இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிறந்த ஆண்டில் காலடி எடுத்து வைத்திருப்பது தெரிகிறது. போன வருடம் முழுவதும் கொரோனாவால் பொருளாதாரம் பல வழிகளில் பாதித்த போதும், நான்கு முக்கிய நிறுவனங்கள் ஒன்பது மாதங்களில் (டிசம்பர் 2020 வரை) சுமார் 57,000 கோடி ரூபாய்க்கு மேல் நிகர லாபத்தை கண்டுள்ளது. அவை, டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (டி.சி.எஸ்), இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் மற்றும் விப்ரோ ஆகியவையாகும்.
வரும் மார்ச் 2021-க்குள் இது, 77,000 – 80,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என தெரிய வருகிறது. இந்த மகிழ்ச்சியான நிலை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வளவு திறமையான நிறுவனங்களினால் இந்தியாவிற்கு முழு பலனும் கிடைப்பதில்லை என்பது தான் நிதர்சனம். இந்த 4 முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களை போல பல நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் அனைவரும் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பல நாடுகளே. இந்திய வாடிக்கையாளர்களின் வளர்ச்சிக்காக பணியாற்றுபவர்கள் மிகக்குறைவே.
இந்த நான்கு முக்கிய நிறுவனங்களின் இந்திய பங்கு மதிப்பு, மொத்த வருவாயில் இருந்து 2-5 சதவிகிதம் மட்டுமே இருக்க வேண்டும்.
ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், மெஷின் லேர்னிங், குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற தொழில்நுட்ப மனித வளத்தை சார்ந்திருக்கும் நிறுவனங்களை நாம் கண்டு கொள்ளாமல் விட்டால், இந்நிறுவனங்களின் முழு பலன் நமக்கு கிடைக்காமல் போய்விடும்.
நாம் பங்குதாரர் நலன்களுக்கு மட்டுமே சேவை செய்யும்போது குறுகிய மற்றும் நடுத்தர லாபங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்.
இதை எப்படி மாற்றுவது?
ஒன்று, ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் போன்ற பொது மற்றும் தனியார் வளங்களை கொடுக்க, அரசாங்கம் ஒரு உயர் மட்ட நிறுவனத்தை உருவாக்க வேண்டும். இதற்கான முதலீடு, அணுசக்தி மற்றும் விண்வெளிக்காக நாம் செய்யும் முதலீட்டை போன்று இருக்க வேண்டும்.
அதாவது பார்க் அல்லது இஸ்ரோ போன்ற நிறுவனத்தை நாம் உருவாக்க வேண்டும். இதன் தளங்கள், தயாரிப்புகள், தொழில்நுட்பங்களுக்கு அரசு மற்றும் தனியார் பங்களிப்பு அவசியம் வேண்டும். இதற்கான காப்புரிமைகளை நம்மிடம் பெறலாம். ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எதிர்காலம் குறித்து ராஜிவ் மல்ஹோத்ரா எழுதிய அந்த புத்தகத்தில் இதை தெளிவாக விளக்கியுள்ளார்.
இரண்டாவது, நம் நோக்கம், உற்றுநோக்கும் திறன் மற்றும் விரிவுப்படுத்துதல் முயற்சி ஆகியவைக்கு நிதி ஒரு தடையாக இருக்கக்கூடாது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு 50,000 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்தார். இந்த நிதியுதவி 2019 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது அது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் கூறுகையில், “தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கான செலவினம் 5 ஆண்டுகளில் 50,000 கோடியாக இருக்கும். இது நாட்டின் ஒட்டுமொத்த ஆராய்ச்சி சுற்றுச்சூழலை பலப்படுத்துவதை உறுதி செய்யும்.” என்றும் கூறினார்.
முறைகளை அறிவிக்க 18 மாதங்கள் தேவைப்பட்டால், இந்த தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை முழுமையடைய இன்னும் காலம் ஆகலாம். இதன் முதற்கட்டமாக கட்டமைப்புக்கான இடம், பணியமர்த்தும் முறை, ஒதுக்கீடுகள் போன்றவற்றை முதலில் முடிக்கலாம். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பணிகள் நகர தொடங்கினால் குறிப்பிட்ட காலத்துக்குள் பணி முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புதுமைகளை ஊக்குவிக்க இது போன்ற அறக்கட்டளைகள் நம் நாட்டிற்கு அவசியம் தேவை தான்.
இன்றும் கூட, நிறுவனங்களுக்காக வகுக்கப்பட்ட சட்டங்களில் தேவையற்றவையும் உள்ளன. அவை நிறுவனங்களின் நிகர லாபத்தில் 2 சதவிகிதத்தை பெருநிறுவன சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) செலவிட கட்டாயப்படுத்துகின்றன.
பல நிறுவனங்கள் அரசு சாரா அமைப்புகளுக்காக தங்களின் பணத்தை செலவிடுகிறது. இதில் இந்தியாவின் பொருளாதாரத்தை பற்றி துளி அளவு கவலை இல்லாத அமைப்புகளும் உண்டு. இதை போன்றதோர் அமைப்பு தான் விவசாய போராட்டத்தை தூண்டி பணம் தந்தது என்றும் கூறப்பட்டது. இது போன்ற அமைப்புகள், இந்தியா சரிவின் பாதையில் செல்வதில் மிகுந்த சந்தோஷமடையும். அந்நிய நாட்டுக்காக உழைக்கும். வெளிநாட்டை சார்ந்த அமைப்புகளுக்கு நம்முடைய நாட்டின் பொருளாதாரத்தின் மீதோ கொரோனா சூழ்நிலையில் நம் நாடு நசுங்கி கிடப்பதை பற்றியோ கொஞ்சம் கூட கவலை இருக்காது.
இந்த 2% த்தை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் தயாரிப்புகள், தளங்கள், அதிநவீன மென்பொருள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். இது நம் நாட்டிலேயே தயாரிப்புகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் கிராம மற்றும் நகர்ப்புற இளைஞர்களை பணியில் அமர்த்திக்கொள்ள வாய்ப்பையும் இதன் மூலமாக வழங்க முடியும். டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல், விப்ரோ போன்ற நிறுவனங்களால் மானியம் வழங்கவும் முடியும்.
இந்த ஆண்டில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் நிகர லாபத்தில் 2% அதாவது 7,000-8,000 கோடிகள் கிடைக்கக்கூடும். அடுத்த ஒவ்வொரு ஆண்டும் இதே அளவிலான நிகர லாபமே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மருந்து நிறுவனங்களின் உழைப்பு இந்தியாவுக்கு பயன்பட வேண்டிய நேரம் இது.
குறிப்பாக ஐ.டி நிறுவனங்களை நாம் நிச்சயம் இலக்காக்க வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும்.