வாரணாசி பிரதமர் அலுவலகத்தை 7.50 கோடிக்கு விற்க முயற்சி …!

பமோ

லக்னோ, டிசம்பர் 19

பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்றார். பிதமர் மோடியின் தொகுதி அலுவலகம் வாரணாசியின் ஜவகர் நகர் பகுதியில் உள்ளது. 6 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவை கொண்டது அந்த கட்டிடம்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி அலுவலக கட்டிடத்தை புகைப்படம் எடுத்த ஒரு கும்பல் அந்த புகைப்படத்தை ஆன்லைன் விற்பனை தளமான ஒ.எல்.எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

மேலும், இந்த கட்டிடம் விற்பனைக்கு உள்ளது எனவும் அதன் விலை 7 கோடியே 50 லட்சம் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடியின் வாரணாசி தொகுதி அலுவலக கட்டிடம் விற்பனைக்கு என ஆன்லைனில் புகைப்படம் பதிவிடப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து உத்தரபிரதேச போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் அலுவலக கட்டிட புகைப்படத்தை ஆன்லைன் விற்பனை தளத்தில் பதிவேற்றம் செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி அலுவலக கட்டிடத்தை ஒ.எல்.எக்ஸ். வலைதளத்தில் விற்பனை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here