திமுக தலைவர் ஸ்டாலின் வைக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் உடனடியாக ராஜினாமா செய்ய தயார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது :
கோவை விழா நிகழ்ச்சி மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கொரோனா காலத்தில் பல தலைவர்கள் அறைக்குள் இருந்து வெளியே வராமல் இருந்தனர். ஆனால், முதலமைச்சர் தன்னைப்பற்றி கவலைப்படாமல் களப்பணியாற்றினார். எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதலமைச்சர் நாற்காலியை பிடிக்க ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை முதலமைச்சர் மீதும், என் போன்ற அமைச்சர்கள் மீதும் கூறி வருகிறார்.
அவர் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க தடையாய் இருந்தவர்கள் நாங்கள். அதனால் இப்படி அவதூறு பரப்பி வருகிறார். கோவை வந்திருக்கிறார் ஸ்டாலின். என் மீதான ஊழலை நிரூபித்தால் இன்றே நான் எனது பதவியை ராஜினாமா செய்வதாக உடனடியாக கடிதம் கொடுக்கிறேன். அப்படி நிரூபிக்க முடியவில்லை என்றால் எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினிமா செய்வாரா?
இன்றே சவாலுக்கு தயாராக உள்ளேன். அவர் கூறிய குற்றச்சாட்டுகள் அரசியலுக்காக. ஊழல் குற்றச்சாட்டுக்களை கூற மு.க.ஸ்டாலினுக்கு தகுதியே இல்லை. ஆண்மையுடன் சவால் விடுகிறேன்.ஸ்டாலின் ஆண்மையுள்ளவராக இருந்தால் சவாலை சந்திக்க தயாரா? அப்படி நிரூபித்தால் நான் அடுத்த தேர்தலில் சீட் கூட கேட்க மாட்டேன்.
கோவையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களை திமுக குண்டர்கள் தாக்கியுள்ளனர். கோவிலை மறித்து தான் மக்கள் சபை கூட்டம் நடத்துகின்றார். அந்த பெண் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது திமுக கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் அவதூறு பேசுவதை கேட்டு பொறுக்க முடியாமல் அந்த பெண் கேள்வி கேட்கிறார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது என்று அந்த பெண் கேட்டுள்ளார். அதற்காக தாக்குதல் நடத்தியுள்ளார்கள்
இது நியாயமான கேள்வி தான், இதற்காக தாக்கியுள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. கோவை மாவட்ட மக்கள் யார் மீது கை வைத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இதற்கு ஸ்டாலின் பதில் கூறியே ஆக வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.