தடைசெய்தாலும் புது வடிவில்…. அலிபாபா என்னும் ஆபத்து!

இந்திய அரசு தடை செய்த 42 சீன செயலிகளில் அலிபாபா நிறுவனமும் ஒன்று.

நம்மூர் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றதும் சிறந்த மாணவர்கள் வெளிநாடுகளில் வேலை கிடைத்து சென்றால் தான் பெருமிதம். ஆனால் சீனாவில் இது தலைகீழ். அவர்கள் தேர்வு செய்த மிகச் சிறந்த மாணவர்கள் போக மீதி பேர் தான் வெளிநாடுகளுக்கு செல்வர்.

அது போலவே பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வில் பிராஜெக்டை நம்மூர் போல் கடைகளில் வாங்கி அதனை தங்களுடைய பேர் போட்டு கொடுத்து வைப்பது சீனாவில் சட்ட படி குற்றம். அவ்விதம் கண்டுபிடிக்க பட்டால் பட்டத்தை மறந்து விட வேண்டியது தான். அதே சமயம் உலக அளவில் பிரபலமான திட்டங்களை கொடுப்பவர்களுக்கு, புதுவிதமான சாத்திய கூறுகளுக்கு மிகப்பெரிய அளவில் ஊக்க தொகை வழங்கப்படும்.

தென் கொரியா நாட்டை சேர்ந்த pubg விளையாட்டை மொபைலில் செயலியாக மாற்றி செல்ஃபோனில் விளையாட வழிவகை செய்தது இவ்வாறான பிராஜெக்ட் மாணவர்கள் தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. உடனடியாக இவர்களை தங்கள் நிறுவனங்களில் இணைத்து உலக அளவில் மூன்றே வாரத்தில் பிரபல்ய படுத்திய பெருமை அலிபாபாவையே சாரும். ஆம் அந்த ணீதஞஞ் மொபைல் வர்ஷன் அலிபாபாவின் துணை நிறுவனங்களின் கீழ்தான் வருகிறது.

இன்று மட்டும் அல்ல நாளைய உலகம், தொழில்நுட்பத்தை சார்ந்த ஒன்றாக தான் இருக்கும் என்று மதிப்பிட்டு 2012 ஆம் ஆண்டு முதல் அதனை நகர துவங்கியது சீனா. எட்டு ஆண்டுகளில் அசுரத்தனமான வளர்ச்சி கண்டனர்.

சரி அலிபாபா ஏன் தடை செய்யப்பட்டுள்ளது, சீன நிறுவனம் என்பதாலா என்றால் அது தான் இல்லை.

தான் பயன் பாட்டில் கொண்டு உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பண்புகள் மூலமாக உலகில் உள்ள அனைவரது தனிப்பட்ட தகவல்கள் திரட்டி தனது சர்வர்களில் தொடர்ச்சி சேமித்து வருகிறது.

இதற்காகவே நாம் தற்போது அன்றாடம் பயன்படுத்தும் கணினிகள், செல்போன்கள், ஞிஞிtதி கேமராக்கள், ஸ்மார்ட் கடிகாரங்கள், ஆன்ட்ராய்டு டிவிக்கள் ஆகிய இன்னும் பிற மின்னணு உபகரணங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் ப்ரோக்ராம் செய்து வைத்து அதில் உள்ளிடப்படும் அனைத்து தகவல்களும் உடனுக்குடன் தரவுகளாக சேமித்து வருகின்றனர்.

இதனை எல்லாம் உங்கள் அனுமதியுடன் தான் செய்கிறார்கள் என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும், ஆனால் இதுவும் நிஜம். சரி உங்களை கண்காணிக்க உங்களை பற்றிய தகவல்களை ஏன் தர சம்மதிக்க போகிறீர்கள் என்றால், அதில் தான் உள்ளது சூட்சுமம்.

இவர்கள் வெளியிட்ட செயலிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பதிவிறக்கி பயன் படுத்தி வந்தால் போதும், அந்த செயலி இயங்க ஒப்புதல் கொடுப்பது என்பது எல்லாவற்றுக்கும் சேர்த்து தான். இதிலும் இவர்கள் ஒரு படி மேலே.உங்களோடு யார் தொடர்பில் இருக்கிறார்களோ, அவர்கள் யாரோடு தொடர்பில் இருக்கிறார்களோ…. இப்படி ஏகப்பட்ட***களோ அவர்கள் அனைவரும் இதில் அடங்குவர்.

இவர்களுக்காகவே பார்த்து பார்த்து செதுக்கி ஒரு நகரத்தையே உருவாக்கி உள்ளார்கள் சீனாவில்.

தாய்ன்ஜின் சீனாவின் மன்ஹாட்டன் நகர் என்று வர்ணிக்கப்படுகிறது. ஈபிள் டவர் வரை அங்கு அமைத்துள்ளனர்.

தற்போது இந்த நகரங்களில் எல்லாம் மனித நடமாட்டம் இல்லாத நிலை உருவாகி வருகிறது. காரணம் இந்தியா என்கிறது பீஜிங். தங்கள் வர்த்தக வாழ்வாதாரத்தை முற்றிலும் துடைத்து எறிய பார்க்கிறது மோடி அரசு நிர்வாகம் என்கிறார்கள்.

ஆனால் அவர்கள் போகும் பாதை குறித்து மறந்து விட்டார்கள்.

உலகில் தொழில்நுட்ப கட்டமைப்பு சேவைகளை எவ்விதம் எல்லாம் தவறாக பயன்படுத்த கூடாது என்பதற்கு உதாரணமாக வந்து விட்டது சீனா. பொதுவெளி பயன்பாட்டில் உள்ளதை தத்தெடுத்து வளர்ந்த சீனா, இன்று அதனாலேயே அகல கால் வைத்து அதளபாதாளத்தில் விழுந்து வருகிறது.

இதற்கு எல்லாம் அடிநாதமான ஆன்ட்ராய்டு தொழில்நுட்பமே ஓர் ஓப்பன் சோர்ஸ் வடிவமான லீனக்ஸ் குடும்பத்தை சேர்ந்தது தான். இதில் இன்று ஆன்ட்ராய்டு வர்ஷன் 10 வரை அனைத்து செல்போன்களில் வந்து விட்டது.

அநேகமாக ஆன்ட்ராய்டு வெர்ஷன் 15 6எ பயன் பாட்டில் வந்த விடும் என்கிறார்கள்.

அட அலிபாபா இந்த தரவுகளை வைத்து என்ன செய்து விட முடியும் என்கிறவர்களுக்காக…..

இந்த தரவுகளை சேகரித்து வைக்கவே சிட்டிசுபிரைன் எனப் பெயரிடப்பட்ட கிளௌட் ஞிடூணிதஞீ சர்வர் வழியாக அனுப்பி வைக்கப்படுகிறது.

இதன் பயன்பாடு என்ன என்பவர்களுக்கு ஓர் உதாரணம் சொன்னால் சுலபமாக புரிந்து கொள்ள முடியும். நீங்கள் ஒரு நபரை தேடுகிறீர்கள், கண்காணிக்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்/அவள் எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார்., என்ன பேசுகிறார், எந்தெந்த இடங்களில் எல்லாம் செல்கிறார், வங்கி கணக்கு எத்தனை, எவ்வளவு பணம் உள்ளது என்பது முதற்கொண்டு காலை என்ன சாப்பிட்டார் வரை தெரிந்து கொள்ள முடியும்.

அவர்கள் செல்லும் வழியில் உள்ள ஞிஞிtதி கேமரா பதிவுகளை நாம் பார்க்க முடியும். ஒரு வேளை அவர்கள் வீட்டில் கேமரா இருந்தால் நாம் அவர்களுக்கு தெரியாமல் பார்க்க முடியும், ஆன்ட்ராய்டு டிவி என்றால் அதன் வழியாகவும் பார்க்க முடியும். அவர்கள் செல்போனில் உள்ள மைக் மூலமாக அவர்களது குரலை கேட்க முடியும், இப்படி பல முடியும் இதில் சாத்தியம்.

இதனை வேறோருவர் இந்த தரவுகளை பணம் கொடுத்து வாங்க முடியும்.இன்று உள்ள காலச்சூழலில் இஃது எத்தகைய எதிர்வினை ஆற்றும் என்பதை யூகித்து பார்த்து புரிந்து கொண்டால் எத்தகைய வேலைகளில் எல்லாம் சீனா ஈடுபட்டு வருகின்றனர் என்பது நன்றாக புரியும்.காரணம் சீன சட்டம் அப்படி பட்டது, அது கேட்டால் இப்படி பட்ட தரவுகளை தருவதற்கு அங்கு பதிவு செய்த நிறுவனங்கள் அனைத்தும் தயாராக இருக்க வேண்டும் என்கிறது அவர்களது சட்டம்.

இது எல்லாம் சீனா மாத்திரமே செய்கிறதா வேறு யாரும் செய்யவில்லையா என்று நீங்கள் கேட்டால். …… ஆம் எல்லோரும் தான்.. என்பதே பதிலாக இருக்கும்.
அமேசான் உட்பட இணைய பயன்பாட்டில் உள்ள அனைத்தும் மேற்சொன்ன பலவற்றை கூடவோ குறைத்தோ இவற்றை செய்கிறது. ஆனால் அவைகளை அமெரிக்க அரசு கேட்டாலும் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இல்லை.

சரி அமேசான் நிறுவனங்களுக்காக அலிபாபா நிறுவனங்களை தடை செய்து விட்டதாக நாளை வேறு யாரேனும் ஊளையிடலாம். ஆனால் விஷயம் அதுவல்ல. இந்திய சந்தையில் புழக்கத்தில் உள்ள பணத்தை முறை கேடாக மடை மாற்றி இங்கு உள்ள நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வருகிறது சீனா என்று நம்புகிறது இந்திய அரசு. அதற்கேற்ப சில விஷயங்களை கண்டுபிடித்துள்ளனர்.

உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு நம் கணினி உள்ள தகவல்கள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான போது, அந்த தரவுகளை மீட்டு தர மூன்றாம் நபர் பேரம் பேசிய சம்பவம் ஞாபகம் இருக்கிறதா? அதில் அவர்கள் கேட்டது பிட்காயின். கிரிப்டோ கரன்சி என்பர். இவர்கள் கொரியா தீபகற்பத்தில் இருந்த இயங்கியது வரை மாத்திரமே கண்டு பிடிக்க முடியாது, மற்றைய தகவல்கள் எதுவும் இல்லை, ஆதாரங்களும் இல்லை.ஆனால் இவர்கள் பின்னணியில் அல்லது பின்நாளில் அலிபாபா நிறுவனங்களில் இணைந்து செயல்பட்ட தாக நம்பப் படுகிறது.

இவையெல்லாம் சேர்ந்து இந்திய கள்ள சந்தை ஒன்றை உருவாக்கி இயங்க விட்டுள்ளனர். புற்றீசல் போல் தோன்றி வளர்ந்து வரும் இணைய வர்த்தக நிறுவன பங்குதாரர்கள் பலரும் இவ்விதம் இந்தியாவில் உள்ள நுழைந்துள்ளதாக தகவல் உள்ளது.

விற்பனை செய்தால் தங்கள் பொருட்கள் தான் விற்க வேண்டும் என்கிற வர்த்தகம் இவர்களுடையது. இல்லை என்றால் ஒட்டு மொத்தமாக எதுவும் விற்க முடியாதபடி வேலை பார்த்து விடுவர். இப்படியாக தனி அரசாங்கம் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார்கள் கடந்த காலத்தில்., கிட்டத்தட்ட சில தொழில் களில் தற்போதும் இந்த அழிச்சாட்டியம் தொடரத்தான் செய்கிறது.

உதாரணத்திற்கு தீபாவளி கொண்டாட பட்டாசுகளை சிவகாசியில் இருந்து வாங்க கூடாது தங்களுடைய சீன பட்டாசு களையே வாங்க நிர்பந்தம் செய்தனர். அது முடியாது போகவே தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசு என்று கதை பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

இது ஏதோ பட்டாசு சமாச்சாரங்களில் மாத்திரம் இல்லை, தூத்துக்குடி காப்பர் கம்பிகள் வரை இவர்கள் ‘கை‘வரிசை உண்டு. இந்திய தேவைகளுக்கு என 32% இந்த ஆலை தான் பூர்த்தி செய்து வந்தது,தற்போது இறக்குமதி என்கிற ரீதியில் சூழல் உருவாகி வருகிறதுத.

என்றோ சுதந்திரம் கிடைத்து சௌகரியமாக இருக்கிறோம் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்பதிலும் நம் கவனம் செலுத்த வேண்டும், அது நம் கைகளில் தான் உள்ளது என்பதை மட்டும் சுலபமாக மறந்து விடுகிறார்கள்.

உஷாராக இருந்தால் தப்பலாம்…

உங்களது விபரங்கள் திருடப்படாமல் தவிர்க்க வேண்டும் என்றால், நீங்கள் பயன்படுத்தும் சீன செயலிகளை உடனே அன்இன்ஸ்டால் செய்துவிடுங்கள். சீன நிறுவனங்களின் போன்களை பயன்படுத்தினால், உங்கள் செல்போன் எங்கெல்லாம் செல்கிறதோ…படுக்கையறையாக இருந்தாலும் அங்கு உங்களுக்கு தெரியாமலேயே வீடியோ எடுக்க முடியும். எனவே சீன போன்களை தவிருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here