முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோடு வருகைக்கு எதிர்ப்பு #GoBackStalin என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டிங்

13

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை, திருப்பூர், ஈரோடு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackStalin என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தினசரி பாதிப்பாக 31 ஆயிரத்தை கடந்து பதிவாகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய இடவசதி இன்றி பலர் இறக்கும் நிலை உருவாகியுள்ளது. தேசிய அளவில் இறப்பு விகித்தில் தமிழகம் இடம் பிடித்துள்ளது. அதே போன்று தமிழகத்தில் போதுமான தடுப்பு நடவடிக்கைகளில் திமுக அரசு கவனம் செலுத்தவில்லை என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது.

அதிலும் திருப்பூர், கோவை மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து வருகிறது. போதுமான ஆக்சிஜன் இன்றி பலர் இறந்து வருகின்றனர். மக்கள் நலனில் கவனம் செலுத்தாக திமுக அரசை கண்டித்து கோவை, திருப்பூர் மக்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர்.

செயல்படாத அரசாகவே உள்ளதாக பொதுமக்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு காரணமாக கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு வாக்களிக்காத கோபம்தான் என்று வெளிப்படையாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் அனைத்து மக்களுக்கும் முதல்வர் என்றுதான் பொறுப்பேற்றுள்ளார். ஆனால் கொங்கு மண்டலத்தில் அதிகாரிகள் மெத்தனப்போக்கு, ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாததே தொற்று எண்ணிக்கை பரவல் அதிகரிக்க காரணமாக விளங்கியுள்ளது.

இந்நிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குரித்து அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை நடத்துவதற்காக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டிங் செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த தமிழகமும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் நிலைமையை கண்டு அதிர்ச்சியடைந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

+1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here