மோடி இதுவரை சாதித்தது என்ன?

221
+3

இந்திய குடிமக்களுக்கு தேவையான வீட்டு வசதி, தண்ணீர் வசதி, சுகாதாரம், மின் வசதி, சுத்தமான சமையல் எரிபொருள் வசதி கிடைக்க மோடி அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. அதை இந்த 2020-21 பொருளாதார ஆய்வறிக்கையில் பார்க்கும்போது மனதுக்கு திருப்தியாக உள்ளது.

2012 மற்றும் 2018-க்கு இடைப்பட்ட காலத்தில் நம் நாடு பெரும் முன்னேற்றம் கண்டது மட்டுமல்லாமல், மாநிலங்களுக்கு இடையில், இந்த அடிப்படை வசதிகளை கேட்டு பெறுவதில் காணப்பட்ட ஏற்றத்தாழ்வையும் மறந்தது.

இந்த சர்வே ‘அத்தியாவசிய தேவை அட்டவணை’யை (2012-இல் 69-ஆவது மற்றும் 2018-இல் 76-ஆவது) அந்தந்த மாநிலத்துக்கு தகுந்தாற் போல் உருவாக்கியது.


நீர், சுகாதாரம், வீட்டு வசதி, வீட்டு வடிகால் அமைப்பு, வீட்டில் ஈ/கொசுக்கள் இருப்பு பற்றிய விவரம், சமையலறை, பாத்ரூம், காற்றோட்ட வசதி போன்ற மற்ற வசதிகளையும் கொண்டு 5 பரிணாமங்களில் ‘அத்தியாவசிய தேவை அட்டவணையை உருவாக்கியுள்ளது.

கிராம மற்றும் நகர்ப்புற இந்தியாவில் காணப்பட்ட மாற்றங்கள் இதோ,

இந்திய கிராமப்புறத்திற்கான ‘அத்தியாவசிய தேவை அட்டவணை’

இந்திய நகர்ப்புறத்திற்கான ‘அத்தியாவசிய தேவை அட்டவணை’

ஸ்வச் பாரத் திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, சௌபாக்யா திட்டம், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா ஆகிய திட்டங்கள் மூலமாகவே இது சாத்தியமானது.

இந்த திட்டங்கள் யாவும் ஏழையின் வாழ்க்கையில் ஒளியேற்ற கொண்டுவரப்பட்டதாகும். கணக்கெடுப்பின் படி, பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழ்வு இதனால் பயனடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2019 பொது தேர்தல் முடிவுகள் இதனை நிரூபித்தன.

இடைத்தரகர்கள் மூலமாகவே ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்துக்கொண்ட மோடி அரசாங்கம், ஏழைகளுக்காக 34 கோடி வங்கி கணக்குகளை திறந்தது.

9 கோடிக்கும் மேலான கழிப்பறைகள், 7 கோடி வீடுகளுக்கு மேல் பெற்ற சமையல் எரிவாயு இணைப்பு, 15 கோடி முத்ரா கடன்கள் வழங்கப்பட்டன. சுமார் 3 கோடி பயனாளிகள், தேசிய சுகாதார காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இவை அனைத்தும் லோக் சபா தேர்தலுக்கு முன்னால் செய்யப்பட்டவை ஆகும். தேர்தலுக்கு முன்பு, இடைக்கால பட்ஜெட்டில் 12 கோடி விவசாய குடும்பத்துக்கு ரூ.6000 தவணை முறையில் வழங்கவும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க 27 கோடி மக்கள் வாக்களித்ததற்கு இந்த திட்டங்களும் காரணம் தான். அதேபோல, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், பாலக்கோடு வான் வழி தாக்குதல், சீனாவுடனான மோதல் போன்றவை நம் தேசத்தின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஆக சிறந்த உதாரணமாகும்.

மோடியின் மென்மையான இந்துத்துவமும், தீவிரமான தேசபக்தியும், ஏழை மக்களின் வாழ்க்கை பிம்பமாகவும் இருந்ததால் அவரது கட்சிக்கு 303 சீட்டுகள் கிடைத்தன. ஆனால் இவற்றில் மறக்கக்கூடாதது அரசாங்கத்தில் இல்லாமலே அமித் ஷா ஆற்றிய பங்கு. இவர் கட்சியின் தளத்தை விரிவுப்படுத்துவதற்காக கடுமையாக உழைத்தார்.

2004ஆம் ஆண்டில் பா.ஜ.க-வின் தோல்வி குறித்து மோடி அவர்கள் கடுமையாக ஆய்வு செய்தார். தேசிய பாதுகாப்பு, இந்துத்துவம், ஏழை மக்களின் வாழ்க்கையை பற்றிய பார்வை போன்றவற்றில் கவனம் செலுத்த மறந்த வாஜ்பாய் – அத்வானி செய்த தவறை சரி செய்து தேர்தலில் மாபெரும் வெற்றிபெற எண்ணினார்.

மோடி ஏழைகளுக்காக மட்டுமே செய்கிறார் என்றல்ல. சீர்திருத்தங்கள் மூலமாக நாட்டின் பாதுகாப்புக்கும் மக்களின் சவுகரியத்துக்கும் ஒரு சில விஷயங்களை செய்தார். ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டு வரி ஏய்ப்பை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

ஆனால், இவை அனைத்தும் இமாலய எதிர்பார்ப்பை இந்திய மக்கள் மீது வைத்து எடுக்கப்பட்ட ஒரு தலைவரின் அதிரடி நடவடிக்கை என்பதை பலரும் உணரவில்லை.

அவருடைய இரண்டாவது பதிவிக்காலத்தின் முதல் பட்ஜெட்டுக்கு பிறகு மீண்டும் மௌனமாக இருந்தனர் எல்லோரும். ஆனாலும், குறை கூற வேண்டுமே. அதனால் இந்துத்துவம் என்பதை கையில் எடுத்து மீண்டும் குறைகள் கிளம்பின. ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான 370 பிரிவு சட்டம் நீக்கப்பட்டது. குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்துக்களுக்கு ஆதரவாக அயோத்தி வழக்கு அமைந்தது. அதனால் ராமர் கோவில் கட்டும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சீர்திருத்தங்களை செய்து வரும் மோடியை ஏனோ வெறுக்கின்றனர். முதலாவதாக கார்ப்பரேட் வரிகளை கருத்தில் கொண்டது மோடி அரசாங்கம். பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா, ஷிப்பிங் கார்ப்பரேஷன், கான்கோர் போன்ற முக்கிய பொது துறை பிரிவுகளை தனியார்மயமாக்கல் பணி நடந்துக்கொண்டு வருகிறது.

தற்போது, இரண்டு வங்கிகளும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனமும் எப்போதும் வளர்ந்துவரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. பணியமர்த்தல் மற்றும் பணி நீக்கம் குறித்த தொழிலாளர் சட்டங்களில் தளர்வு கொண்டுவரப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here