விவசாய சட்டங்களை திரும்ப பெறுவது ஏன்?பிரதமர் உருக்கம்!!

நாட்டில் உள்ள ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு கடந்த ஆண்டு 3 விவசாய சட்டங்களை கொண்டு வந்தது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் வரவேற்றாலும், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சில விவசாயிகள் சங்கங்கள் மட்டும் எதிர்த்ததோடு, டில்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர். இதில் காலிஸ்தான் பயங்கரவாத ஆதரவாளர்களும் பங்கேற்று, டில்லியில் வரலாறு காணாத வன்முறையை அரங்கேற்றனர். அப்போதும் மத்திய அரசு அமைதி காத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினரை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. ஆனால் விவசாய சட்டத்தை முழுமையாக திரும்ப பெற்றே ஆக வேண்டும் என்று வறட்டு பிடிவாதம் பிடித்தனர் போராட்டக்குழுவினர். இதன் பின்னணியில் பல அரசியல் கட்சியினர் இருந்தனர். பல எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது இதை காட்டியது. போராட்டக்களத்தில் வன்முறை அரங்கேறியது. போராட்டத்தில் ஈடுபட சென்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தன்னுடன் வந்த கூட்டாளிளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். ஒரு அப்பாவி விவசாயி கை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதற்கும் தங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று போராட்டத்தை தலைமை தாங்கியவர்கள் சப்பைக்கட்டு கட்டினர். சுப்ரீம் கோர்ட் கண்டித்தும் நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் செய்வதை அவர்கள் விடவில்லை. இதுபோன்ற போராட்டம் காங்கிரஸ் காலத்தில் நடந்திருந்தால், போலீஸ், ராணுவம் என்று இறக்கி ஒடுக்கியிருப்பார்கள். ஆனால் நரேந்திரமோடி தலைமையிலான அரசோ, அனைத்தையும் சகித்து, ஜனநாயக முறையிலான போராட்டத்திற்கு அனுமதியளித்தது. தற்போது ஒரு பிரிவு விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை என்பதால் விவசாய சட்டங்களை விலக்கிக் கொள்வதாக எந்த ஈகோவுமின்றி பிரதமர் அறிவித்துள்ளார். பிரதமரின் அறிவிப்பை எதிர்கட்சிகள், தங்களுக்கான வெற்றி போலவும், பிரதமர் மோடிக்கான தோல்வி போலவும் விமர்சித்து வருகின்றனர். ஆனால், பிரதமரின் அப்பழுக்கற்ற உரையிலிருந்து உண்மையை புரிந்து கொள்ள முடியும். ஒரு நல்ல நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்ட சட்டத்தை விலக்கச்செய்ததன் மூலம் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்கள் வரலாற்று பிழையை செய்திருக்கின்றனர். மீண்டும் மண்டி உரிமையாளர்களின் ஒட்டுமொத்த நாட்டின் விவசாயிகளையும் அடிமையாக்கியிருக்கின்றனர். ஆனால் அதிலிருந்தும் பிரதமர் மோடி காப்பாற்றுவார். ஏன் என்றால் அவர் வாக்குவங்கி அரசியல் செய்பவர் இல்லை. உண்மையில் நாட்டின் அனைத்து மக்களின் நலனையும் விரும்புபவர். இன்று அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலிருந்து அதை புரிந்து கொள்ளலாம்.
பிரதமரின் உரை:

மூன்று விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம் என்பதை இன்று முழு நாட்டிற்கும் சொல்ல வந்துள்ளேன்.
இம்மாத இறுதியில் தொடங்கும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில், இந்த மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்வதற்கான அரசியலமைப்பு செயல்முறையை முடிப்போம்.
எங்கள் அரசு, விவசாயிகளின் நலனுக்காக, குறிப்பாக சிறு விவசாயிகளின் நலனுக்காக, நாட்டின் விவசாய உலகின் நலனுக்காக, கிராம ஏழைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக, முழு நேர்மையுடன், அர்ப்பணிப்புடன் விவசாயிகளுக்காக நல்ல நோக்கத்துடன் இந்த சட்டங்களை கொண்டு வந்தோம்.

அத்தகைய புனிதமான, முற்றிலும் தூய்மையான, விவசாயிகளின் நலன் சார்ந்த விஷயத்தை, எங்களால் முயன்றும் சில விவசாயிகளுக்கு விளக்க முடியவில்லை.

விவசாயப் பொருளாதார வல்லுநர்கள், விஞ்ஞானிகள், முற்போக்கு விவசாயிகள், ஆகியோரும் விவசாயச் சட்டங்களின் முக்கியத்துவத்தை அவர்களுக்குப் புரியவைக்க தங்களால் இயன்ற வரை முயற்சி செய்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையில் சிலமாற்றங்கள் செய்ய முன்வந்தோம், 2 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கவும் நாங்கள் தயாராகவும் இருந்தோம்.
வேளாண் சட்டங்களை ஆதரித்த பலருக்கும் நன்றி.

தூய்மையான எண்ணத்துடன் கொண்டுவரப்பட்ட சட்டத்தை சில விவசாயிகளுக்கு புரியவைக்க முடியவில்லை.

ஒரு குறிப்பிட்ட விவசாயிகள் தான் இச்சட்டத்தை எதிர்த்தனர் அவர்களும் எங்களுக்கு முக்கியம்.

நாட்டுமக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் – தூய்மான இதயத்தோடு சொல்கிறேன் – நமது கடுமையான முயற்சியில் கூட ஏதாவது சில குறைகள் இருந்திருக்கலாம்.
விளக்கின் ஒளி போன்ற உண்மையை சில விவசாய சகோதரர்களுக்கு புரியவைக்க முடியவில்லை.

போராட்ட களத்தில் இருக்கும் அனைத்து விவசாயிகளும் வீடுதிரும்புங்கள், உங்கள் நிலங்களுக்கு திரும்புங்கள், உங்கள் குடும்பத்தாரை போய் பாருங்கள்.

இன்று விவசாயத்துறை தொடர்பான மற்றுமொரு முக்கிய தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது. ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை அதாவது இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, நாட்டின் மாறி வரும் தேவைகளை மனதில் கொண்டு பயிர் முறையை அறிவியல் ரீதியாக மாற்ற வேண்டும்.

எம்.எஸ்.பி ( குறைந்த பட்ச ஆதார விலை) மிகவும் பயனுள்ளதாகவும் வெளிப்படையாகவும் மாற்ற, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற அனைத்து விஷயங்களிலும் முடிவுகளை எடுக்க ஒரு குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில், மத்திய அரசு, மாநில அரசுகள், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் பொருளாதார நிபுணர்கள், பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்.

தெய்வமே நற்காரியம் செய்வதிலிருந்து பின்வாங்காத தன்மையை கொடு – செய்தது விவசாயிகளுக்காக – செய்வது தேசத்திற்காக – என் உழைப்பில் குறை வைத்தது இல்லை – இனியும் வைக்கமாட்டேன் – உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன் – நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here