்ளனர்.

இதற்கிடையே சனிக்கிழமை காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் டிரான்ஸ்பார்மர் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அரசூர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மர் கீழே தள்ளப்பட்டு அதிலிருந்த காப்பர் வயர்கள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பாக அரசூர் மின்வாரிய இளநிலை பொறியாளர் சுரேஷ்குமார் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

சூலூர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின் பாதையில் உள்ள டிரான்ஸ்பார்மரிலேயே காப்பர் ஒயர் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here