திருப்பூர் மாவட்டம் செஞ்சேரி பிரிவில் உள்ள குமரன் மஹாலில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழுவதும் நாம பஜனை நடைபெற்றது
அயோத்தியில் அமையவிருக்கும் ஸ்ரீ ராமர் ஆலயத்தை ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா என்னும் அமைப்பின் மூலம் பொதுமக்களிடம் நிதி திரட்டப்பட்டு கட்டப்பட்டு வருகிறது.உலகில் பல்வேறு பகுதியிலிருந்து மக்கள் ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு நிதியளித்து வருகின்றனர்.
நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் இந்நிகழ்வை விளக்கும் விதமாகவும் ராமர் ஆலயமாலயம் அமைவதில் உள்ளூர் மக்களின் பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக செஞ்சேரி ஸ்ரீ ராமபக்தர்கள் சார்பில் ஒரு நாள் முழுவதும் நாம பஜனை நடைபெற்றது.
காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஒரு நாள் முழுவதும் நாம பஜனையுடன், பிருந்தாவன நடன நாட்டியம், கோலாட்டம் ஆகியவற்றுடன் அயோத்தியில் ஸ்ரீராமபிரான் ஆலயம் சிறப்பாக அமைய வேண்டி பிரார்த்தனை செய்தனர்.