வெள்ளை நிற ஜெர்சி அணியும் பெருமைமிக்க தருணம் – நடராஜன்

நடராஜன்

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜன், டெஸ்ட் அணியின் சீருடையை அணிந்து அதன் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்துவரும் வீரரான தமிழகத்தை சேர்ந்த நடராசன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது :-
வெள்ளை நிற ஜெர்சி அணியும் பெருமைமிக்க தருணம் அடுத்த சவால்களுக்கு தயார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் சீருடையை அணிந்து அதன் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் நடராஜன். வெள்ளைச் சீருடையை அணிவது பெருமிதமான தருணம்.

அடுத்தக்கட்ட சவால்களுக்குத் தயாராக உள்ளேன் என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் நடராஜனுக்கு வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here