மீடியாக்களால் குறிவைக்கப்படும் பாரத்பயோடெக்!

உலகமே கொரோனா என்ற பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு கதறிக் கொண்டிருந்த போது, பாரதத்தில் பாரத் பயோடெக் நிறுவனம், தானாகவே அதற்கு கோவேக்சின் தடுப்பூசியை கண்டுப்பிடித்து சாதித்தது. இங்கிலாந்தின் சீரம் நிறுவனம் இங்கு கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கவே சஞ்சீவினி மலையை கொண்டு வந்த அனுமனைப்போல இந்தியாவை மற்ற நாடுகள் பார்த்தன.

ஆம். கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பூசிகளை விற்று உலக நாடுகளை சுரண்டலாம் என்று ஆவலுடன் காத்திருந்த சீனாவிற்கும், சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள மருந்து நிறுவனங்களுக்கும் பெரும் ஏமாற்றம்.

சொற்ப விலைக்கு பாரதத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டதாலும், அதை ஏழை நாடுகளுக்கு இலவசமாக கொடுத்ததாலும், தங்கள் தடுப்பூசிகளுக்கு குறைந்த விலையை நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயம் இந்த மருந்து நிறுவனங்களுக்கு ஏற்பட்டது.

அத்தோடு இந்தியாவும், அமெரிக்காவும் உலக சுகாதார மையத்தில் எடுத்த நடவடிக்கை காரணமாக சீனாவின் தடுப்பூசி பாகிஸ்தானை தாண்டி செல்லவில்லை.

இந்தியா தடுப்பூசியில் சுயசார்புடன் திகழ்ந்ததால் 150 கோடி டோஸ்களுக்கு மேல் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவின் மூன்றாவது அலை பிற நாடுகளை தாக்கியது போல இங்கு தாக்கவில்லை.

ஆனால் நம்நாட்டை போன்ற தேசபக்தியில் உச்சத்தில் உள்ள பத்திரிக்கை நிறுவனங்களை உலகில் எங்கும் பார்க்க முடியாது அல்லவா?

எந்த நிறுவனம் குறைந்த விலையில், இந்த நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக பணம் சம்பாதிக்கும் எண்ணமில்லாமல், அரசுடன் இணைந்து பாடுபட்டு வருகிறதோ, அந்த நிறுவனத்தின் மீது புழுதி வாரி தூற்றவும், மக்கள் மத்தியில் நம்பிக்கை இழக்கச் செய்யவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன இந்த ஊடகங்கள்.

கோவேக்சின் கண்டுப்பிடித்தவுடன், அது குறித்து பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய இந்த பத்திரிக்கைகள், எங்கோ நடந்த இயற்கை இறப்புக்கு கூட தடுப்பூசி காரணம் என்று அவதூறு பரப்பின. அவற்றிலிருந்தெல்லாம் மீண்டு வந்து சாதித்துள்ளது கோவேக்சின். தற்போது 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவேக்சின் செலுத்தப்படுகிறது.

கம்யூனிஸ்ட்டுகளுக்கு சீனாவின் மீது பாசம் எப்போதும் அதிகம் தான். உலகையே கொரோனாவால் சிதைத்த சீனாவை பாராட்டி, நம்ம ஊர் தீக்கதிர் கட்டுரை வெளியிட்டது. காம்ரேட் என்.ராம் தனது இந்து நாளிதழில் விளம்பரம் வெளியிட்டு விசுவாசத்தை காட்டினார். இன்னும் பல கம்யூனச சிந்தாந்தவாத பத்திரிக்கையாளர்கள், இந்திய செல்வம் தடுப்பூசி என்ற பெயரில் சீனாவிற்கு செல்லாமல் தடுத்த பாரத்பயோடெக் நிறுவனத்தின் மீது அடங்கா வெறியுடன் இருக்கின்றனர்.

சமீபத்தில் தி வயர், டைம்ஸ்ஆப் இந்தியா,டெக்கான் ஹெரால்டு, மணிகன்ட்ரோல் போன்ற ஊடகங்களில் வெளிவந்த பொய் தகவல்களை பத்தி, பத்தியாக வெளியிட்டு அவற்றின் உண்மை தன்மை குறித்த விளக்கத்தை விரிவாக பாரத்பயோடெக் அளித்துள்ளது.

இனியாவது இந்த வெளிநாட்டு பக்தர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here