1980 களில் ஆந்திராவை கலக்கியவர் கத்தார். தனது எழுச்சியூட்டும் பாடல்களால் ஆந்திராவில், நக்சலைட் அமைப்பை கட்டமைத்தவர். 1949 ம் ஆண்டு பிறந்த விட்டல்ராவ் மார்க்சிஸ்ட்-லெனிஸ்ட் மக்கள் படை என்ற நக்சலைட் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டவர். மேல்சட்டைஅணியாமல், கையில் சிவப்பு துணியுடன் கூடிய தடியை வைத்திருப்பார். அவர் பாடும் பாடலைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிவார்கள்.
உணர்ச்சியை தூண்டும் பாடல்கள் மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர்களை வன்முறை பாதைக்கு கொண்டு சென்றார். 1980 முதல் 2010 ம் ஆண்டு வரை தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த கத்தார், ஒரு முறை காவல்துறையினரின் புல்லட்டுகளால் துளைக்கப்பட்டும், உயிர் பிழைத்தார். 2010 ம் ஆண்டு தீவிரவாத பாதையிலிருந்து வெளியேறினார். பின்னர் தெலுங்கான தனிமாநில கோரிக்கைக்காக நடந்த போராட்டத்திலும் பங்கேற்றார்.

பொதுவாக உலகளவிய கம்யூனிஸ்ட் கட்சியினர் அனைத்து மதங்களையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்து மதத்தை மட்டுமே விமர்சிப்பார்கள். இந்து மதத்திற்கு எதிராக மட்டுமே அரசியல் நடத்துவார்கள்.
ஆனால் கத்தார் எனும் விட்டல்ராவ், தன் மக்களை கவரும் குரலால், பாடிய பாடல் ஒன்று நேற்று வெளியாகி கம்யூனிஸ்ட்டுகளை அலர விட்டுள்ளது. ஆம் தெலுங்கானாவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ராமானுஜர் சிலைக்கு முன்பாக பிரபல தெலுங்கு பக்தி பாடலான ‘ரண்டிரோ ராமானுஜ…’ என்ற வாங்க.. ராமானுஜ… ராமானுஜ தாசரே….என்ற பக்தி பாடலை பக்தி ரசம் சொட்ட சொட்ட பாடியுள்ளார் முன்னாள் நக்சலைட் கத்தார்…. யூடியூபில் வெளியான இந்த பாடலை சில மணிநேரங்களில் பார்த்துள்ளனர்.
ரண்டி…ரண்டி.. தோழரே… ரண்டி…ரண்டி!
