வடகிழக்கு திசை நோக்கி நின்று பல் விளக்க வேண்டும் என்று கூறுவதுண்டு. பல் தேய்ப்பதற்கும் விதிமுறைகளுண்டா என்றும், எப்படி நின்று தேய்த்தாலும் பால்வெளுக்ககுதா என்றும் கேட்பதுண்டு.
ஆனால் இதற்குப் பின்னால் எதுவும் இல்லாமல் நம் முன்னோர்கள் இப்படி விதி அமைக்க மாட்டார்கள் என்பதும் இக்காலத்தில் அனேகர் ஓப்புக்கொள்ளவர்.
பண்டைக்காலத்தில் இன்றுள்ளது போல் பல் சுத்தம் செய்ய பற்பசைகைள் பயன்படுத்தவில்லை. மாவிலை, வேப்பிலை,உமிக்கரி,ஆயுர்வேத பற்பொடி முதலியவை உபயோகித்து பல்துலக்கி வந்தனர்.இதில் வேப்பிலை,மாவிலை என்பவை நோயணுக்களை ஆழிக்கும் சக்தியுடையது என்று நாம் அறிவோம்.
அதுபோலவே உமிக்கரியும் சுத்தம் செய்ய சக்தி வாயந்ததே ,பற்பொடிகளில் கலந்திருக்கும் மூலிகைகளும் ஆணு நாசம் செய்யும் குணம் படைத்தவையே.
சூரியன் உதிக்கும் முன் கிழக்கும் திசையையும் அதற்குப்பின் வடகிழக்கு திசையையும் பார்த்து நின்று பல் துலக்க வேண்டும். மட்டுமல்ல எதிலும் இறைவனை தரிசிப்பதும் எதற்கும் இறைவனை தியானிப்பதும் வசஸ்பதியையும் நினைத்து பல் துலக்கி வந்தனர்.
பல்துலக்குவதில் கூட விதிமுறைகளைக் கடைபிடித்திருந்த ஓர் தலைமுறையை சில பிரதசித்து மக்கள் இன்றும் பின்தொடர்ந்து வாழ்கின்றனர்.