இமாலய சாதனை படைக்கும் இந்திய ராணுவத்தினர்.

வலிமையில்,
வல்லமையில்,
தொழில் நுட்ப திறனில்
தன்னிகரற்று விளங்கும் ராணுவ வீரர்களாக வலம் வரும் இந்திய ராணுவத்தினர்.

இது அசூர கதியில் வளர்ந்த ராணுவம் இல்லை, புடம் போட்டு வார்த்தெடுத்த வீரர்கள் தாங்கள் என்று எல்லையில் நிரூபித்த நம் சகோதரர்கள். சுதந்திர இந்தியாவின் 74 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் பலம் வாய்ந்த படையணியாக தேசம் காக்கும் அவர்களை கொண்டாடுவோம்.

எல்லையில் சீனா உடனான உரசல் மற்றும் மோதல் ஏற்பட்டு இன்றோடு இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது. மோதல் ஏற்பட்ட பின் எல்லையில் நம் வீரர்கள் ஓர் அடி மண் கூட இழக்காமல் முன்னேறிய நிலையில் தான் இன்றும் உள்ளனர். அதே போலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வலிமையான இடங்களில் நிலை கொண்டுள்ளது நமது இந்திய ராணுவம்.

ஆனாலும் 1963 ஆண்டு கால வாக்கில் நாம் இழந்த பகுதிகளை இன்னமும் மீட்கவில்லை என்று புலம்பும் புல்லுருவிகள் இன்றும் நம்மிடத்தில் உண்டு.

யார் இவர்கள் என்று பார்த்தால் 2007-08 காலப்பகுதியில் சீனாவோடு கை கோர்த்து கொண்டு அருணாசல பிரதேச எல்லையோரங்களில் புதியதாக கிராமங்களை உருவாக்க துணை போனவர்களின் அடிவருடிகள். அவ்வளவு ஏன் ஏ.கே அந்தோனி அமைச்சராக இருந்த போது சுமார் 940 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தினை சீனா ஆக்கிரமித்த போதும் எதிர்ப்பே தெரிவிக்காமல் பின் வாங்க சொன்ன ராஜதந்திர லட்சணம் தான் இவர்களுடையது.

ஆனால் இன்று நிலைமை அவ்விதமா இருக்கின்றது?

சற்றே யோசித்து பாருங்கள்…..

இந்த மாற்றம் யாரால்?

இது தான் இந்திய தேசத்தில் பிறந்தவர்களுக்கும், அந்நிய மண்ணில் இருந்து வந்தவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

கடந்த ஆறு மாதங்களாக புதிது புதிதாக பற்பல விதங்களில் பல்வேறு விதமான ஆயுத தளவாட உற்பத்தி செய்யும் திறன் பெற்றதான இந்தியா, இத்தனை நாளும் ஏன் வெளிப்படாமல் போனது?

இந்த வாரத்தில் கூட உலகின் அதி நவீன 9mm மெசின் பிஸ்டல் தயாரித்து சாதனை புரிந்திருக்கிறது DRDO .நமது இதனை தயாரித்த விதம் இன்னமும் புதுமையானது, 3D பிரிண்டிங் வகையில் அலுமினியம் மற்றும் கார்பன் பைபர் கொண்டு தயாரிக்கப்பட்டு இருக்கிறது. சரியாக சொன்னால் பிரிண்ட் செய்து இருக்கிறார்கள். இந்த விதத்தில் தயாரிக்கப்பட்ட உலகின் முதல் துப்பாக்கி இது தான்.

இன்று உலக அளவில் உயர் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்கள் பயன்படுத்தும் இந்த வகை துப்பாக்கிகளை அதிக விலை கொடுத்து வாங்காமல் சுமார் 50,000 மதிப்பில் மட்டுமே நாமே சொந்தமாக தயார் செய்து கொள்ள முடியும்.

இது மாத்திரம் அல்ல, அக்னி முதல் ஆகாஷ் வரை, சௌரியா முதல் ஸ்டெல்த் தொழில்நுட்ப பண்புகளை கொண்ட கப்பல் வரை இன்று இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. இவையெல்லாம் இந்திய தயாரிப்பின் அடையாளங்களில் சில…..உலக அளவில் நம்மிடம் மாத்திரமே உள்ளது.அடுத்து வரும் 8 ஆண்டுகளில் இந்தியா சொந்தமாக போர் விமானங்களை தயாரித்து ஏற்றுமதி செய்யும் நாடாக உயர்ந்து விடும் என்று ஆண்டு அறிக்கை சொல்கிறது.

கிட்டத்தட்ட தன்னிறைவு நோக்கி வேக வேகமாக நடை போட்டு வருகிறது இந்தியா என்பதில் நாம் பெருமிதம் கொள்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here