இந்தியாவின் அக்னி குழந்தைகள்.

கடந்த வாரத்தில் அக்னி‌ எவுகனை ஒன்றை கொண்டு போய் காஷ்மீர் மாநிலத்தின் எல்லையில் நிறுத்திவைத்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வாசித்தன…அது அக்னி ஏவுகணை வரிசையில் 5 என்றும் தகவல் சொன்னார்கள்.

ஏன்…
ஏன் இந்த திடீர் நகர்வு…

அதற்கான என்ன அவசியம் தற்போது இந்தியாவிற்கு… என்பது போன்றான கேள்விகள் பலவும் இங்கு எழுந்திருக்கிறது‌. சீனா தனது துருப்புக்களை எல்லையில் குவித்து வரும் இந்த தருணத்தில்… இந்தியாவின் இந்த நடவடிக்கை சீனாவிற்கு எதிரான பார்க்கப்படுவது இயல்பான ஒன்றுதான்.
ஆனால்…
இந்திய ராஜதந்திர நகர்வு வேறுமாதிரியானது…. சற்றே நுட்பமானதும் கூட.
இதனை புரிந்து கொள்ள அக்னி ஏவுகணைகளின் சிறப்பு அம்சங்களை புரிந்து கொண்டாலே போதுமானது.
இந்தியா உருவாக்கியுள்ள அக்னி ரக ஏவுகணைகளின் துல்லிய தாக்குதல் திறன் உலகில் வேறு எந்த ஒரு நாட்டிலும் இல்லை. இதனை ஒற்றை இலக்க துல்லியமான தாக்குதல் திறன் என்பர். அதாவது ஒன்பது மீட்டர் குறுக்களவில் இலக்கினை துல்லியமாக தாக்கி அழிக்க கூடியவை இவை. அக்னி 5 யின் தாக்குதல் தூரத்தின் குறைந்த பட்ச தூரம் 5000 கிலோமீட்டர். இந்த தொலைவிற்கு உள்ள இலக்கை மிக துல்லியமாக 9 மீட்டர் குறுக்களவில் முப்பது அடி அகலத்திற்கு மிகாமல் இலக்கை நோக்கி சென்றடைந்து அதனை தாக்கி அழிக்கும்.

அதாவது 5000 கிலோமீட்டர் அப்பால் உள்ள இலக்கை குறி தவறாமல் இலக்கின் அதிகபட்ச முப்பது அடிக்குள்ளாக சென்று தாக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இஃது உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு துல்லிய தாக்குதல் திறன். ஆனானப்பட்ட அமெரிக்க ஏவுகணைகளே இரட்டை இலக்க அளவில் தான் துல்லிய திறன் பெற்று இருக்கிறது.அவர்களது அதி உன்னத தரத்திலான ஏவுகணை ஒன்றின் துல்லிய திறன் கிட்டத்தட்ட 67 மீட்டர்.அதாவது 224 அடி அகலத்தில் இலக்கினை தாக்கும் அளவிற்கே உள்ளது.

இதில் அக்னி 5 கேனிஸ்டர் ரகம். வாகனங்களில் வைத்து இலக்கு நோக்கி ஏவ முடியும். போதாக்குறைக்கு தயார் நிலையில் உள்ள அதாவது அணு ஆயுதம் ஏந்திய நிலையில் தயாராக உள்ள ரகம் இது. இந்திய உபகரணங்களில் தயாரான எதனையும் அத்தனை சுலபமாக எடுத்துக் கொண்டு விடாது உலகம். காரணம் அதன் துல்லியமான இயங்கு திறன். உதாரணமாக இந்தியா சந்திரனுக்கு அனுப்பின சந்திராயன் வின்கலம்.இது வரை உலகம் பார்த்திராத நிலவின் பின்புறத்தினை ஆராய அந்த வின்கலம் அணுப்பப்பட்டது. சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தி வைத்தது.. அதன் பின்னர் அதன் ரோவரை நிலவில் தரை இறங்க செய்த முயற்சியில் 71 மீட்டர் உயரத்தில் இருக்கும் போது தான் அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு நிலவின் மோதி தரையிறங்கியது.செயல்யிழந்தது.

இது மிகப் பெரிய சாகஸம்.
அவ்வளவு துல்லியமாக நகர்ந்தது கண்டு உலகம் ஆடிப் போனது. அதனை சாதிக்க தெரிந்தவர்களுக்கு உலக நாடுகள் எதன் மீதும் தாக்குதல் தொடுக்கும் வல்லமையை கொண்டு இருக்கிறார்கள் என்றே இன்றளவும் நம்புகிறார்கள்.
வேறோர் காரியத்தை இந்தியர்கள் செய்திருக்கின்றார்கள். அதாவது ஒரு ஏவுகணை இலக்குகள் 42.
அதாவது ஒரு ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர் போகிறவழியில் சுமார் 42 இலக்குகளை தேர்ந்தெடுத்து அதனை தாக்க தனித்தனியே ஏவுகணைகளை வரிசையாக செலுத்திக் கொண்டே செல்லும். இதற்காக 120 மேற்பட்ட இலக்குகளை கண்காணித்து தானாவே இந்த 42 இலக்குகளை தேர்ந்தெடுத்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். இதனை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்து இருக்கிறார்கள் நம்மவர்கள்.
இது புதிது. நாம் மட்டுமே வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்து இருக்கிறோம்.

இதற்கென பலதரப்பட்ட தொழில்நுட்ப பண்புகளை ஒருங்கே செயல்படும் படி கட்டமைத்து இருக்கிறார்கள்.பல நாடுகளில் இதற்கான பிரத்தியேக உபகாரங்களை தருவித்து முயற்சி செய்து வெற்றி பெற்று இருக்கிறார்கள்…. தற்போது இந்தியா இதனை தனது மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இங்கேயே உற்பத்தி செய்யப்போகிறது. சரி ரஷ்யா சீனா வசம் உள்ள S400 வான் பாதுகாப்பு சாதனங்களால் நம் இந்திய தயாரிப்பை எதிர்கொண்டு தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டால்……ஓரே பதில் முடியாது என்பது தான். காரணம் அக்னியில் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரானிக் வார் ஃபேர் ஸிட்டம் பல குழப்பமான சிக்னல்களை அனுப்பிடக்கூடியது. இதனால் வானில் ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான தாக்குதல் ஏவுகணைகள் வருவது போல் காட்டும். இது எதிரி ஏவுகணைகளுக்கும் குழப்ப இலக்குகளை தானாக இதுவே கொடுக்கும் வல்லமையை கொண்டு இருக்கிறது என்கிறார்கள்.

ஏவுகணை ஏவல் மட்டும் அல்லாமல் அதில் எலக்ட்ரானிக் சாதனங்களை, அதிக அளவிலான சமாச்சாரங்களை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. நம் இந்தியாவில் அக்னி 5 ரகங்களில் இருக்கிறது.இவை போக இரண்டு தயாரிப்பில் இருக்கிறது என்கிறார்கள். அக்னி 5 வரை சமாளிக்கவே உலக நாடுகளில் பலவும் திண்டாடும் சூழ்நிலையில் மற்ற இரண்டினை குறித்தெல்லாம் கேட்கவே வேண்டாம்…

இது தற்போது காஷ்மீர் பகுதியில் நிலைநிறுத்த மிக முக்கியமாக பாகிஸ்தான் ஒரு காரணமாக இருக்கிறது.
இன்றைய தேதியில் கடும் பொருளாதார வர்த்தக இக்கட்டில் மாட்டிக் கொண்டு திண்டாடி வரும் இந்த சமயத்தில் அது தன்னிடம் உள்ள அணுஆயுத உபகரணங்கள் மற்றும் அணு ஆயுத தயாரிக்க தேவையான யூரேனியம் செறிவூட்டப்பட்ட சமாச்சாரங்களை அரபு உலக நாடுகளுக்கு விற்று விடக்கூடிய அபாயம் இருக்கிறது என்கிறார்கள். இதனை உறுதிப்படுத்தும் விதமாக துருக்கி தன்னிச்சையாக ஆஃப்கானிஸ்தானில் தங்கியிருக்க பல கட்ட வேலைகள் முன்னெடுக்கப்படுகிறது. அது ஒன்று தான் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் மிரட்டல் விடுத்த நாடாக பார்க்கப்படுகிறது.

போதாக்குறைக்கு அமெரிக்கா மறைமுகமாக துருக்கியை ஆதரிக்கிறது.
இவையெல்லாம் கணக்கில் கொண்டு தான் இந்தியா இந்த முடிவினை எடுத்திருக்கூடும் என்கிறார்கள் உலக அரசியல் பார்வையாளர்கள். இந்தியாவின் இந்த செயல் மிகப் பெரிய விஷயமாக இந்த பிராந்தியத்தில் பார்க்கப்படுகிறது என்பதை மாத்திரம் நிஜம். சரியான நேரத்தில் சரியான விதத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்கிறார்கள் இதனை. இந்தியா வல்லரசுக்கு இணையாக செயல்படுகிறது என்பது போய் வல்லரசாகவே செயல் படுகிறது என்று இதனை நுட்பமாக ஆராய்ந்து பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here