விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்…

விவசாயி \

டெல்லி, டிசம்பர் 01:

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்பாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோருடன் செவ்வாய்க்கிழமை அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளின் போராட்டம் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் 6ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதற்கிடையே டெல்லி-உத்தரப்பிரதேச எல்லையான காசிப்பூர்-காஜியாபாத் பகுதியில் ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்புகளை டிராக்டர் மூலம் உடைத்துக் கொண்டு டெல்லி நோக்கி வருகின்றனர் இன்னும் சில விவசாயிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here