(யூரோ) கால்பந்து போட்டி இன்று இரவு தொடங்குகிறது.

உலக கோப்பைக்கு பிறகு மிகப்பெரிய கால்பந்து திருவிழாவான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (யூரோ) கால்பந்து போட்டி , நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடக்க இருந்த இந்தப் போட்டி கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தப் போட்டி இன்று தொடங்குகிறது. 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியான இந்த திருவிழா, ஜூலை 11 ஆம் தேதி வரை நடக்கிறது.

வழக்கமாக ஒன்றிரண்டு நாடுகள் இணைந்து போட்டியை நடத்துவது வழக்கம். ஆனால் இந்த கால்பந்து திருவிழாவை, முதல்முறையாக இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, டென்மார்க் உள்பட 11 நாடுகளில் இணைந்து நடத்துகிறது.

மொத்தம் 24 அணிகள் இதில் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளும், 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகளும் என மொத்தம் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். பின்னர் ரவுண்ட் 16-ல் இருந்து 8 அணிகள் காலிறுதிக்கு தேர்வாகும்.

ரோமில் இன்று நடக்கும் முதல் போட்டியில் இத்தாலி-துருக்கி அணிகள் மோதுகின்றன. ஸ்டேடியோ ஒலிம்பிகோ மைதானத்தில் இன்று இரவு 12.30 மணிக்கு போட்டி துவங்குகிறது. இரு நாடுகளும் இதுவரை 11 முறை மோதியுள்ளன. அதில், 8 போட்டிகளில் இத்தாலி வென்றுள்ளது. 3 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here