பிரதமர் மோடியை புகழ்ந்ததால் பறிக்கப்பட்ட டாக்டர் பட்டம்! அலிகார் பல்கலைக்கழகம் அடாவடி!!

உத்திர பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் 200 வது ஆண்டு விழா கடந்த ஆண்டு டிசம்பர் 22 ம் தேதி நடந்தது. இதில் இணையவழியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார்.
அதைத்தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவரான டேனிஷ் ரகீம் என்பவரிடம் பிரபல ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்று நிகழ்ச்சி குறித்து பேட்டி எடுத்தது. அதில் ரகீம், பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பாராட்டி பேசினார். இது ஒளிபரப்பானதும், பல்கலைக்கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் டேனிஷ்ரகீமை அழைத்து, பிரதமர் மோடியை மீடியாவில் புகழ்ந்து பேசியது நமது பல்கலைக்கழகத்தின் கலச்சாரத்திற்கு எதிரானது. நீ புகழ்ந்து பேசியதை ஏற்க முடியாது. இதற்கான பலனை நீ அனுபவித்தே ஆக வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தனது 5 ஆண்டு பிஎச்டி ஆராய்ச்சிப்படிப்பை ரகீம் முடித்தார். அதற்காக அவருக்கு பிஎச்டி மொழியியல் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அந்த பட்டத்தை திருப்பி அளிக்கும்படி டேனிஷ் ரகீமிற்கு பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆகியோருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளதோடு, உபி ஐகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த விவகாரம் வெளியே வந்ததும், பல்கலைக்கழகத்தின் சார்பில், மாணவர் மீது எடுத்த நடவடிக்கைக்கு சப்பைக் கட்டு கட்டப்பட்டுள்ளது. டேனிஷ் ரகீம் மொழியியல் துறையில் எல்ஏஎம் என்ற உட்பிரிவில் தான் ஆய்வு செய்தார், அவருக்கு தவறுவதலாக மொழியியலில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளதாக சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது. அதனால் அதை திரும்ப பெற்று எல்ஏஎம் என்று குறிப்பிட்டு பட்டம் வழங்கப்படுகிறது என்றுவிளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமரை பாராட்டியதற்கே ஒரு மாணவரை பழிவாங்க ஒரு பல்கலைக்கழகம் முனைகிறது என்பது நாட்டின் மதச்சார்பின்மைக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாகும். இந்த விவகாரத்தில் வழக்கம் போல எதிர்கட்சிகள் கள்ள மவுனம் சாதிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here