ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசு..! என்னவா இருக்கும் ?

ஜிவ்

ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான புத்தாண்டு பரிசை அறிவித்துள்ளது அது என்னவென்றால் , மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைத்தால் விதிக்கப்பட்ட கட்டணம் ரத்து செய்துள்ளதாகவும், இனி எல்லா அழைப்புகளையும் இலவசமாக மேற்கொள்ளலாம் என்றும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது நாளை ஜனவரி 1,2021 முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியாவின் அதிவேக 4ஜி சேவை வழங்கும் நெட்வொர்க்கான ரிலையன்ஸ் ஜியோ, குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில், மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைக்க interconnect usage charges (IUC) வசூலிக்கப்படுவதால், அதற்காக நிமிடத்திற்கு 6 காசுகள் வீதம் மற்ற அழைப்புகளை மேற்கொள்ளும்போது வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், அந்த கட்டணத்துக்கு ஈடாக நெட் டேட்டா வழங்கியது.

தற்போது, ஜனவரி 1 முதல், மற்ற நெட்வொர்க்குக்கான அழைப்பு கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இனி ஜியோ வாடிக்கையாளர்கள் தடையில்லாத அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்று ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஜியோ வாடிக்கையாளர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here