ஏவுகணைப்போட்டியில் ரஷ்யாவை முந்திய இந்தியா!

உலகின் அதி நவீன S500 வான் பாதுகாப்பு சாதனங்களை இந்தியாவுக்கு தர தயார் – ரஷ்யா அறிவிப்பு.இது போக….. இந்த உலகில் ரஷ்யாவை தவிர வெளியே அது இருக்கும் இரண்டாவது நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் என்றும் அதிகார பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள் ரஷ்யர்கள்.

ஆனால் இந்தியா இதனை வாங்கப் போவதில்லை. அட அவ்வளவு ஏன் இதனை பெரிய விஷயமாகவே நமது தேசம் காட்டிக் கொள்ள வில்லை….

ஏன்? அதில் தான் விஷயம் இருக்கிறது.இதனை புரிந்து கொள்ள வேறோர் சமாச்சாரத்தையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்க பத்திரிகை ஒன்றில் இந்தியாவிடம் இந்த உலகில் அதிக நவீன அதி உச்ச செயல்திறன் கொண்ட ஹைப்பர் சோனிக் க்ருஸ் ஏவுகணை இருக்கிறது என்று சொல்லி அதிரடித்திருந்தார்கள்.

நமது தேசம் அதனை மறுக்கவும் இல்லை. அதேசமயம் ஆமோதிக்கவும் இல்லை. இந்த நிலையில்தான் கடந்த வாரத்தில் ரஷ்யா ஏவுகணை சோதனை ஒன்றை செய்யப்போவதாக அறிவித்தது.

உஷாரான உலகின் வல்லாதிக்க நாடுகள். ஏவுகணை சோதனையை ஒட்டி தரையிலும். வானிலும்… ஏன் கடலிலும் கூட உளவு கருவிகள் சகிதம் கண்காணிக்க ஆரம்பித்தனர்.

கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான கண்காணிப்பு ட்ரோன்கள் இந்த பணியில் ஈடு படுத்தப்பட்டன.

ரஷ்யா சொன்ன அந்த நாளும் வந்தது. வானில் ஏவுகணையை ஏவியது.பார்த்தால் அது ஹைப்பர் சோனிக் ஏவுகணை. ஆரம்பத்தில் சப் சோனிக் வேகத்தில் பயணித்த அது சடுதியில் எட்டு முதல் 14 மாக் வேகத்தில் பறக்க ஆரம்பித்தது.

அதேசமயம் ஒட்டு மொத்தமாக கண்காணித்து கொண்டிருந்த ரேடார் திரைகளில் இருந்தும் அது மறைந்தும் போனது. மலைத்து போனார்கள் கண்காணித்து கொண்டு இருந்தவர்கள். வாயடைத்து நின்றது உலகம். அமெரிக்கா மட்டுமே தன்னளவில் ஆடித்தான் போய் விட்டது என்கிறார்கள்.

இதற்கும் நம்மவர்கள் பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை.அதிர்ச்சியில் உறைந்திருந்த பல நாடுகளிலும் இதனையும் கவனிக்க தவிர வில்லை. ரஷ்யா சோதனை செய்த ஏவுகணையின் பெயர் ஜிர்கான். கடந்த ஏழு ஆண்டுகளாக வெவ்வேறான விதத்தில் தொழில்நுட்ப மேம்பாடுகளை அதில் சேர்த்து கொண்டே வந்திருக்கிறார்கள்.

அதன் கடைசி கட்ட சோதனை தான் கடந்த வாரத்தில் செய்து பார்த்தது. இந்த ரக ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை அடித்து வீழ்த்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது தான் S500. அதனால் தான் தர வரிசையில் உலகின் முதல் நிலை வான் பாதுகாப்பு சாதனமாக அது உயர்ந்து நிற்கிறது.இவ்வளவு மேம்பாடுகள் தாங்கி நிற்கும் ஒன்றை இந்தியா திரும்பி கூட பார்க்கவில்லை என்றால் என்ன அர்த்தம்..?

இதனை காட்டிலும் மேம்பட்ட ஒன்றை இந்தியா வைத்திருக்கிறது என்று அர்த்தம்.

அவ்வளவே சமாச்சாரம். தமாஷ் அல்ல.நிஜமாகவே தான்.ஏதோ ஒன்று அல்ல மாறாக மூன்று வகையாக வைத்து இருக்கிறார்கள்.நமது ICBM தொழில்நுட்பமே இந்த வகையை சார்ந்தது தான். இதற்கான விதை நமது முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் சிந்தனையில் உருவான வித்து தான்.

இன்று அது நமக்கு பலன் கொடுத்து கொண்டு இருக்கிறது.இந்த உலகில் இரண்டு விதங்களில் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை வடிவமைப்பு செய்து கொண்டு இருக்கிறார்கள்.ஒன்று க்ரூஸ்…மற்றொன்று பாலிஸ்டிக்.

க்ரூஸ் என்பது மிக குறைந்த உயரத்தில் இலக்கை நோக்கி துல்லியமாக பாய்ந்து தாக்குவது.பாலிஸ்டிக் என்பது நம் கணிதத்தில் சொல்லும் பாரபோல போல… பரவளையமாக…… பயணிப்பது.

சரியாக சொன்னால் பாதி வட்டம் போல் இதன் ஏவுகணை பாதை இருக்கும். ஏவுகணை வானில் பாய்ந்து வளிமண்டலத்தில் பயணித்து இலக்கு நோக்கி வேகமாக நகர்ந்து சென்று தாக்கும்.

அந்த சமயத்தில் அதன் மீது புவியீர்ப்பு விசையின் தாக்கமும் இருந்து சேதத்தை அதிகப்படுத்தும்.நம்மிடம் முதலில் சொன்ன க்ரூஸ் வகையில் பிரமோஸ் இருக்கிறது.இரண்டாவதாக சொன்ன பாலிஸ்டிக் வகையில் அக்னி வரிசை ஏவுகணைகள் அணி வகுத்து இருக்கின்றன.

ரஷ்யா சோதனை செய்த ஜிர்கான் ஏவுகணை, க்ரூஸ் மற்றும் பாலிஸ்டிக் கலப்பின ஜாதி. அதனால் தான் S500 வான் பாதுகாப்பு சாதனங்களில் பலவும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகள் கொண்டதாக இருக்கிறது.

ஆனால் நம் இந்தியா வசம் மாத்திரமே மூன்றாவது ரகமாக ஸ்காரம்ஜெட் இஞ்சின் தொழில்நுட்ப பண்புகளை கொண்ட ஏவுகணை ஏவு வாகனம் ஒன்றும் இருக்கிறது. அதுவும் வெற்றி கரமாக சோதனை செய்து பார்த்து இருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன்….. அக்னி ஏவுகணை வரிசையில் உள்ள எது ஒன்றோடும் இந்த ஹைப்பர் சோனிக் கிளைடர் வாகனம் பொருத்தி ஏவ முடியும். தற்சமயம் இந்த உலகில் வேறு எவரிடமும் இந்த வகை ஹைப்பர் சோனிக் கிளைடர் வாகனம் இல்லை.

இன்னமும் கூட சரியாக சொன்னால்….. நாம் மேம்படுத்தி வைத்திருக்கும் பிரமோஸ் 2 ஏவுகணை தான் இன்றைய ஜிர்கான் ஏவுகணை. நமது பிரமோஸ்-2 ஏவுகணைகளில் பல அதி நவீன சாதனங்களை பொருத்தி சோதனை செய்து பார்த்து இருக்கிறோம்.

ஏவிய பிறகு எந்த ஒரு இடைமறிப்பு சாதனங்களாலும் இதனை கண்டுபிடிக்க முடியாது. ஒரே நேரத்தில் ஒரு சமயம் சப் சோனிக் வேகத்திலும் மற்றொரு சமயம் சூப்பர் சோனிக் வேகத்திலும் மாறி மாறி பறக்கும் திறன் கொண்டது இது.

அதுபோலவே திட்டமிட்ட இலக்கை பாம்பு போன்று வளைந்து நெளிந்து சென்றும் தாக்கும் வல்லமை கொண்டது.அதாவது இந்த பிரமோஸ் ஏவுகணை-2 வை வானில் வைத்து பிடிக்க முடியாது. ரேடார் சிஸ்டத்தின் சிக்கினால் அல்லவா குறி வைத்து தாக்க….

பொதுவாக ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் என்பது வேகத்திற்கு மட்டுமே பெயர் போனதல்ல… கண்டம் விட்டு கண்டம் பாயும் ICBM தொழில்நுட்ப பண்புகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும். இதன் அர்த்தம்… இந்த ரக ஏவுகணை வானில் ஏவிய பின்பு வளிமண்டலத்திற்குள் பாய்ந்து பூமியை ஒரு சுற்று சுற்றி வந்துவிடும் வல்லமை கொண்டது.

அந்த சமயத்தில் பூமியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இலக்கு மீது புவியீர்ப்பு விசையையும் சேர்த்து கொண்டு வந்து தாக்கும்.

சமீபத்தில் சீனா இந்த வகை ஹைப்பர் சோனிக் கிளைடர் வாகன சோதனை ஒன்றை செய்து பார்த்து. அப்போது தாக்குதல் இலக்கில் இருந்து 480 தள்ளி சென்று தாக்கியது. நமக்கோ நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் இருந்து 73 மீட்டர் தள்ளி சென்று தாக்கியது.அதற்கே நம்மவர்கள் மிகவும் விசனப்பட்டதாக சொல்வர்.

அதனை ஒற்றை இலக்க அளவில்,அதாவது பத்து மீட்டர் குறுக்களவில் இலக்கை துல்லியமாக தாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஓர் சுவாரஸ்யமான சமாச்சாரம் உண்டு. S500 வான் பாதுகாப்பு சாதனங்களை கொண்டு குறைந்த வட்டப்பாதையில் சுற்றி வரும் செயற்கை கோள்களையும் தாக்கி அழிக்க முடியும்.

சமீபத்தில் ரஷ்யா இது போன்ற ஒன்றை செய்து காண்பித்தது. உலகின் பல நாடுகளிலும் அதற்கு கண்டனங்கள் பறந்ததன. காரணம் ரஷ்யா தாக்கிய செயற்கை கோள் வானில் பல துண்டுகளாக சிதறி விண்வெளி ஆய்வு மையத்தை பதம் பார்த்தது. இன்னமும் 1500 சிறு சிறு துண்டுகளாக சிதறி விண்வெளியில் மிதந்து கொண்டு இருக்கிறது.

நம் தேசமும் இது போன்ற சோதனை ஒன்றை செய்து பார்த்து இருக்கிறார்கள் தெரியுமோ? நம்மவர்கள் ஏவுகணை ஒன்றை ஏவி செயற்கை கோளை துளைத்து…. துளைத்த வேகத்தில் அப்படியே அதனை வளிமண்டலத்தில் இழுத்து வந்து வெடிக்க செய்ததால் புவியீர்ப்பு விசையால் முற்று முழுதாக எரிந்து சாம்பலாகி போனது.

செயற்கை கோள் இருந்த தடயமே தெரியாமல் அழித்து சாதித்து இருக்கிறார்கள் நம்மவர்கள்.இப்பொழுது சொல்லுங்கள் நமக்கு ரஷ்ய தயாரிப்பு S500 வான் பாதுகாப்பு சாதனம் தேவையா? இல்லை…….. ரஷ்ய தயாரிப்பு ஹைப்பர் சோனிக் ஏவுகணையை வாய் பிளந்து பார்க்கத்தான் வேண்டுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here