முதல்நாள் காட்சி-முன்களப்பணியாளர்களுக்கு..!

11

கோவை,
நவ 10,

தமிழக அரசின் நோய் தடுப்பு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.

திரையரங்கு செயல்பட அனுமதி அளித்த தமிழக அரசுக்கு திரைத்துறையினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

எட்டு மாதத்திற்கு பிறகு திறக்கப்படும் திரையரங்கில் புது படங்கள் வெளியாகாத நிலையில் முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்கள் வெளியாகின்றன.

கோவையில் கொரானா நோய் தொற்று பரவத் தொடங்கிய காலகட்டத்தில் முன்களப்பணியாளர்களான மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத் துறையினர், காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், போன்றோரின் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாட்டினால் கோவையில் நோய்த்தொற்று ஓரளவு குறைந்து இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் முன்களப்பணியாளர்களை பெருமைபடுத்தும் விதமாக செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் முதல் காட்சி அவர்களுக்காக கோவை ஃபுரூக் பீல்ட் மாலில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது. திரையரங்கிற்கு வந்த முன்கள பணியாளர்களை திரையரங்கு ஊழியர்கள் கைகளை தட்டி உற்சாகத்துடன் வரவேற்றனர்.

மேலும் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சினிமா பாடல்களுக்கு நடனமாடி வரவேற்று திரையரங்கின் உள் அழைத்துச் சென்று அமர வைத்தார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய திரையரங்கு மேலாளர் ஸ்ரீநாத் நோய் பரவல் காலத்தில் மன உளைச்சலுடன் நடுங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு தமிழக அரசின் நடவடிக்கைகளால் நோய்தொற்று குறைந்துள்ள இந்த நிலையில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்ததற்கு தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதுமட்டுமல்லாமல் நோய்த் தொற்று பரவும் காலத்தில் முன்கள பணியாளர்களாக இருந்து நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க பாடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் மருத்துவர்கள் காவல்துறையினர் மற்றும் நோய்த்தொற்று குறைபாடுகளுக்காக அவர்களை பெருமை சேர்க்கும் விதமாக செவ்வாய்க்கிழமை எங்கள் திரையரங்குகளில் முதல் காட்சியானது இலவசமாக திரையிடுகிறோம் என்றார்.

மேலும் திரைப்படம் பார்க்க வரும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசின் நோய்த்தடுப்பு வழிகாட்டுதலின்படி அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றபடுவதாக தெரிவித்தார்.

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here