ஒரு ஓட்டு பெற்றவர் பா.ஜ.க வேட்பாளரா?வெறுப்பை உமிழும் ஊடகங்கள்!!

தமிழகத்தில் ஊராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் எந்த கட்சியினராக இருந்தாலும் சுயேச்சை சின்னமே ஒதுக்கப்படும். கட்சி வேட்பாளராக நிற்க முடியாது. ஊராட்சி நிர்வாகத்தில் கட்சியாக பிரிந்து போட்டியிட்டால் வளர்ச்சிப்பணிகள் பாதிப்பு மற்றும் ஒருவருக்கு ஒருவர் பகை ஏற்படும் என்பதால் ஊராட்சிகளை நிர்வகிக்க கட்சி சார்பற்ற நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். பொதுவாக ஊராட்சிகளில் நபரைப் பொறுத்தே வெற்றிதோல்விகள் நிர்ணயிக்கப்படும். அரசியலில் எதிரும் புதிருமாக உள்ளவர்கள் கூட ஊராட்சி தேர்தலில் ஒரு அணியாக போட்டியிடுவதும் உண்டு. ஆனால் இந்த அடிப்படை விபரங்கள் கூட தெரியாமல் ஊடகங்களில் பணிபுரிவது நேற்று வெளிச்சத்திற்கு வந்தது. பல இடங்களில் ஊராட்சித்தலைவர் பதவியை தி.மு.க கைப்பற்றியது, அ.தி.மு.க கைப்பற்றியது என்று செய்திகளை வெளியிட்டு வந்தனர். இதனிடையே கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி 9 வது வார்டில் கார் சின்னத்தில் போட்டியிட்ட கார்த்திக் 1 ஓட்டு மட்டுமே பெற்றிருந்தார். அவர் பா.ஜ.கவைச் சேர்ந்தவர் என்றும், அவரது குடும்பத்தில் 5 ஓட்டுகள் உள்ளது. குடும்பத்தினரே ஓட்டுப்போடவில்லை என்று முன்னணி செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டன. ஊராட்சி வார்டு உறுப்பினராக கட்சி சார்பில் யாரும் போட்டியிட முடியாத நிலையில் எந்த அடிப்படையில் இந்த செய்தியை அவை வெளியிட்டன என்பது தெரியவில்லை. கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு தாங்காது என்பார்கள். ஆனால் இவர்களின் புளுகு 8 மணிநேரம் கூட தாங்கவில்லை. உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. பா.ஜ.க தரப்பில், பா.ஜ.க சார்பில் 9 வார்டு இடைத்தேர்தலில் யாரும் நிறுத்தப்படவில்லை. கார்த்திக் சுயேச்சையாக போட்டியிட்டவர், அத்தோடு அவர் வீடு 4 வது வார்டில் உள்ளது. அவரது குடும்பம் 9 வது வார்டில் குடியிருக்கவில்லை. இதிலிருந்தே பா.ஜ.க மீது அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற குறுகிய எண்ணத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க கட்சி சேனல்களில் வெளியிடுவதைக் கூட அரசியல் ரீதியான பார்வை என்று கூற முடியும். தங்களை நடுநிலை என்று கூறிக்கொள்ளும் செய்தி நிறுவனங்கள் எப்படி இதுபோன்ற பொய் தகவல்களை, அவதூறுகளை பரப்பலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here