இந்திய ராணுவ பீரங்கிகளில் முன்னணியில் உள்ளது அர்ஜுன் மற்றும் பீஷ்ம ரக பீரங்கிகள் ஆகும்…… இதில் அர்ஜுன் ரக பீரங்கிகளை முழுக்க முழுக்க தயாராவது ஆவடியில் தான்.
ஆவடி என்பதன் விரிவாக்கமே ஆர்ம்டு வெஹிக்கல் அன்ட் அம்யுனிஷன் டிபோட் ஆஃப் இந்தியா.(Armed Vehicle and Ammunition Depot of India)
விஜய் திவாஸ் என்கிற இந்தியா பாகிஸ்தானை போரில் வெற்றி கொண்டதை நினைவு கூறும் விதமாக டிசம்பர் மாதத்தில் 16ஆம் தேதிகளில் ராணுவ நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வர்.
அதுபோலவே இவ்வாண்டு ஆவடியில் உள்ள ஆஜ்ய ஸ்டேடியத்தில் ராணுவ பீரங்கிகளை கண்காட்சிக்கு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
கிட்டத்தட்ட 20,000 பேர் வரை பார்வையாளர்களாக வருவர் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் யாருமே எதிர்பாராத வண்ணம் நேற்றைய தினம் சுமார் இரண்டு லட்சம் பேர் வரை திரண்டு வந்து விட்டனர்.வரிசை மட்டுமே சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை இருந்தது.
முன் ஒரு காலத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய பாகிஸ்தான் போட்டியினை காண கூடிய கூட்டம் ஒரு கணம் மனதில் நிழலாடியது.வெகு நிச்சயமாக பாராட்ட வேண்டும் குழந்தைகளை அழைத்து வந்தவர்களை,ஒரு கட்டத்தில் ஒலிபெருக்கியில் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய காட்சி காண முடிந்தது.
பீரங்கி மீதெல்லாம் ஏறி நின்று கொண்டு இருந்தார்கள்.குழந்தைகளின் கண்களில் ஒரு வித மினுமினுப்பு… பிரகாசம் காண்பதற்கே அற்புதமாக இருந்தது.இவ்வளவு காதலா நம் தேசத்தின் மீது…… என ஒரு கணம் மனம் பேருவுவகை கொண்டது.
அங்கிருந்த பலருக்கும் அதன் ரகம் மற்றும் விபரங்கள் தெரியவில்லை என்ற போதிலும் அதனை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்.பள்ளி பருவத்தில் இருந்த பிள்ளைகள் பலருக்கும் பீரங்கிகளின் பாகம் குறித்த பல சந்தேகங்களை…. தெரிந்தவர்கள் ஆர்வத்துடன் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்கள்.

பல் சக்கரங்களில் கணக்கு உண்டா….. முன்பின்னாக மாற்றி போட முடியுமா என்றெல்லாம் கேள்வி கேட்டதை பார்த்தால் ஆச்சர்யமாக இருந்தது.
ஆரம்பத்தில் செல்ஃபி எடுத்து கொள்ள தான் இந்த கூட்டமோ என்று நினைத்து கொண்டு இருந்த வேளையில்…… பள்ளி பருவ குழந்தைகளின் கேள்வி கணைகள் தான் அந்த நினைப்பை மாற்றியது.பீரங்கிகளின் செயல்பாடு மற்றும் இஞ்சினை தனியே எடுத்து வந்து விளக்கமாக புரியும் விதத்தில் காட்சி படுத்தி வைத்திருந்தது நிச்சயமாக பாராட்டுக்குரியதே.
போதாகுறைக்கு பீரங்கி குண்டுகளை அதன் ரகங்களை கூடவே காட்சியில் வைத்து இருந்தனர்.ஆயுதம் செய்வோம்…எனும் பாரதியின் வாக்கு நிஜமான அந்த அற்புத தருணத்தை அர்த்த பாவத்தோடு விளக்கியதாக இது அமைந்திருந்தது.
இது போன்ற கண்காட்சிகளை நாடு எங்கிலும் ஏற்பாடு செய்ய வேண்டும்…. நம் தேசத்தின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினம் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக நாடு எங்கிலும் உள்ள பள்ளி சிறார் மத்தியில் எதிரொலிக்க வேண்டும்.
தேச பக்தி தானாகவே ஊற்று நீர் போலும் அவர்களது மனதில் சுரக்க இது உதவும். நம் பலம் நமது தேசத்தின் பாரம்பரியம் நமக்கு நன்றாக தெரிய வேண்டும்…. அவ்வாறு புரிந்து கொள்ள இந்த கண்காட்சி உதவும்.
தேசத்தின் மீதான பற்று பிறந்தால்… ஊழலற்ற சமுதாயம் தானே மலரும்.உலகில் இளம் தலைமுறையினரை அதிக அளவில் கொண்ட ஒரே நாடு நம் இந்தியா தான்….. அப்படி இருக்க அவர்களை சரியான விதத்தில் வழிநடத்த…. தேசத்தின் மீதான அக்கறை கொள்ள இது போன்ற கண்காட்சிகள் வெகு நிச்சயமாக உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.