ஹிந்து அறநிலையத்துறை தெய்வத்தின் சொத்துக்களுக்கு காப்பாளராக தான் இருக்க முடியும். ஏக போக சொந்தம் கொண்டாட முடியாது- எஸ்.ஆர்.சேகர்

132

ஹிந்து அறநிலையத்துறை தெய்வத்தின் சொத்துக்களுக்கு காப்பாளராக தான் இருக்க முடியும். ஏக போக சொந்தம் கொண்டாட முடியாது. கடவுளின் சொத்துக்களை நிர்வகிக்கதான் முடியுமே தவிர அதனை விற்கவோ, ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா போட்டு கொடுப்பதற்கோ அரசுக்கு உரிமையில்லை.

சந்திர சூரியன் உள்ளவரை அது கடவுளின் சொத்து என்பது கோவில் சொத்து பற்றி மாமன்னன் ராஜராஜ சோழன் எழுதிய பட்டயத்திலேயே உள்ளது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக ஓர் அமைச்சரே பேசுவது அதிர்ச்சியளிக்கிறது.
அரசியல் சாசனத்தின் பெயரில் பதவியேற்று, சட்டவிரோத செயல்களுக்கு வெளிப்படையாக அமைச்சர் ஆதரவு தெரிவிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

சமீபத்திலே வெளியான நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அவர்கள் வழங்கிய வரலாற்று சிறப்புவாய்ந்த தீர்ப்பிற்கு நேர் எதிராக அமைச்சர் பேசியிருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும். ஆட்சியாளர்கள் மக்களுக்கு நன்மை செய்ய தான் வந்திருக்கிறார்களே தவிர மேலும் ஆக்கிரமிப்பை ஊக்குவிக்க அல்ல. ஆக்கிரமிப்பாளர்களுக்கு பாதுகாவலன் நான் அல்ல என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

சமீபத்தில் ஆலய சொத்துக்களை இணையத்தில் பதிவேற்றப்படும் என்றார் அமைச்சர் சேகர்பாபு .
ஆனால், உண்மையான ஆவனங்களை தான் பதிவேற்றியுள்ளதா என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது.
“கோவில் ஆவணங்கள் அடிப்படையில் போடப்பட்டுள்ளதால் அவை பற்றி எந்த உத்திரவாதமும் இல்லை” என குறிப்பிட்டுள்ளது மேலும் அதிர்ச்சியளிக்கிறது.

நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு தீர்ப்பு வழங்கிய நாளில் அத்தீர்ப்பு பிரபலமாகிவிடக்கூடாது என்ற நோக்கில் வடபழனி முருகன் கோவில் சொத்தை மீட்டுள்ளோம் என “ஸ்டண்ட்” அடித்துள்ளார் அமைச்சர். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த சொத்து வெள்ளையர் காலத்தில் இருந்தே முருகன் பெயரில் தான் பட்டா உள்ளது.
ஆக்கிரமிப்பாளர்கள் மீது பரிவிருந்தால் திமுகவின் சொத்தையோ, அக்கட்சியினரின் சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு முதலில் பட்டா வழங்கட்டும்.

“ஒன்றியம்” என பேசி அனைவரையும் திசைதிருப்பிவிட்டு இது போன்ற சட்ட விரோத செயல்களை புரிபவர்களுக்கு ஆதரவாக அரசே செயல்படுவதுதான் விடியல் ஆட்சியா? இதை தட்டி கேட்க எந்த கட்சிக்கும் துணிவில்லை.
அமைச்சரின் பேச்சை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

+1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here