ரஜினிகாந்துக்கு கொரோனா நெகடிவ்..!

ரஜினி

ஹைதராபாத்:-

சிறுத்தை சிவா இயக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். வரும் டிசம்பர் 31ஆம் தேதி தனது கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவிருக்கும் ரஜினி அண்ணாத்த திரைப்படத்தின் வேலைகளை வேகமாக முடித்து விடும்படி படக்குழுவினரை கேட்டுக்கொண்டுள்ளார். 

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14-ந் தேதி ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. இந்த படப்பிடிப்பில் ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது.

இதில் ரஜினிக்கு கொரோனா நெகட்டிவ் என தகவல் வெளியாகியுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here