மறைக்கப்பட்ட தமிழறிஞர்கள்!

கடந்த நூற்றாண்டில் தமிழுக்கு பாடுபட்டது பலர், ஏராளமானோர் உண்டு மறைமலை அடிகள், உ.வேசா என வரிசை பெரிது. தமிழனின் ஆராய்ச்சிக்கும் பாடுபட்டவர் பலர், தமிழனின் பழமை என்ன? மற்ற மொழிகளில் தமிழின் தொடர்பு என்ன? மற்ற கலாச்சாரங்களுடன் தமிழ் கலாச்சாரம் எப்படி ஒத்துவருகின்றது?, தமிழன் எப்படி மூத்தகுடி?
அவன் எங்கிருந்திருக்கலாம் என ஆராய்ச்சி செய்தவர் வெகு சிலர் அவர்கள் தான் கடல்கொண்ட தென்னாடு, கபாட புரம் என ஆராய்ச்சியினை செய்தனர், பலமொழிகள் கற்று எல்லா மொழிகளிலும் ஆதாரம் தேடினர். எகிப்து தமிழக தொடர்புகளை அவர்கள் சொன்னார்கள். நீல நதி நைல் நதியாயிற்று, பெருமேடு என்பது பிரமீடு ஆயிற்று என்பதெல்லாம் அவர்கள் ஆய்வே. தமிழ் எண்கள் எப்படி அரேபியன் எண்களாயிற்று என்பதை சொன்னவர்களும் அவர்களே

ஐரோப்பிய அரேபிய மொழியில் ஆராய்ந்தார்கள், கிழக்கு ஆசிய மொழிகளில் புகுந்தார்கள் பெரும் ஆராய்ச்சி எல்லாம் செய்தார்கள், செய்துவிட்டுத்தான் தமிழன் முன் தோன்றிய இனம், முன் தோன்றிய மொழி தமிழ் என்றெல்லாம் சொன்னார்கள், கிழக்காசிய மொழிகளிலும் வாழ்வியலிலும் இருக்கும் தமிழ் தாக்கம் பற்றி சொன்னார்கள்

அப்படிபட்டவர்கள் தேவநேய பாவணர், பன்மொழி புலவர் க.அப்பாத்துரை போன்றோர்,
இன்று க.அப்பாத்துரை இறந்த நாள், தமிழுக்காகவும் தமிழரின் ஆராய்ச்சிக்காகவும் அவர் பட்ட பாடு கொஞ்சமல்ல, பெரும் நூல்களை எல்லாம் எழுதியவர்

ஆனால் அவர்பிறந்த ஆரல்வாய்மொழியில் அண்ணா சிலை இருக்குமேயன்றி இவருக்கு ஒரு கல் கூட கிடையாது
காரணம் பன்மொழி படித்த அப்பாத்துரை தேசியவாதி, சமஸ்கிருதம் முதல் எல்லாம் கற்றவர்
பின் எப்படி திமுக தேடும்?

அதுவும் பிராமணர்கள் தமிழர் எதிரி அல்ல என அப்பாத்துரை சொன்னபொழுது, ஆம் அவர்கள் தமிழருக்கு மட்டுமல்ல, மனித குலத்திற்கே எதிரி என சொன்னவர்கள் திமுகவினர், பின் எப்படி?

ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரி இவர் பெயரில்தான் அமைந்திருக்க வேண்டும், அப்படி ஒரு அபூர்வ தமிழன் அப்பாதுரையார், இன்றும் அந்த ஊரில் அப்பாதுரை பெயரில் எதுவுமில்லை என்பதுதான் சோகம்..
திமுகவின் அரசியல் நாடகத்தில், ஈரோட்டு ராம்சாமி கோஷ்டியின் அடாவடியில், அதன் அரசியலில் இங்கு மறைக்கபட்ட எத்தனையோ பேர் உண்டு, பாரதி முதல் அப்பாதுரை என ஏராளம் உண்டு.
அப்பாதுரை போன்றெல்லாம், மறைமலை அடிகள், மபொசி போன்றெல்லாம் தமிழுக்கு உழைத்தவர்கள் இருந்தார்கள், எத்தனை பேர் தமிழனையும் தமிழன் வரலாற்றிற்காகவும் வாழ்ந்திருகின்றார்கள், வரலாற்றில் மறைக்கபட்டிருக்கின்றார்கள் ஏன் என்றால் அவர்கள் அரசியலில் இல்லை.

இன்னும் மறைந்திருப்பவர் எத்தனை பேரோ, இவர்களை எல்லாம் நினைத்து பார்ப்பது யார்?
இப்படிபட்ட தமிழறிஞர்களை மறைத்து , பெரும் பன்மொழி விற்பனர்களை, சான்றோர்களை மறைத்து, ஈவேரா தான் தமிழருக்கு எல்லாம் என கிளம்பியது ஒரு கும்பல்

பின் அண்ணாதுரையும், கருணாநிதியுமே தமிழறிஞர்கள் என கிளம்பியது இன்னொரு கும்பல்
அதற்கு அடுத்து கிளம்பிய கும்பல் மகா ஆபத்தானது, அது தமிழர் தலைவன் பிரபாகரன், சந்தன கடத்தல் வீரப்பன் என கிளம்பிவிட்டது.

மூலவியாதிகாரனாக கத்தும் ஒரு கும்பல் வந்தது, கொஞ்ச நாளாக தமிழகத்தில் ஒலிமாசு ஆனது. ஏய் தமிழன விரோதிகளா.. என இவர்கள் கத்திய சத்தம் சர்வதேச விண்வெளிநிலையம் வரை கேட்டதாக சொன்னார்கள்

தமிழக எல்லை என்றார்கள், தமிழன் பெருமை என்ன? என முழங்கினார், அடடா இனி மறைமலை அடிகள், மபொசி, அப்பாத்துரை, திருவிக, வையாபுரி பிள்ளை, என மறைக்கபட்ட தமிழக அடையாளம் எல்லாம் இனி வளம்பெறுமோ என எண்ணினால்….

பிரபாகரனும், வீரப்பனும் தமிழருக்காக வாழ்ந்தவர்கள் , தமிழருக்காக வாழ்வினை தொலைத்தவர்கள், தமிழுக்கு தொண்டு செய்தவர்கள், தமிழனை சிந்திக்க செய்து தமிழ்பெருமை காத்தவர்கள், அவர்களே நம் வழிகாட்டி, நம் அடையாளம் வேறு யாருமே அல்ல என அக்கோஷ்டி சொன்னபொழுது அண்ட சராசரமும் ஆடிபோயிற்று

இப்பொழுதும் வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் அவர்களை விமர்சிப்போம் என்றால் அவர்கள் அழிசாட்டியம் அப்படி, இப்பொழுது ரஜினியிடம் மல்லுகட்டுகின்றார்கள், அதாவது ரஜினி யார்? இங்கு வந்து தமிழ்படித்து தமிழில் பேசி தமிழராக வாழ்பவர், அதுதான் தவறாம்

தமிழ் தமிழன் பேசும் மொழி, கன்னடன் எப்படி தமிழ்படிக்கலாம்? பேசலாம்?, தமிழரின் மொழியினை அந்நியர் பேசவிடமாட்டோம், தமிழ் தமிழனுக்கே, தமிழகம் தமிழனுக்கே

இவை எல்லாம் வெறுப்பும், வன்முறையும் கொண்டுவரும் குருட்டு சித்தாந்தங்கள்.,

இவர்கள் கன்னடம் கற்று கர்நாடகாவில் நிற்பதை யார் தடுத்தார்கள்? மலையாளம் கற்று மலையாளியாய் வாழ்ந்து கேரளாவில் நின்றால் யார் தடுப்பார்கள்
மக்கள் அளிப்பதே அல்லவா முடிவு? குறுக்கே படுத்து என்னை கடந்து செல், நான் தமிழன் என்றால் என்ன ரகம்?
இப்படி ஒரு விபரீத தமிழனை எங்காவது காணமுடியுமா? சட்டியில் இருப்பது அவ்வளவுதான்
தமிழகத்தில் இந்த திக, திமுகவில் இருந்ததெல்லாம் தமிழை தவிர எதுவும் அறியா கூட்டம், கூடுதலாக ஆங்கிலம் மட்டும் தெரியும். அதிலும் சொன்னதெல்லாம் பொய்

உண்மையில் அப்பாதுரை போல பன்மொழி புலமை கொண்ட பெரும் தமிழறிஞர்கள் இருந்தார்கள் அவர்கள் மறைக்கபட்டார்கள், அரசியல் ஒன்றுக்காக அவர்கள் புகழும் பெருமையும் உழைப்பும் இங்கு குழிதோண்டி புதைக்கபட்டது

அதை மீட்டெடுத்தல் வேண்டும் அவர்தம் ஆராய்ச்சிகளையும் தொண்டுகளையும் புறக்கணிக்காமல் அவர்களை அடுத்த தலைமுறைக்கு அடையளம் காட்டுதல் வேண்டும்..
இல்லாவிட்டால் ஊளையிடும் கோஷ்டி வரலாற்றை மாற்றி எழுதும், அதைவிட கொடுமை இன்னொரு சீமான் வந்து மலையூர் மம்பட்டியான், நாகர்கோவில் லிங்கம், ஆட்டோ சங்கர், அட்டாக் பண்டி, பொட்டு சுரேஷ், காஞ்சி அப்பு எல்லாம் தமிழின தலைவர்கள் என சொல்ல ஆரம்பித்துவிடுவான்
அந்த ஆபத்தை தவிர்த்தல் வேண்டும்

இன்று அப்பாத்துரையார் நினைவு நாள்

அப்பாத்துரையார் என்ன செய்தார் என்றால் இவ்வளவுதான் செய்தார்
‘தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் மொழிகளைத் திறம்படக் கற்றார். மேலும் ஆப்பிரிக்க மொழி உள்ளிட்ட 18 மொழிகளை அறிந்திருந்தார்.
தமிழ் இலக்கியம், தமிழக வரலாறு குறித்த ஆராய்ச்சிகளில் கண்டறிந்தவற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆராய்ச்சி நூல்களாக எழுதினார். இவற்றில் ‘குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு’ மற்றும் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ ஆகிய நூல்கள் அவருடையவை
தமிழனின் வரலாற்றை அழகாக சொல்லும் நூல்கள் அவை
‘சரித்திரம் பேசுகிறது’, ‘சென்னை வரலாறு’, ‘கொங்குத் தமிழக வரலாறு’, ;தமிழர் நாகரீகம்;உள்ளிட்ட வரலாற்று நூல்கள், ‘கிருஷ்ண தேவராயர்’, ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்’, ‘சங்க காலப் புலவர் வரலாறு’ உள்ளிட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களையும் படைத்தார்.

*அலெக்சாண்டர், சந்திரகுப்தர், சாணக்கியர் உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், 6 தொகுதிகளாக வெளிவந்த திருக்குறள் மணி விளக்க உரை உள்ளிட்ட இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை. திருக்குறளுக்கு விரிவுரையும் விளக்க உரையும் பல ஆயிரம் பக்கங்களில் வழங்கியுள்ளார்.
‘உலக இலக்கியங்கள்’ என்ற தனது நூலில் பாரசீகம், உருது, பிரெஞ்சு, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளின் இலக்கியங்களை ஆராய்ந்து பல அரிய செய்திகளை வழங்கியுள்ளார். உலகின் ஆதி மொழி தமிழ் என்றும், உலகின் முன்னோடி இனம் தமிழ் இனம் என்று அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து தனது கருத்தை வெளியிட்டார்.

அறிவுச் சுரங்கம், தென்மொழித் தேர்ந்தவர், சிறந்த சிந்தனையாளர், சிறந்த சொற்பொழிவாளர், கனிந்து முதிர்ந்து பழுத்த பேரறிவாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை தமிழன வரம்.

சிறுகதைகள், இலக்கியத் திறனாய்வு நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், நாடகம், பொது அறிவு நூல், அகராதி, உரைநூல், குழந்தை இலக்கிய நூல் என பல்வேறு களங்களிலும் தனி முத்திரைப் பதித்தார்
இவர் அமராவதி புதூர் குருகுல சாலையில் கொஞ்சநாள் தமிழாசிரியராக இருந்தபொழுது அவரிடம் தமிழ் கற்றவர்தான் கண்ணதாசன்
கண்ணதாசன் தமிழின் அழகினை ஆரம்பத்திலே செதுக்கியவர் இவர்தான்…‘
அவர் செய்ததில் கோடியில் ஒரு பங்கு கூட ராம்சாமி, கருணாநிதி, அண்ணா போன்றோர் செய்திருக்க முடியாது.
ஆரல்வாய்மொழி மக்கள் தங்கள் மண்ணுக்கு ஏதும் செய்வதாக இருந்தால், தங்கள் மண்ணின் மிகபெரும் அறிவுஜீவியும், பன்மொழி புலமையும் கொண்ட, மிக பெரும் தொண்டை தமிழுக்கு செய்த‌ அப்பாத்துரையார் பெயரை அவர்கள் ஊரின் பஸ் நிலையத்துக்கும் கல்லூரிக்கும் சூட்டட்டும்
எங்கோ காஞ்சிபுரத்தில் பிறந்து இருமொழிக்கு மேல் தெரியாத, மிக பெரும் பொய்யும் புரட்டும் பரப்பிய அண்ணாவினை விட, சொந்த ஊரில் பிறந்த தமிழறிஞரான உண்மை பேசிய தேசியவாதி தமிழரான அவர் பெயரை அதற்கு சூட்டுதலே சால சிறந்தது
ஆரல்வாய்மொழியில் பிரிவினைவாதியும் புரட்டு அறிஞனுமான அண்ணா பெயர் மறையட்டும் அப்பாதுரையார் பெயர் எங்கும் பரவட்டும், அதிலிருந்து நல்ல அறிஞர்களும் தேசியவாதிகளும் உருவாகி வரட்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here