75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார் ..!

75 rupees coin released by modi

உணவு மற்றும் விவசாய அமைப்பு உருவாக்கப்பட்டதன் 75ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

இதன்பின்னர் மோடி பேசுகையில், உலக உணவு அமைப்பிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது மிகப்பெரிய சாதனை ஆகும். அந்த அமைப்பிற்கு இந்தியாவின் பங்களிப்புக்காக நாடு மகிழ்ச்சி அடைகிறது. அந்த அமைப்புடன் உறவு வரலாற்று ரீதியிலானது.

பெண்களுக்கு சரியான திருமண வயது குறித்து விவாதம் நடந்து வருகிறது. இது குறித்து அமைக்கப்பட்ட குழு ஏன் இன்னும் அறிக்கை அளிக்கவில்லை என நாடு முழுவதும் பல பெண்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த குழு விரைவில் அறிக்கை அளிக்கும். அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர்களுக்கு உறுதி அளிக்கிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.

கடந்த திங்கட்கிழமை (அக்.,12) அன்று, பா.ஜ., கட்சியின் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவரான விஜயராஜே நினைவாக ரூ.100 நாணயத்தை மோடி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here