ஹலால் உணவை வாங்க வேண்டாம் – கிறிஸ்தவர்கள்.

Halal

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்கள். பிராணிகளை மிகவும் கொடூரமான முறையில் கொல்லும் ஹலால் இறைச்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. டைம்ஸ் நவ் பத்திரிகையில் வெளி வந்துள்ள செய்தியில் கொச்சியைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பான Auxiliary for Social Action (CASA), கிறிஸ்தவர்கள் இனி ஹலால் உணவை வாங்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது!

வேறு வழி இல்லாமல் தாங்களும் ஹலால் இறைச்சியை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறி அதைப் புறக்கணிப்பதற்கான கிறிஸ்துவர்களின் இந்த அழைப்புக்கு இந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன!
இதற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அமைப்பினர் ஹலால் இறைச்சிக்கு எதிரான பிரச்சாரம் முஸ்லிம்களை குறிவைக்கும் செயல் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்னர் கிறிஸ்தவர்கள் ஹலால் உணவு விற்பதை எதிர்த்து போராட்டம் நடத்துவார்கள் என்று CASA அமைப்பு கூறியுள்ளது. பிராணிகளை கொடூரமான முறையில் கொல்லும் முறையிலான ஹலால் இறைச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்கள் சொந்தப் பணத்தில் ஆடு, கோழிகளை வாங்கி ஹலால் அல்லாத முறையில் இறைச்சியாக்கி சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிறிஸ்தவர்கள் தங்கள் மத நம்பிக்கைகளுடன் ஒத்துப் போகாத ஹலால் வகையில் தயாரிக்கப்பட்ட இறைச்சியை உட்கொள்ள முடியாது என்று இதற்குக் காரணம் கூறியுள்ளனர். இதுகுறித்து மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ குழுக்கள், மாநிலத்தில் ஹலால் இறைச்சியை விற்கவும் வாங்கவும் கட்டாயப்படுத்தப்படுவதாகவும், எனவே அதற்கு எதிராக குரல் எழுப்ப முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முஸ்லிம் அமைப்புகள் ஹலால் எதிர்ப்பு பிரச்சாரம் மக்கள் மத்தியில் மத ரீதியான பிளவுகளை உருவாக்கும் முயற்சி என்று குற்றம் சாட்டுகின்றன. அவரவர் எந்த வகையான இறைச்சியை வாங்க விரும்புகிறார்கள், எங்கு வாங்க விரும்புகிறார்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு என்று கூறும் முஸ்லிம் தலைவர்கள் கிறிஸ்தவர்களின் இந்த பிரச்சாரம் முஸ்லிம்களை குறிவைத்து தாக்குவது போல் உள்ளது என்றும் கூறுகின்றனர்.

ஹலால் என்பதே பிற மதத்தினர் வாங்கும் உணவு பொருட்கள் மீது இஸ்லாமிய திணிப்புதான்.
ஒரு முஸ்லீமால் மட்டுமே ஹலால் செய்ய முடியும். இதனால், முஸ்லிமல்லாதவர்களுக்கு இந்த ஹலால் செய்யும் முறை மறுக்கப்படுகிறது. இதனால் அனைவரையும் முஸ்லிம் பழக்க வழக்கங்களைப் பின்பற்ற வைக்கும் விதமாக ஹலால் முறை இருக்கிறது என்று இந்துக்களும் கிறித்தவர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் கடைகளில் எந்த முஸ்லிம்களும் இறைச்சி வாங்குவதில்லை. பிறகு நாங்கள் மட்டும் ஏன் அவர்களின் பொருட்கள் வாங்க வேண்டும் என கேட்கிறார்கள்.

முன்னர் லவ் ஜிகாத் விஷயத்திலும் கிறிஸ்தவ பெண்கள் பாதிக்கப்பட்ட போது கிறிஸ்தவ அமைப்புகள் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்து அமைப்புகளை முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு பிரிவினைவாதிகள் என்று கூறும் கிறிஸ்தவர்களுக்கு அவர்களுக்கு என்று பிரச்சினை வரும் போது தான் உண்மை நிலை தெரிகிறது.

நன்றி : கதிர் நியூஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here