ராமேஸ்வரத்திலிருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு 613 கிலோ எடையுள்ள ‘பிரம்மாண்ட மணி’ வந்தடைந்தது!

Grand bell Ayodhya

செப்டம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் இருந்து ரத யாத்திரையாக கொண்டு செல்லப்பட்ட 613 கிலோ எடையுள்ள ஒரு பிரம்மாண்ட மணி கடந்த புதன்கிழமை அயோத்தியை அடைந்தது. இந்த மணி அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட உள்ளது.

இந்த பயணத்தை சென்னையைச் சேர்ந்த ‘சட்ட உரிமைகள் பேரவை’ ஏற்பாடு செய்தது.  இந்த பிரம்மாண்ட மணி 4.1 அடி உயரம் கொண்டது. அதில் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த 613 கிலோ மணி ஒலிக்கும் போது, ​​கோயில் நகரத்தின் 10 கி.மீ சுற்றளவில் ஒலி கேட்கப்படும். மேலும், மணியின் ஒலி ‘ஓம்’ என்ற நாதத்தை எதிரொலிக்கும். திரு. ராஜ்லக்ஷ்மி மாதா அவர்கள் ராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை 10 மாநிலங்கள் வழியாக 4,500 கி.மீ தூரத்தில் ராம் ரத்தை ஓட்டிச் சென்ற ஒப்படைத்துள்ளார்.

இந்த ராம ரதத்தில் ராமர், சீதா தேவி, சகோதரர் லக்ஷ்மன், விநாயகர் மற்றும் அனுமன் ஆகியோரின் வெண்கலத்தால் செய்யப்பட்ட சிலைகளையும் எடுத்துச் சென்றார்.

இதற்க்கு முன் 9.5 டன் எடையை இழுத்து உலக சாதனை படைத்த ராஜ்லக்ஷ்மி, புல்லட் ராணி என்று பிரபலமாக அறியப்படுகிறார்.

ராம் மந்திர் அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா, மஹந்த் தினேந்திர தாஸ் மற்றும் விம்லேந்திர மிஸ்ரா ஆகியோரின் முன்னிலையில் ராம் மந்திர் அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராயிடம் புதன்கிழமை பிரம்மாண்ட மணி மற்றும் சிலைகள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here