மோடி உரையில் பேசியது என்ன? தடுப்பூசியில் விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடு எப்படி?

113

பதிவுச்சுருக்கம் :

 • கொரோனா தடுப்பூசியை மத்திய அரசே ஏன் தயாரிக்கவில்லை?
 • ரஷ்யாவிடம் ஸ்பூட்னிக் மருந்தை குறைவாக பெறுவதற்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன?
 • கொரோனாவை வைத்து கோடீஸ்வரர் ஆகியவர்கள் எண்ணத்திற்கு மோடி எப்படி முட்டுக்கட்டை போட்டார்?

மோடி இந்தியாவின் புதிய தடுப்பூசி கொள்கையினை அறிவித்து நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் சொல்லியிருக்கும் விஷயங்கள் இவைதான்

முதலாவது இந்த அரசு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் கொரோனாவினை ஒழிக்க தீவிரமாக பாடுபட்டு கொண்டிருக்கின்றது, உற்பத்தி மிக மிக அதிகரிக்கபட்டிருப்பதால் விரைவில் எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்தபடும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இனி வழங்கபடும்.

இதுவரை மாநில அரசு செலுத்திய 25% மருந்துக்கான விலை அதாவது 50% மத்திய அரசு இலவசமாகவும் 25% மாநில அரசிடம் இருந்து சலுகை விலைபெற்றும் 25% தனியார் மருத்துவனையிடம் இருந்து விலைக்கும் கொடுத்தது

இனி 75% மத்திய அரசே இலவசமாக வழங்கும், மாநில அரசுகள் காசு செலுத்த வேண்டாம்

மோடி அறிவித்த மிக சிறந்த அறிவிப்பு இந்நாட்டு குழந்தைகளின் மீதான கொரோனா அச்சுறுத்தலை தடுக்க மூக்குவழியாக மருந்து செலுத்தும் திட்டம் ஆய்வில் இருக்கின்றது என்பது

கொரோனா தடுப்பு மற்றும் ஒழிப்பில் மோடியின் நடவடிக்கையில் மோடியின் செயல்பாடுகள் பற்றி சொல்வதாக இருந்தால், அவரின் நடவடிக்கைகளை கவனித்து சொல்வதாக இருந்தால் மிக மிக சிறந்த நடவடிக்கைகளை அவர் எடுத்தார்

முதலாவது இந்தியா 130 கோடி மக்களுக்கான சந்தை , இந்தியாவில் கொரோனா மருந்தை விற்றால் உலக கோடீஸ்வரனாகி 100 ஆண்டுகள் நிலைத்திருக்கலாம் என கனவோடு திரிந்த பைசர் முதலான அந்நிய நாட்டு கம்பெனிகளை இந்தியாவின் பணத்தை சுரண்டாமல் பார்த்து கொண்டார்

இந்தியாவினை தன் தளவாடங்களை விற்கும் சந்தையாக கருதிய ரஷ்யாவிடம் இருந்தும் இந்தியாவினை காத்தார், பெயருக்கு கொஞ்சம் ஸ்புட்னிக் மருந்தினை வாங்கி ரஷ்ய உறவினை எஸ் 400 போன்ற விவகாரங்களுக்காய் சாதுர்யமாய் கையாண்டார்

உலகில் முதன் முதலில் மருந்து கண்டறிந்தநாடு அவசரமாக தன் மக்களுக்கு செலுத்திய நாடு எனும் வகையில் தேசத்தினை முன்னிறுத்தினார்

இவ்விடத்தில் ஒரு கேள்வி எழலாம் மத்திய அரசே மருந்து தயாரிக்காமல் ஏன் தனியார் நிறுவணங்களிடம் இருந்து வாங்கியது என்பது

இதில் எந்த நாட்டு அரசும் சொந்தமாக தயாரிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது, காரணம் கொரோனா ஒன்றும் நிலையான வியாதி அல்ல, அதன் எதிர்காலம் தெரியாது

இந்நிலையில் நீண்டகால திட்டங்கள் என அரசு முதலீடுகளை செய்தால் அது கொரோனா திடீரென முடிந்துவிட்டால் பெரும் நஷ்டமாகும்

தற்காலிக நோய் என்பதால் தற்காலிகமாக தனியாரிடம் மருந்து வாங்குதலே சரி, அதுவும் உள்நாடு என்றால் வரி முதலியவற்றால் இன்னும் பலவற்றால் அரசு பணம் மிச்சமாகும்

அவ்வகையில் சாதுர்யமான நடவடிக்கையினை மேற்கொண்டார் மோடி

இதேதான் மிக‌ பெரும் வசதிகளுடன் பிரமாண்டமான கொரோனா கால‌ மருத்துவமனைகளை அமைப்பதும், மிகபெரிய மருத்துவமனைகளை அமைத்து கொரோனா காலம் முடிந்ததும் என்ன செய்ய முடியும்?

அரசு எதை செய்யவேண்டுமோ அதை செய்தது

மோடி எதிர்பாரா ஒரே விஷயம் இரண்டாம் அலையின் தாக்கம் மிக தீவிரமாக இருந்தது, இது எதிர்பார்த்தது என்றாலும் அதன் வீச்சு கணிப்புக்கு அப்பாற்பட்டு இருந்தது

மோடி அரசு மின்னல் வேகத்தில் களமிறங்கிற்று, வெளிநாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் உபகரணம் குவிக்கபட்டது, உள்ளூர் கம்பெனிகளின் ஆக்ஸிஜன் நோயாளிகளுக்கு திருப்பபட்டது, இந்திய ரானுவ விமானமும் கப்பல்களும் உலகெல்லாம் இருந்து கொண்டு வந்து தளவாடங்களை குவித்தன‌

இப்பொழுது நிலமை ஓரளவு கட்டுபட்டிருக்கின்றது

மோடி டி.ஆர்.டி.ஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிலையத்தை கொரோனாவுக்கு திருப்பிவிட்டார், அவர்கள்தான் இலகுரக ஆக்ஸிஜன் சிலிண்டர் முதல் சீனா முதலான நாடுகள் பயன்படுத்திய தூள் மருந்து அதாவது கலக்கி குடித்தால் கொரோனா நோயாளி நலம் பெற உதவும் மருந்தினை தயாரித்தார்கள்

அது நல்ல பலனளித்தது

இப்பொழுது 8 கம்பெனிகளை அசுரவேகத்தில் உற்பத்தி செய்ய சொல்லியிருக்கும் பிரதமர் இன்னும் ஓரிரு மாதத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோருக்கும் தடுப்பூசி என அறிவித்துவிட்டார்

அப்படியே மிக சில நாடுகளில் அல்லது ஓரிரு நாடுகளில் மட்டும் ஆய்வில் இருக்கும் குழந்தைகளுக்கான மருந்து, மூக்குவழியே செலுத்தும் மருந்து ஆய்வு வெற்றியின் படியில் இருப்பதாக அறிவித்திருக்கின்றார்

சுருக்கமாக சொன்னால் உலகின் மிகபெரிய வல்லரசுகளும், முன்னேறிய நாடுகளும் ஓடும் வேகத்திற்கு சற்றும் குறையமால் இந்தியாவினையும் இழுத்து கொண்டு ஓடுகின்றார் மோடி

நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்காமல் ஓரளவு இந்திய பொருளாதாரத்தை காத்து, கொரோனாவில் இருந்தும் மக்களை காக்க முழு அர்பணிப்புடன் போராடுகின்றது மோடி அரசு

நிச்சயம் அந்த அரசு மிக சரியான காரியங்களை மிகவும் தூய்மையான அர்பணிப்புடன் செய்கின்றது, வாழ்த்துக்கள்

தமிழ் இலக்கியம் எது நல்ல நாடு என்பதை தெளிவாக சொல்லும், நல்ல அரசன் ஆளும் நாடு எது என்பதை தெளிவாக சொல்லும்

அதாவது ஒரு நாட்டில் வெளிநாட்டிடம் கையேந்தாத அளவு உள்நாட்டு உற்பத்தி எல்லா வகையிலும் இருக்குமோ அந்நாடே நல்ல நாடு , அப்படி ஆள்பவனே நல்ல மன்னன்

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு” (குறள்.731)

“நீர்சான்று உயரவே நெல் உயரும் – சீர்சான்ற
தாவாக் குடிஉயரத் தாங்கு அருஞ்சீர்க் கோ உயர்தல்
ஓவாது உரைக்கும் உலகு” (சிறுபஞ்சமூலம்.44)

ஆம், இது உணவுக்கும் பொருந்தும் , மருந்துக்கும் பொருந்தும்

அவ்வகையில் மிக மிக நல்லாட்சி வழங்கி கொண்டிருக்கின்றார் பாரத பிரதமர்

கொடும் நோய் கொடுத்த உலகம் அதை காக்க இந்தியாவுக்கு முன்பே நல்ல தலைவனையும் கொடுத்தது காலகருணை

அமெரிக்க, சீன, ரஷ்ய அதிபரை போல் இரும்பு தலைவனை இங்கு கொடுத்துவிட்டுத்தான் காலம் கொரோனாவினை அனுமதித்தது

குழப்பமான அரசியலும் கோமாளிகளின் கூட்டணி ஆட்சியும் இப்பொழுது இருந்திருந்தால் என்னாயிருக்கும்?

ரஷ்ய, அமெரிக்க மருந்துகள் முழுக்க ஆக்கிரமிக்கும், ஆக்ஸிஜன் முதல் எல்லாவற்றுக்கும் இறக்குமதி செய்ய வேண்டி இருக்கும்

பின் சில நாட்கள் கழித்து “கொரோனா ஊழல்” என்றொரு பெரும் பூதம் கிளம்பும், அதில் இத்தாலி வணிகர்களும், இன்னும் ஏராளமான வெளிநாட்டு சர்ச்சை நபர்கள் பெயரும் அடிபடும்

பின் நாடு கொந்தளிக்கும், விசாரணை கமிஷன் அமைப்பார்கள், வெளிநாட்டு கமிஷன் கிடைக்க பெற்றபின் எல்லாம் அமைதியாகும்

நாடு அடுத்த 25 ஆண்டுகளுக்கு எழமுடியாமல் பெரும் வீழ்ச்சியினை சந்தித்திருக்கும்

காலம் உலகளாவிய நெருக்கடி காலத்தில் இரும்பு தலைவனை இந்தியாவுக்கு கொடுத்தது, சோழநாட்டை பகைவரிடம் இருந்து மீட்ட இரும்பிடர் தலையன் போல இரும்பு தலைவன் மோடி இத்தேசத்தை காத்து நிற்கின்றார்

அவன் ஆயுளுக்கும் பிரதமராக அமரவேண்டும், அவனின் கடைசி நொடி வரை இந்நாட்டுக்கு அப்பெருமகன் உழைக்க வேண்டும்

இந்திய பிரதமர்களில் அதி உன்னத பிரதமரை பெற்றிருக்கும் இத்தலைமுறை அப்பெருகமனின் நாட்டுபற்றையும் அயரா உழைப்பையும் காணும் பாக்கியம் பெற்றிருக்கின்றது

அந்த தலைவனிடம் இருந்து ஒவ்வொரு இந்தியனும் பாடம் கற்று கொள்ள வேண்டும், இந்தியன் என சொல்வதில் பெருமை அடையும் நேரம் இது

விரைவில் குழந்தைகளுக்கான தடுப்பு மருந்து உலகிலே முதல் முறையாக இந்தியாவில் அறிமுகபடுத்தபடும் அம்மருந்தை மோடி பெயரை சொல்லி குழந்தைகள் மூக்கில் ஊற்றி அந்த பெருமகனின் பெருமைகளை குழந்தைகள் மனதிலே பதியவைத்து நாட்டுபற்றை வளர்க்க வேண்டும்

வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்…

+1

2 COMMENTS

 1. மத்திய அரசின் நல்ல செயல்கள் பொது மக்களூக்கு தெரிவதில்லை மக்களை செய்தி சேர்க்கும் நியூஷ் குரு நன்றி…

  0
 2. உண்மை. ஓரு இரும்பு மனிதன் நம் பிரதமாராக இக்காலகட்டத்தில் இருப்பது மிகவும் பொருத்தமே.

  ஆனால், இப்படிபட்ட மோடியின் சாதனைகளை ஏன் தமிழக பாஜக எடுத்து சொல்லவில்லை. பெருந்தொற்று காலம் என்ற சாஜாப்புகள் வேண்டாம்.
  ஹிந்துத்வா கொள்கைகளை விட்டுவிட்டு மோடியின் சாதனைகளை சொல்லி நேர் மறையான பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்றால்தான், பாஜக இங்கு வளற முடியும்.

  0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here