உத்திரபிரதேச மாநிலம் மீரட் அருகேயுள்ள பன்ஸரேலி கிராமத்தைச சேர்ந்தவர் இர்பான் அலி. இவர் முடித்திருத்தும் கடை வைத்துள்ளார்.
இவரது கடையில் அதே கிராமத்தைச் சேர்ந்த முகமதுசமீர்(25) மற்றும் அவனது சகோதரர்கள் முகமது சாகீப், முகமது ஷா உள்ளிட்ட 4 பேர் முடிவெட்டுவது வழக்கம்.
ஆனால் முடிவெட்டியதற்கான பணத்தைக் கொடுக்காமல் நீண்ட நாட்களாக நிலுவை வைத்துள்ளனர்.
இதற்கிடையே நேற்று முகமது சமீரும், அவனது சகோதரர்களும் முடிவெட்டுவதற்காக இர்பான் அலியின் கடைக்கு சென்றனர்.
அப்போது, பழைய பாக்கியை கொடுத்தால் மட்டுமே முடிவெட்டுவேன் என்று இர்பான் அலி கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் முகமது சமீரும், அவனது இர்பான் அலி மீது துப்பாக்கியால் சராமரியாக சுட்டனர். இதில் அவர் அதே இடத்தில் இறந்துபோனார்.
தடுக்கவந்த இர்பான் அலியின் சகோதரர் இம்ரானின் காலில் குண்டு பாய்ந்தது.
அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முகமது சமீர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்களது மற்றொரு சகோதரனை தேடி வருகின்றனர்.