ரிலீஸ் பேரறிவாளன் – ராப் பாடல் டிரென்டிங்கிள்

perarivalan

கோவை , நவம்பர் 20:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஆங்கர்லிங்க் பேரறிவாளன் விடுதலைக்கான விழிப்புணர்வு ராப் பாடல் கோவையில் வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்டது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் விடுதலைக்கான பாடல் வெளியீடு நிகழ்ச்சி கோவை வேலாண்டிபாளையமத்தில் நடைபெற்றது.

இதில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், திரைப்பட இயக்குநர்கள் பொன்வண்ணன், மிஷ்கின், வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், ராஜூ முருகன், நவீன், நடிகர்கள் சத்தியராஜ், விஜய்சேதுபதி, சமுத்திரகனி, விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் இணையதளம் வயிலாக பங்கேற்றனர்.

இதற்கிடையே  ‘தாய் மனம் ஏங்குது’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. இதையடுத்து இணையதளம் வாயிலாக பேசிய அற்புதம்மாள், பேரறிவாளன் மற்றும் அவரது தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது எனவும், வயதான காலத்தில் எங்களது மகன் எங்களுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறோம் எனவும் தெரிவித்தார்.

முதலமைச்சர் நினைத்தால் பேரறிவாளனுக்கு எவ்வளவு மாதங்கள் வேண்டுமானாலும் பரோல் வழங்க முடியும் எனவும், எழுவர் விடுதலை குறித்து அரசு பலமுறை சொல்லியும், நடைமுறைக்கு வரவில்லை எனவும் கூறிய அவர், பேரறிவாளன் விடுதலைக்கு துணை நிற்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இணையதளம் வாயிலாக நடிகர் பொன்வண்ணன் கூறுகையில்: பேரறிவாளன் குற்றம் செய்திருந்தாலும் இல்லையென்றாலும் 30 ஆண்டு காலம் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டார் என்ற அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய இயக்குநர் ராஜூ முருகன், பேரறிவாளன் நிரபராதி என்பது சாதாரண மக்கள் வரை சென்று சேர்ந்துள்ளது. பேரறிவாளனின் நீதியை தாமதிக்காமல் ஆளுநர் விடுதலைக்கு கையெழுத்திட வேண்டும். தமிழக அரசு ஆளுநருக்கு அழுத்தத்தை தந்து பேரறிவாளன் விடுதலையை சாத்தியப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

இது குறித்து பேசிய நடிகர் சத்தியராஜ், பேரறிவாளன் விடுதலைக்கு எல்லா விதமான சாத்தியக்கூறுகளும் உள்ளது. எழுவர் விடுதலைக்காக தமிழ் சமூகம் காத்திருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, உச்சநீதிமன்றம் அளித்த நீதியை காப்பாற்றும் அவசியம் ஆளுநருக்கு உள்ளது இதனை தமிழக அரசு எடுத்து சொல்ல வேண்டும். பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், தண்டனை காலம் முடிந்த பிறகும் பேரறிவாளனை விடுதலை செய்யாமல் இருப்பது கவலையளிக்கிறது. விசாரணை அதிகாரியே நிரபராதி என்ற சொன்ன பிறகும் அரசியல் காரணங்களுக்காக தாமதிப்பது கவலையளிக்கிறது. தமிழக அரசு பேரறிவாளன் விடுதலையை துரிதப்படுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here