ரியல்மி நார்சோ 30 5ஜி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது

ரியல்மி நார்சோ 30 மற்றும் நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் மைக்ரோசைட் ஒன்று ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்கப்பட்டு இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களும் ஜூன் 24 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

 ரியல்மி நார்சோ 30 மாடல் மலேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இதன் 5ஜி வேரியண்ட் ஐரோப்பிய சந்தையில் அறிமுகமானது. 

ரியல்மி நார்சோ 30 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி  700 5ஜி பிராசஸர், புல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ், 2 எம்பி டெரிடரி சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here