மூன்று மாணவிகளின் மருத்துவக் கல்வி கட்டணத்தை ஏற்றது அரசு

மெடிக்கல்

தனியார் மருத்தவக் கல்லூரியில் சேர்ந்து கல்விக் கட்டண செலுத்த முடியாது என்பதால் ஒதுக்கீட்டு சேர்க்கை ஆணையை பெறாமல் சென்ற 3 ஏழை மாணவிகளின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்றது.

தனியார் மருத்துவக் கல்லூரியில் கட்டணம் செலுத்தி படிக்க போதிய பொருளாதார வசதி இல்லாத காரணத்தினால் கடந்த 19ஆம் தேதி வழங்கப்பட்ட ஒதுக்கீட்டு ஆணையை பெறாமல் சென்ற 3 ஏழை மாணவிகளின் கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்றதைத் தொடர்ந்து சேர்க்கை ஆணையை திங்கள்கிழமை வழங்கினர் சுகாதாரத்துறையினர்.

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்று தனியார் கல்லூரிகளைத் தேர்வு செய்த திருப்பூரைச் சேர்ந்த திவ்யா ஈரோட்டைச் சேர்ந்த கெளசிகா மற்றும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தாரணி ஆகிய மூன்று மாணவிகளும் தனியார் மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் கட்ட இயலாத காரணத்தால் ஒதுக்கீட்டு ஆணையை பெறாமலே சென்றுவிட்டனர்.

இதற்கிடையே 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த 3 மாணவிகளை தொடர்பு கொண்டு உடனே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் கட்டாமல் சேரலாம் என திருத்தப்பட்ட ஒதுக்கீட்டு ஆணையை திங்கள்கிழமை வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here