வீட்டின் நிலை வாசலில் மாவிலை தோரணம் எதற்கு.?

மாவிலை

வீட்டின் நிலை வாசலில் உட்கா௫வது, உண்பது, நிலை வாசலில் நின்று காணிக்கை செலுத்துவது போன்றவைகள் செய்யக்கூடாது என நம் முன்னோர்கள் அா்த்தத்தோடு தான் கூறியி௫க்கிறாா்கள். நிலை வாசலில் வெள்ளி, செவ்வாய் அன்று விளக்கேற்ற வேண்டும்.

அவ்வப்போது லஷ்மி வீட்டிற்குள் வரும் நேரம் நிலை வாசலில் அமா்ந்தோ அல்லது படுக்கவோ கூடாது. ஏனென்றால் வ௫ம் லஷ்மி வீட்டிற்குள் நுழையாது.மேலும் மஞ்சள், குங்குமம் இட்டு மாவிலை தோரணம் கட்டி அலங்காரம் செய்வது வீட்டிற்குள் லஷ்மி கடாட்சம் உண்டாகும் என்பதற்கு செய்யக் கூடியவை.எனவே, நிலை வாசலில் அமர்ந்து சாப்பிடுவது, படுத்து உறங்குவது போன்றவைகளை செய்யாதீர்கள்.

வீட்டு வாசல் புறத்தில் மாவிலையை தோரணமாக கட்டுவதன் மூலம் புதிய இல்லத்தின் கிரகபிரவேசம் நிகழ்ச்சியாயிருந்தாலும் வீட்டிற்க்குள் அதிகமாக மக்கள்  குழுமி இருக்கும் நேரத்தில் வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடை நீக்கி பிராண வாயுவை வெளியேற்றிய வண்ணம் உள்ளது.

 ‘மாவிலை’ கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவைக் கொடுக்கும். நம் உடம்பின் வியர்வை நாற்றத்தையும், காற்றில் ஆவியாகிப்  பரவியிருக்கிற கிருமிகளையும், வாசலிலேயே தடுத்து அழித்து விடும். மாவிலை காற்றை சுதம் செய்து தூய்மைபடுத்தி புதிய உற்சாகத்தை கொடுக்கும் அதே வேளையில் மஞ்சள் பொடி கொண்டு போட்டு வைப்பது வீட்டினுள் சிறிய சிறிய பூச்சிகளும் விஷ ஜந்துகளும் வரா வண்ணம் தடுக்கின்றது.

மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதாலும் மாவிலையும் மஞ்சளும் வீட்டிற்க்கு களை சேர்ப்பதுடன் நம்மை பாதுக்காக்கவும் செய்கின்றன. மேலும் கலசங்களில் மாவிலை வைக்க படுகின்றது. சில சமயம் கலசத்தில் வைக்கப்படும் நீரில் வெட்டிவேர், ஏலக்காய், கிராம்பு, சந்தன எண்ணெய், மஞ்சள் பொடி போன்றவை சேர்க்க படும். மாவிலைக்கு நீரில் உள்ள கிருமிகளை நாசம் செய்யும் சக்தி உண்டு.

அது கலச நீரை தூய்மை படுத்தி அதிக அளவு ஆக்சிஜன்  வெளியிட்டு கொண்டிருக்கும். பல விதமான மக்கள் கூடும் விசேஷங்களில் எதிர்மறையான சக்திகளை களைந்து நல்ல ஆரோகியமான சூழல் ஏற்படுத்தும் சக்தி மாவிலைக்கு உள்ளது. எனவே தான் நமது முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே இத்தகைய அறிவியலை கடைபிடித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here