அருணாசலில் சீனா பருப்பு வேகாது!!

ஒரு நாட்டின் கிழக்கு எல்லையில் உள்ள இடத்திற்கு மிக முக்கியத்துவமான தன்மை உண்டு. அனுதினமும் காலையில் விடியலை முதன் முதலில் பார்க்கும் இடம் என்பதால் தனி சிறப்பு அதற்கு உண்டு. அப்படி பாரத தேசத்தில் நம் இந்தியாவில் முதன் முதலில் சூரிய ஒளி படும் இடத்திற்கு அருணாசலப் பிரதேசம் என்றே பெயர்.

ஆதி காலத்தில் இதற்கு உதயகிரி என்கிற பெயர் இருந்ததாக ஒரு வரலாறும் உண்டு.இந்திய நாட்டின் கிழக்கு எல்லையில் உள்ள மாநிலம் இது. பல காலமும் இந்திய அரசு பாராமுகமாக இருந்து இடமும் இது தான். இது சுதந்திரத்திற்கு பிறகும் தொடர்ந்தது தான் இதில் உள்ள வேதனை.

அப்படி ஒன்றும் பாலைவன பிரதேசம் அல்ல இந்த பகுதி. இத்தனைக்கும் இயற்கை வளங்கள் கொட்டி வைத்திருக்கும் ஒரு சில இடங்களில் இது முதன்மையாக மாநிலமாக இருப்பதே நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

நம் தமிழகத்தில் மானம் உள்ள ஒருவரை குறிக்க… மயிர் நீப்பின் வாழா கவரிமான் என்று குறிப்பிட்டு சொல்லும் சொல்லடவு மிக பிரசித்தம். பலரும் அதனை ஏதோ மான் இனம் என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அது கவரிமா. ஒரு வகை மாடு.

இதன் உடலில் மேற்பரப்பில் ஓர் வகையாக ரோமம் அடர்த்தியாக வளரும். அதுவும் பனிக்காலத்தில் அடர்த்தியாகவும்,மற்றைய காலங்களில் அவை உதிர்ந்து இயற்கையாக அடர்த்தி குறைந்து விடும்.பனி பொழிவு காலத்தில் இதன் முடி இதற்கு குளிரை தாங்கும் கவசமாக செயல் படும் அந்த சமயத்தில் முடி இல்லையென்றாலோ இல்லை சரியாக வளர வில்லை என்றாலோ அந்த மாடு இறந்து போகும்.

இந்த வகை மாடுகளில் தாயகம் இந்த பிராந்தியம், அருணாசலப் பிரதேசம். இவைகளை நன்கு பராமரித்து வளர்ந்த பின்னர் இமயமலை அடிவாரத்தில் பொதி சுமக்க பயன்படுத்துவர். இந்த மாடுகள் அங்கு கன்று ஈனாது.இந்த அருணாசலப் பிரதேசத்தை தான் சீனா உரிமை கோரி அட்டகாசம் எல்லாம் செய்து இருக்கிறது. ஒரு முறை நமது இந்திய பிரதமராக பணிபுரிந்த மன்மோகன் சிங் வந்த விமானத்தை இங்கு தரையிறக்க கூடாது மீறினால் சுட்டு விழ்த்தப்படும் என்றெல்லாம் எச்சரிக்கை செய்து அழிச்சாட்டியம் செய்திருக்கிறார்கள்.

இவையெல்லாம் போதாதென்று அருணாசலப் பிரதேசம் உள்ள மக்களை சீன குடியுரிமை பெற்றவர்களாக அங்கீகரித்து தனி பாஸ்போர்ட் வரை கொடுத்து இருந்தார்கள். சீனாவின் எந்த பகுதிகளுக்கு சுதந்திரமாக செல்லலாம் என்று எல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.இதற்கு அவர்கள் சொன்னது இது தெற்கு திபெத்திய பிராந்தியம் என்று ஒற்றை வரியில் முடித்து விட்டிருந்தனர்.

சரி இது எவ்வளவு நிஜம்….. அல்லது இதற்கெல்லாம் என்ன ஆதாரம்? நம் கடந்த பதிவுகளில் பார்த்தது போல 1861 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு வெளியிட்ட வரைப்படத்தை எடுத்துக் கொண்டு வந்து இங்கும் அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருந்தனர். லடாக் விஷயத்தில் அது எப்படி பொய் என்று பின்னாளில் நிரூபிக்க பட்டதோ அது போலவே இங்கும் மெக்மோகன் வரையறை செய்த கோடு ஒன்றை பிடித்துக்கொண்டு தொங்கி கொண்டு இருந்தார்கள்.

இது அடர்த்தியான காடு நிறைந்த பூமி. எப்படி நம் பக்கத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மழை காடுகள் உள்ளனவோ அதுபோலவே இங்கும் இரண்டு பெரிய வனம் இருக்கிறது, அதனை யுனிசெப் அங்கீகரித்தும் இருக்கிறது, அவர்களிடம் ஒரு வரைபடம் இருக்கிறது. அதில் 1833 ஆண்டில் இங்கிலாந்து அரசு சீன ஆக்கிரமிப்பு செய்யும் காலத்தில் வரையறை செய்து வைத்திருந்த வரைபடம் இணைக்கப்பட்டு இருந்திருக்கிறது. வெகு நாட்களாக இது வெளியே தெரியாமல் இருந்துவந்த சமயத்தில் 2015 ஆம் ஆண்டு இந்தியா அமைத்த… அல்லது தன்னிச்சையாக செயல்பட்ட குழு ஒன்று தேடி கண்டுபிடித்து கொண்டு வந்து இருக்கிறார்கள்.

(அப்படி தான் ஆவணங்கள் சொல்கிறது. நீங்களும் அப்படியே தான் எடுத்து கொள்ள வேண்டும்.)இவர்கள் இதனை தேடிப் பிடித்து கொண்டு வந்ததே மகா சுவாரஸ்யமான கதை. கூகுள் படத்தில் இணைப்பதற்கு என்று சொல்லி ஆவணங்கள் இருந்த புகைப்படங்களை லவட்டிக்கொண்டு வந்து விட்டனர்.என் செய்வது… களவும் கற்று மறஎனும் வார்த்தை பிரயோகத்தில் உள்ள மறதி இப்படியும் மறக்காமல் இவர்களுக்கு கை கொடுத்திருக்கிறது. எப்படி.. எங்கு வைத்து… என்பதெல்லாம் வேண்டாமே.

இதனை கூகுள் எர்த் உடன் வைத்து ஒப்பிடுகையில் சீனா கிட்டத்தட்ட 37 கிலோமீட்டர் வரை காடுகளை காலி செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. நன்கு கவனியுங்கள் 37 கிலோமீட்டர் நீளத்திற்கு உள் நுழைந்து இருந்தனர் .சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இது 748 கிலோமீட்டர் மேலாக இருந்திருக்கிறது. இவையெல்லாம் 2007-08 ஆண்டு காலகட்டத்திற்கு பிறகே நடந்திருக்கிறது.

விஷயம் புரிந்து கொண்டு இருப்பீர்கள்.இந்திய அரசு நிர்வாகம் கொதித்தெழுந்தது‌. இவர்கள் இதனை சரி பார்த்து விதம் தான் படு சாமர்த்தியமானது. அப்போது இந்திய பிரதமர் சீனா சென்று இருந்தார். இவர் அங்கிருக்கும் சமயத்தில் சத்தம் இல்லாமல் சுத்தம் செய்து விட்டனர். சீனா அரவணைத்து பாதுகாக்கும் அரகன் ஆர்மி என்கிற பர்மிய படை வீரர்கள் பாதி பேர் மியான்மாருக்குள் புகுந்து கொண்டனர். சில பல நூறு பேர் தீடீர் என்று காணாமல் போய் விட்டனர்.

அநேகமாக காடுகளில் வழி தவறிய சென்று இருக்க கூடும். வந்துவிடுவார்கள் (!)…நம் பிரதமர் அங்கிருந்து வரும் வரை இந்த தகவல் பெய்ஜிங் போய் சேரவில்லை.பிறகு தகவல் போனதும் கடித்து குதறி தள்ளினார் நம் வல்லரசு கதாநாயகன் ஜிங் பிங். குதிக்காத குறை என்கிறார்கள் அந்நாளைய சம்பவங்களை நினைவு கூறுபவர்கள்.

ஒரு பதினோரு நாளைக்கு அருணாசலப் பிரதேசத்தில் வந்து முண்டு தட்டிக் கொண்டு இருந்தனர் சீன ராணுவத்தினர். காணாமல் போனவர்களை பற்றியோ இல்லை அவர்கள் இருந்ததற்கான அடையாளங்கள் குறித்தோ எந்த தகவலும் இல்லை.

பிறகு இந்திய ராணுவத்தினர் அங்கு வருவதை அறிந்து கொண்டு நழுவியிருந்தனர்.இது எல்லாம் நடந்து ஆண்டுகள் பல ஆகிறது. அப்போதே இந்தியா தீர்மானம் செய்து விட்டிருந்தது…இது காலை சுற்றிய பாம்பு என்று.

நீண்ட கால நோக்கில் திட்டங்கள் வகுக்கப்பட்டன…. எல்லை பகுதிகள் அனைத்திலுமே தீவிர கண்காணிப்பில் கொண்டு வந்தனர். இது கவனத்தை கவராமல் இருக்க பழைய பாக்கிக்காக பாகிஸ்தானை அவ்வப்போது தண்ணீர் தெளித்து தெளிய வைத்து தெளிய வைத்து அவர்களுக்கு பாடம் நடத்தினர்.

தேவை ஏற்படும் போது விஸிடிங் ப்ரோபஸராக நேரில் சென்று பாடம் எடுத்து விட்டு வந்தனர்.கிட்டத்தட்ட மூன்று ஆண்டு காலத் தவம். கடந்த ஆண்டு நடைபெற்ற மோதல் சம்பவம். அவ்வளவு கண கச்சிதமாக சுத்தமாக முடித்து வைத்து விட்டு காத்திருந்தனர்.

அப்போது சொல்லப்பட்டது இது தான். கடந்த காலத்தை பற்றி கேள்வி கேட்கவில்லை. இனி ஒரு பிடி மண்ணை கூட தொட முடியாது முடிந்தால் முயன்று பார்க்கலாம் என்று தெளிவு பட சொல்லி இருக்கிறார்கள். இங்கிலாந்து அரசு கை மாற்றி கொடுத்து சமயத்தில் என்னென்ன எவையெவையல்லாம் இருந்ததோ அவை அனைத்தும் இந்திய சொத்து. இந்தியாவிற்கு சொந்தமானது.சட்டரீதியிலான சொத்துக்களை எள்ளளவும் யாருக்கும் விட்டு தர முடியாது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார்கள்.

மீறினால்…. திபெத்திய பகுதிகளில் சீன ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டி வரும் என்று நேரிடையாகவே சீனாவிற்கு எச்சரிக்கை செய்து இருந்தார்கள். கைமேல் பலன் அருணாசலப் பிரதேசத்தில் தான் தெரிந்தது. புதியதாக கொடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டி இருப்பதால் பழையவை செல்லாது என்று அறிவித்துள்ளது சீனா.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here