பாகிஸ்தானின் பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருந்த பங்களாதேசத்திற்கு பாரத ராணுவவீரர்கள் போர் புரிந்து விடுதலை பெற்றுக் கொடுத்தனர்.
ஆனாலும் அந்த நன்றி அவர்கள் மனதில் இல்லை. அங்கு தொடர்ந்து சிறுபான்மை இந்துக்கள் மீது தொடர்தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் மாதத்தில் துர்காபூஜை பந்தலுக்குள் நள்ளிரவில் யாரும் இல்லாதபோது நுழைந்த இஸ்லாமியர்கள் சிலர், துர்கா சிலைக்கு அடியில் குரான் நூல் ஒன்றை வைத்து போட்டோ எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். பின்னர் அந்த படங்களை சமூகவலைதளங்களில் பரப்பினர். இதைத்தொடர்ந்து புனித நூலுக்கு அவமரியாதை நடந்துவிட்டதாக கூறி துர்காபூஜை பந்தல் அடித்து நொருக்கப்பட்டது. துர்கா மாதாவின் சிலைகளும் உடைக்கப்பட்டன. இந்துக்கள் பலரும் கொடூரமாக தாக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து இஸ்கான் கோயிலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று அங்கிருந்த துறவி ஒருவரையும், பக்தர் ஒருவரையும் கொடூரமாக கொலை செய்தது.
இதற்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்தது. இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். புனிதநூல் அவமதிக்கப்பட்டதாக வேண்டும் என்றே வதந்தியை பரப்புவதும், அதன் தொடர்ச்சியாக இந்துக்கள் மீதும், கோயில்கள் மீதும் தாக்குதல் நடத்தும் செயலில் சில அமைப்புகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே லால்மொனிராத் மாவட்டத்தில் உள்ள கிண்டுகுரி கிராமத்தில் இரு காளிகோயில்கள், ஒரு ராதாகிருஷ்ணர் கோயில் கதவுகளில் டிசம்பர் 31 ம் தேதி மர்ம நபர்கள், பசுமாமிசத்தை பிளாஷ்டிக் பையில் போட்டு தொங்கவிட்டுச் சென்றுள்ளனர்.
இதையறிந்த இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த இழி செயலை செய்த சமூகவிரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு போலீசார் உறுதியளித்துள்ளனர். ஆனாலும், பங்களாதேஷில் வாழும் இந்துக்கள் தொடர்ந்து பீதியுடனும், வழிபாட்டு உரிமை மறுக்கப்படும் நிலையிலும் வாழ்ந்து வருகின்றனர்.