‘வேல் ஏந்தும் ரகசியம்- அம்பலமாகிறது திமுக கூட்டணி’

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு விசித்திர நிகழ்வை காண முடிகிறது. 

இந்து விரோத கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு முருகனின் வேலை தங்கள் கட்சி பிரச்சார மேடைகளில் வாங்கி அந்த புகைபடங்களை தங்கள் பத்திரிகைகளில் தங்களுக்கு வேண்டிய ஊடகங்களில் போடுகின்றனர். இந்து மதத்தையும் அதில் பெண்கள் குறித்து சொல்லப்படாத கருத்துகளை ஆபாசமாக பேசியும் அரசியல் செய்யும் திருமாவளவன் முதல் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லக் கூட திராணியில்லாத சுடாலின் வரை இந்த வேலைத் தூக்கும் வேலையை செய்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிகள் காட்டும் விஷயங்கள் குறித்து வாக்காளர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

ஏன் இந்த மேடையில் வேல் வாங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன?

இந்துக்கள் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டு வருகிறார்கள். அவர்களை மத ரீதியாக சீண்டுவது என்பது நிச்சயமாக பிரச்சனைகளை உருவாக்கும்.  ஓட்டுக்களை இழக்க வேண்டி இருக்கும். எனவே தம்மை இந்து மத நம்பிக்கை உள்ளவராக காட்ட வேண்டிய அவசியம் உள்ளது. எனவே மேடையில் நிகழ்த்தப்படும் இந்த வேல் வாங்கும் நிகழ்ச்சிகள்.

அப்படி என்றால் திராவிட கட்சிகள், இந்து விரோத திருமா போன்றவர்கள் திருந்திவிட்டார்களா? குறைந்த பட்சம் ஓட்டுகளுக்காகவாவது இந்து விரோதத்தை கை விட்டுவிட்டார்களா?

இல்லை.

இங்குதான் இந்து வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்து களப்பணியாளர்கள் மெத்தனம் அடைந்துவிடலாகாது.

இந்த தேர்தல் இந்து விரோத கூட்டணியான காங்கிரஸ்-கம்யூனிஸ்ட்-திமுக-விசிகவுக்கு வாழ்வா சாவா என்கிற போராட்டம். இன்று ஜெயலலிதா இல்லை. அதிமுகவில் வலிமையான தலைவர் இல்லை என அது கணக்கு போட்டது. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  இத்தனை திறமையாக ஐந்து ஆண்டுகளையும் பூர்த்தி செய்வார் என அது எதிர்பார்க்கவில்லை. பொதுவாக மக்கள் மத்தியில் அரசுக்கு நல்ல பெயர் இருக்கிறது.  தொடக்கத்தில் திமுகவுக்கு இருந்த சாதகமான நிலை கூட ஒவ்வொரு நாளும் மெல்ல மெல்ல கரைந்து வருகிறது. இந்நிலையில்  எந்த அளவிலும் வாக்குகள் இழப்பு என்பது பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். அவற்றை சிதறவிட கூடாது என்பதால் இந்த வெளிவேடங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

பாஜக அதே நேரத்தில் திடீரென்று அதிக வேகத்துடன் இயங்குகிறது. கறுப்பர் கூட்டம் என்கிற இந்து விரோத ஆபாச கும்பலுக்கு ஒட்டுமொத்த இந்து சமுதாயம் தமிழ்நாட்டில் மிகவும் கட்டுப்பாடாக வலிமையாக தம் எதிர்ப்பை காட்டியது.  எதிர்பாராத பிரபலங்களும் அதில் கலந்து கொண்டனர். அரசியல் ரீதியாக இந்த எதிர்ப்பை தெள்ளத் தெளிவாக சொன்னது – சொல்ல முடிந்தது பாஜகவுக்கு மட்டும்தான்.  அத்துடன் பாஜகவின் தமிழ்நாட்டு தலைவராக   பொறுப்பேற்றிருக்கும் முருகன், வேல் யாத்திரை மூலம் தமிழ்நாட்டில் ஒரு தாமரை எழுச்சியைக் காட்டியிருக்கிறார்.

எனவே திராவிட, க்ரிப்டோ தலித்திய கட்சிகள் தங்கள் இந்து விரோதத்தை வெளிப்படையாக காட்ட முடியாத இடத்தில் உள்ளன.

இந்த இடத்திலிருந்துதான் அவற்றின் சகுனித்தனம் ஆரம்பிக்கிறது.

கோவில்களில் வேலை செய்யும் சில பிராம்மணர்களை பூர்ண கும்ப மரியாதை செய்ய சொல்லி அவற்றை காமிராக்களின் முன்னால் மறுப்பது ஒருபக்கம். மற்றொரு பக்கம்  தருமபுர ஆதீனத்தை சென்று சந்திப்பது. சமூக ஊடகங்களில் தாம் பிராம்மணியத்தை எதிர்ப்பதாகவும் தருமை ஆதீனம் போன்ற பாரம்பரிய சைவமடங்களைத் தாம் தமிழ் மடங்களாக பார்ப்பதாகவும் தம் பிரச்சார கும்பலைக் கொண்டு கருத்துகளை பரப்புவது.

இந்துக்களை வெளிப்படையாக ஆபாசமாக பேசி வெறுப்பை கக்க முடியாத போது இந்துக்களை பிரித்து ஏமாற்றும் சூழ்ச்சியை திமுக செய்கிறது.

வேல் விஷயத்தில் மற்றொரு விஷமத்தனமும் அடங்கி இருக்கிறது.

கிறிஸ்தவ மதமாற்ற நோக்கத்துடன் இந்து மதத்தை அழிக்கும் எண்ணத்துடன் உருவாக்கப்பட்ட ‘ tடிட்ஞு ஞணிட்ஞ’ திராவிட இயக்கம் என்பது மிஷினரிகளே தங்கள் புத்தகங்களில் ஒத்து கொண்ட உண்மை.

ஆனால் திராவிட இயக்கம் ஒரு கட்டத்தில் சனாதன தர்மத்தின் முன் மண்ணை கவ்வியது.  அதற்கு காரணம் அன்று தமிழ்நாட்டில் திருமுருக கிருபானந்த வாரியார் தொடங்கி தவத்திரு சித்பவானந்த சுவாமிகள் வரை தொடர்ந்து திராவிட இயக்கத்துக்கு தகுந்த பதிலடி கொடுத்து உழைத்தனர். இதனால் திமுக தோற்கடிக்கப்பட்டு இந்து விரோத போக்கு இல்லாத, இன்னும் சொன்னால் இந்து ஆதரவு மனப்பாங்கு கொண்ட எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தார். அவர் இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு அவரே மன்னர்.

இன்றைக்கும் பொது தமிழ் மனதில் எம்.ஜி.ஆர். கதாநாயகன் கருணாநிதி வில்லன். 

(இந்த உள்ளோட்டமான மனப்போக்கை மணி ரத்தினம் கூட உணர்ந்திருக்க வேண்டும். ‘இருவர்’ படத்தில் பொதுவாக வில்லன் நடிகரான திரு, பிரகாஷ் ராஜை கருணாநிதிக்கு நிகரான கதாப்பாத்திரத்திலும் கதாநாயக நடிகரான திரு. மோகன்லாலை எம்.ஜி.ஆரின் நிகர் பாத்திரத்திலும் பயன்படுத்தியிருப்பதை கவனிக்கவும்.)

சுருக்கமாக சொன்னால் திராவிட இயக்கத்தின் முக்கிய போக்கு இந்து விரோத போக்கிலிருந்து விலக ஆரம்பித்தது. திராவிட இயக்க பரம்பரை அதிகார குடும்பங்களால் நடத்தப்படும் சன் டிவியில் கூட ராமாயணம், மகாபாரதம், அனுமான் என தொலைகாட்சி தொடர்கள் காட்டப்பட்டன.

திராவிட இயக்கத்தை திட்டமிட்ட இந்து விரோத சக்திகள் இந்த மாற்றங்களை கூர்ந்து பார்த்து வந்தனர். அவர்களுக்கு இது முக்கியமான பாடம்.

தமிழர்களின் இந்து சமயப்பண்பாட்டை அழிக்க முடியாது என்றால் என்ன செய்யலாம்?

அவர்களின் அடுத்த திட்டமாக அமைந்தது திருதாஷ்டிர ஆலிங்கனம்.

இந்து பண்பாட்டையும் ஆன்மிகத்தையும் அழிக்க முடியவில்லை என்றால் அதனை அப்படியே கபளீகரம் செய்துவிட்டால் என்ன? எதிர்த்து அழிக்க முடியாததை அரவணைத்து அழிக்க வேண்டும்.

அந்த நோக்கத்துடன் களமிறக்கப்பட்டவர்தான் சீமான் என்கிற சைமன். முருகன் என் முப்பாட்டன், சிவன் என் முன்னோர், கொற்றவை என் அப்பாத்தா என்பது போன்ற அக்மார்க் உளறல்களுக்கு பின்னால் ஒரு ஆபத்தான செயல் திட்டம் இருக்கிறது. இந்து ஆன்மிகத்தை முன்னோர் வழிபாடு நீத்தார் வழிபாடு என மாற்றுவது.

’பிறவாயாக்கை பெரியோனான சிவபெருமானும்’ ‘உதியா மரியா’ முருக பெருமானும் மானுட முன்னோரல்ல என்பதுதான் நம் மரபு. தமிழர்களின் மரபு. நம் ஆன்மிக பாரம்பரியம். ஆனால் உதியா மரியா முருகனை உதித்து மரிக்கும் பின்னர் எழும் மரியாள் புதல்வனைக் காட்டிலும் கீழாக மாற்றி தொல் பழங்கால முன்னோர் என சொல்வது எப்படிப்பட்ட பித்தலாட்டம்!

இப்போது சீமானின் இந்த பித்தலாட்டத்தையேதான் திமுகவும் விசிகவும் கையில் எடுத்திருக்கின்றன.

‘வெற்றிவேல் வீரவேல்’ என்கிற தலைப்பில் முரசொலியில் உசுடாலின் வேலை வாங்கியதற்கு ஒரு விளக்கக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அக்கட்டுரையில் வேல் என்பது வேந்தர்களின் சின்னமே ஒழிய அது முருகனுக்கு மட்டுமானது அல்ல என சொல்லப்பட்டிருந்தது.

காலம் காலமாக தமிழர்களின் ஆன்மிக மரபில் வேல் என்பது ஞானத்தின் வடிவம். பாசத்திலிருந்து பசுவை விடுவிக்கும் பதி அறிவே வேல்.  அபரிமித சுருதிகளும் அடங்கும் தனிப்பொருளை மௌன மந்திரமாக உபதேசித்த பரம்பொருளின் திருக்கை வேல் குறித்து திருமுருகாற்றுப்படையிலும் நாம் காணலாம் சிலப்பதிகாரத்திலும் நாம் காணலாம்.

முருகன் திருக்கை வேல் குறித்து இளங்கோ அடிகள் உருகி உருகி தம் காவியத்தில் பாடியிருக்கிறார்:

சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்

ஏரகமும் நீக்கா இறைவன் கைவேல் அன்றே

அணிமுகங்கள் ஓர் ஆறும் ஈர் ஆறு கையும்

இணை இன்றித் தான் உடையான் ஏந்திய வேல் அன்றே

பிணிமுகம் மேற்கொண்டு அவுணர் பீடு அழியும் வண்ணம்

மணி விசும்பின் கோன் ஏத்த மாறு அட்ட வெள்வேலே

சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்

திருமுலைப் பால் உண்டான் திருக்கை வேல் அன்றே…

இந்த வேலை தமிழ் மக்கள் மனதில் முருகனிடமிருந்து நீக்கி மடைமாற்றம் செய்கிறார்கள் திமுக விசிகவினர். மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பண்பாட்டு அழிப்பை திமுகவினர் செய்கிறார்கள்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். ஒன்று இந்துக்களை ‘நாங்கள் இந்து எதிரி அல்ல’ என ஏமாற்றுவது இரண்டு இந்து ஆன்மிகத்தின் மகத்தான ஒரு சின்னத்தை இந்து தர்ம நீக்கம் செய்வது. கறுப்பர் கூட்டம் செய்ததற்கும் திமுகவும், விசிகவும் நடத்தும் வேல் வாங்கு மேடை நாடகங்களுக்கும் எந்த வித வேறுபாடும் கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாளைக்கு திமுக ஆட்சிக்கு வரும் என்கிற நடக்க வாய்பில்லாத நடக்கக் கூடாத அசம்பாவிதத்தில் பண்பாட்டு விஷயங்களில் கழுத்தை நெரிக்கும் தீய சக்தியாக எழப் போவது திராவிட ரஸ்புதீனான ஜகத் காஸ்பர் என்கிற கத்தோலிக்க சூழ்ச்சியாளர்தான். இந்து மதமே தோமாவினால் வந்தது என்கிற போலி வரலாற்று மோசடி கத்தோலிக்க சபையால் இங்கு முன்னெடுக்கப்படும் ஒரு விஷயம். தமிழ் பண்பாட்டை இந்து மதத்திலிருந்து வெட்டி எடுப்பது இந்த மதமாற்ற வியூகத்தில் முக்கியமான ஒரு படி. அதனை செய்யும் மதமாற்ற ஏவலாட்படைதான் திராவிட முன்னேற்ற கழகம்.

அந்த வியூகத்தின் ஒரு பகுதிதான் இந்த வேல் நாடகம் மிகுந்த சகுனித்தனத்துடன் வடிவமைக்கப்பட்ட ஒரு நாடகம். 

இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்நிலையில் ஒரு கேள்வி எழலாம். அப்போது பாஜக மட்டும் வேல் யாத்திரை நடத்த வில்லையா? அது அரசியல் இல்லையா?

அன்னைத்தை அம்பு எய்தி காயப்படுத்தினான் தேவதத்தன் அடிபட்ட அன்னத்தைக் காப்பாற்றினான் சித்தார்த்தன். அதற்கு மருந்திட்டு அதனை மீண்டும் சுகமாக்கினான்.  தேவதத்தன் அடிபட்ட அன்னம் தன்னுடையது என்றான். சித்தார்த்தன் அதனை மறுத்தான். வழக்கு அரசவை சென்றது.  அப்போது இந்திரனே ஒரு வயோதிகனாக வந்து அன்னம் அதனைக் காப்பாற்றிய சித்தார்த்தனுக்கே உரியது என்றான் என்கிறது பௌத்த மரபு.

இந்து தருமம் எனும் ஞான அன்னம் மதமாற்ற சக்திகளாலும் திராவிட கழகத்தாலும் கறுப்பர் கூட்டத்தாலும் திருமாவளவனின் வக்கிர பேச்சுகளாலும் காயப்பட்டிருந்த போது அதனைக் காப்பாற்ற அதற்காக குரல் கொடுக்க புண்பட்ட ஹிந்துக்களுக்கு ஆறுதல் அளிக்க காங்கிரஸ் வரவில்லை.  கம்யூனிஸ்ட்கள் வரவில்லை.  திமுக வரவில்லை.

இந்து இயக்கங்கள் வந்தன.  இந்து முன்னணி வந்தது. விஸ்வ இந்து பரிஷத் வந்தது.  ஆர். எஸ்.எஸ் வந்தது.  பாஜக வந்தது. இந்து மக்கள் கட்சி வந்தது.  ஏன் தனிப்பட்ட ஹிந்துக்கள் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கூட வந்தனர். கனிமொழி வரவில்லை. ஸ்டாலின் வரவில்லை. உதயநிதி ஸ்டாலின் வரவில்லை. இங்கே பிரியாணி செய்ய வந்து மட்டனுக்கும் சிக்கனுக்கும் தமிழ் என்ன என்று கேட்கும் ராவுல் வின்ஸி எனிற ராகுல் காந்தி வரவில்லை. 

பாஜக முன்வந்தது. அது முருகனை முப்பாட்டன் என்று இழிவு படுத்தவில்லை.  அது தமிழ் மரபு சார்ந்து முருகப் பெருமானை பரம்பொருளாகவே பார்த்தது.  இன்றைக்கு இளங்கோ அடிகளும், திருமுருகாற்றுப்படை எழுதிய நக்கீரரும் கந்தரனுபூதி எழுதிய அருணகிரிநாத பெருமானும், கந்தர் கலிவெண்பா பாடி காசியில் சித்தாந்த ஞானக்கொடி நாட்டிய குமரகுருபரரும், வைதிக சைவ சித்தாந்த ஞானபானு தமிழ் பேராசான் பாம்பன் ஸ்ரீ மத் குமரகுருபர சுவாமிகளும் வந்தால் அவர்கள் திமுகவின் வேல் வாங்கும் மேடை நாடகத்தைக் கண்டு மனம் பதைத்து சபிப்பார்கள்.

முனைவர் முருகனின் வேல் யாத்திரையில் அவர்கள் கலந்து கொள்வார்கள் ஏனென்றால் அவர்களுக்கும் சரி பாஜகவினருக்கும் சரி முருகன் அனாதியாய் பலவாய் ஒன்றாய் பிரம்மமாய் நின்ற சோதி பிழம்பு அன்றி தோன்றி மறையும் மானுடன் அல்லன்.

இன்று தமிழ்நாட்டில் ஒரு பாஜக அலை அடிக்கிறது என்பது உண்மைதான். இதுவரை இங்கு செயலற்ற தன்மையுடன் விளங்கிய பாஜக மீண்டும் புது ரத்தம் பாய்ச்சப்பட்டு விறுவிறுப்பாக வேலை செய்கிறது. 

தலைமையேற்று களத்தில் முருகன், அவருக்கு தோள் கொடுத்து இளைஞர்களை ஈர்க்கும் அண்ணாமலை, அறிவுத்தளத்தில் ம.வெங்கடேசன், ஊடகத்துறையில் சூர்யா. பெண்கள் முன்னேற்றத்தில் சூழலியல் தளத்தில் வானதி சீனிவாசன் என தமிழக பாஜக முன்னெப்போதும் இல்லாத முழு முனைப்புடன் செயல்படுகிறது. 

இன்றைக்கு முன்பு போல இந்துக்களை கண்டபடி பேசிவிட்டு போய்விட முடியாது.  எனவே தர்மத்தின் எதிரிகள் வேறு வேஷம் போடுகிறார்கள். 

பாஜகவுக்கு எவ்விதத்திலும் ஓய்வறிய வழியில்லை. கடுமையாக களத்தில் உழைக்க வேண்டும்.  தருமத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் இன்று தர்மத்தை காப்பாற்ற ஒரு போராளியாகவேண்டும்.  வரும் தேர்தலில் தமிழ்நாட்டை கவ்வி சுரண்டி கொழுத்த குடும்ப அரசியலின் திராவிட இருள் என்றென்றுமாக அகன்றொழிய ஒரு நல்ல வாய்ப்பு. வெற்றி மட்டுமே விதிக்கப்பட்டது. தோல்விக்கு எள்ளளவும் இடமில்லை. 

பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள எழுச்சி தமிழ்நாட்டுக்கு ஒரு மகத்தான மறுமலர்ச்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here