‘வங்கம் இழந்ததை நாங்கள் மீட்டு தருகிறோம்- பிரதமர் மோடி’

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டங்களுக்கு கிடைக்கும் பிரமாண்ட வரவேற்பு, அம்மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று நிரூபித்துள்ளது. வெறும் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் என்று மக்கள் கருதாமல் மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் புரட்சி என்ற எண்ணத்தில் அலை அலையாக திரளுகின்றனர். இது திரிணாமுல், இடதுசாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரவேற்பை கண்ட மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சி அமைவதை தடுக்க இடதுசாரிகள் தனக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அளவிற்கு கீழே இறங்கிவிட்டார். மோடியின் ஆக்கப்பூர்வமான பேச்சையும், மம்தா பானர்ஜியின் அடவாடி பேச்சையும் ஒப்பிட்டு அம்மாநில மக்கள் பேசிக் கொள்ளும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

மாற்றம் என்று மோடி கூறிய வார்த்தை, வங்கத்தில் வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, அரசியல் கலாச்சாரத்தையும் மாற்றி, கொல்கத்தாவை எதிர்காலத்திற்கு தயார்படுத்தியுள்ளது.

நரேந்திர மோடியின் உரையில், நம் நாடு சுதந்திரம் அடைந்ததற்கு வங்காளத்தின் பங்கு என்ன என்பதையும், பல்லாயிரக்கணக்கான தியாகங்களையும், வங்காள மண்ணில் உருவான ஹீரோக்களையும் அவர் பாராட்டி பேசினார்.

வங்காளம், சமஸ்கிருதத்தின் பெருமையை உலகறிய செய்துள்ளது. இந்திய சுதந்திரத்திற்காக வங்காளம் பல உயிர்களை தியாகம் செய்துள்ளது. அறிவியல் மற்றும் அறிவு சார்ந்த விஷயங்களில் வங்காளம் பலருக்கு முன்னோடியாக சிறந்து விளங்குகிறது என அவர் பெருமித்துடன் பேசினார்.

கொல்கத்தா, நாட்டிற்கே உத்வேகம் அளிக்கிறது எனவும் அவர் பெருமைப்பட்டார். மேற்கு வங்கத்தின் கலாச்சாரத்தை தான் பாதுகாப்பதாகவும், மாநிலம் மீண்டும் பிறந்து புத்துணர்வு பெற பா.ஜ.க சிறப்பாக செயலாற்றும் எனவும் சபதம் செய்தார். இதனால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் தங்களுடைய வாழ்க்கையில் புது மறுமலர்ச்சி பிறக்குமென கொல்கத்தா மக்கள் நம்புகின்றனர்.

தேச ஒற்றுமைக்காக பாடுபட்ட ஷியாமா பிரசாத் முகர்ஜி போன்ற வங்கம் தந்த தலைவர்களை இதுவரை வங்கத்தை ஆட்சி செய்த கட்சிகள் மக்கள் மனதிலிருந்து மறக்கடிக்க முயற்சித்து வந்திருக்கின்றனர் அவர் குறித்தும்,
சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்றோர் குறித்தும் பிரதமர் பேசினார்.

ஒவ்வொரு வங்காள மக்களும் சுயமாக முடிவெடுக்க வேண்டிய நேரமிது. இதற்கு முன்பு மேற்கு வங்கம் எப்படி இருந்தது என்றும், இப்போது எப்படி இருக்கிறது என்றும் யோசித்து முடிவெடுக்க வேண்டிய நேரமிது. இந்தியா, இதுவரை கண்டிராத பல சிறந்த ஹீரோக்களை வங்கத்தில் உருவாக்கியுள்ளது. உலகமே வியந்து பார்த்தது வங்க மண்ணை என மோடி பெருமிதம் பொங்க பேசினார்.

ஆனால், சுதந்திரத்துக்கு பிறகு, வங்காளம் சூழ்ச்சிகளால் வீழ்ச்சி அடைந்தது என்பதை யாராலும் மறக்க முடியாது. மற்ற மாநிலங்கள் முன்னேறி செல்ல வங்காளமோ அப்படியே இருந்தது. ஒரு காலத்தில் இந்தியாவின் வளர்ச்சியில் முதன்மையாக இருந்த வங்காளம், இன்று அரசியல் சூழ்ச்சியால் அடியோடு வீழ்ந்துள்ளது என்று கூறிய பிரதமர் மோடி, இதை மாற்ற பிரதமர் நரேந்திர மோடி வங்காளம் இழந்ததை நாங்கள் மீட்டு தருகிறோம் என்று உறுதியளித்தார்.

‘மாற்றம்’ என்ற ஒற்றை வார்த்தையை வைத்து மம்தாவின் அரசியல் ஆட்டத்துக்கு முடிவுரை எழுதி வருகிறார் பிரதமர் மோடி. மொழியியல் மற்றும் பிராந்திய பேரினவாதம் வங்காள மக்களிடம் காண வாய்ப்பில்லை. அதனால், மாற்றம் என்ற ஒன்றை நிச்சயம் வங்காள மக்களும் ஏற்றுக்கொள்வர் என்பதே எல்லோருடைய கருத்தாக உள்ளது.

Source : Swarajya

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here