போலி சீனா பை பை….தெறிக்கவிடும் நெட்டிஸன்கள்.

சமீபத்தில் கிருஸ்துவ புத்தாண்டை முன்னிட்டு சீனா இந்திய எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் வைத்து தங்கள் நாட்டு கொடியுடன் போஸ் கொடுத்து செய்தி வெளியிட்டு இருந்தார்கள்.

பின்னர் அது கல்வான் பள்ளத்தாக்கு பகுதியே இல்லை என்று இந்தியா ஆதாரபூர்வமான தகவல்களோடு எடுத்து சொன்னது….. போதாக்குறைக்கு மோதல் நடந்த இடத்தில் தான் தாங்கள் இருப்பதாக இந்திய தேசிய கொடியுடன் தகவல் வெளியிட்டு அதிரடித்திருந்தார்கள்.

இதற்கு ஒரு படி மேலே போய் அவர்கள் அசல் ராணுவ வீரர்களே இல்லை…. நடிகர்கள்… அதுவும் சீன தொலைக்காட்சி நட்சத்திரங்கள் என உண்மையை உளறி இருக்கிறார்கள் சீனர்கள். தலையில் அடித்து கொண்ட பெய்ஜிங்,….. அதாவது அது இந்திய எல்லையில் கல்வான் மோதலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தங்கள் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் இடம் பெற உத்தேசித்து இந்த காட்சிகளை படமாக்க பட்டது என்று விளக்கம் அளித்தது.

விடுவார்களா…..

முன் ஒரு சமயம்….

இந்திய எல்லையில் சீனா ராணுவம் உட்புகுந்து நமது நாட்டிற்கு சொந்தமான பல பகுதிகளை பிடுங்கி கொண்டது….. இது குறித்து அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் இந்திய நாடாளுமன்றத்தில் வைத்து கேள்வி கேட்ட போது அவை புல் பூண்டு முளைக்காத கட்டாந்தரை இடங்கள்…. தவிர அவைகளால் நமக்கு பயனில்லை…. செலவினங்கள் தான் அதிகரிக்கும் என்று பதில் சொல்லி இருக்கிறார்.

இதற்கு குறுக்கிட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலையில் முடி கொட்டி வழுக்கை விழுந்த சமயத்தில் அது பயன் அற்றது என்று சொல்வீர்களா என்று எதிர் கேள்வி கேட்டார்….. பின்னாளில் ஆட்சி மாற்றம் நடந்த சமயத்தில் இரண்டு ரூபாய் நாணயங்களில் நேருவின் தலையில் தொப்பி இல்லாமல் அச்சடித்து வெளியிட்டு அதிரடித்திருந்தார்கள்.

அப்படி அந்த சமயத்தில் நாடாளுமன்றத்தில் வைத்து சொன்னதோடு இல்லாமல்….. இந்தியாவும் சீனாவும் நட்பு நாடு என்கிற ரீதியில்…. இந்தோ சீனா பாய் பாய் என்கிற கோஷத்தை இந்தியாவில் நேரு முன்னெடுத்தார். இதன் பலனாக இன்று வரை இந்த 36,780 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்திய இடம் சீனா வசமே இருந்து வருகிறது.

ஆனால் தற்போது ஆட்சியில் உள்ள அரசு நிர்வாகம் அப்படி அல்ல… எல்லை மீறி உள்ளே நுழைந்தால் என்று இல்லை…. அப்படி ஒரு எண்ணத்தோடு இந்திய சீன எல்லை கோட்டிற்கு அருகில் வந்தால் கூட பை பை சொல்லி விண்ணுலக பயணத்திற்கு விசா இல்லாமல்… தோட்டா செலவு இல்லாமல் அனுப்பி வைத்து விடுவார்கள் என்பதை நம்மை காட்டிலும் அவர்கள் மிக நன்றாகவே உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

போதாக்குறைக்கு ஒரு லைவ் டெமோ வேறு காட்டியிருக்கிறார்கள் நம்மவர்கள்.

தொலைக்காட்சி தொடருக்கான ஊடக நடிகை, நடிகர்கள் என பெய்ஜிங் விளக்கம் அளித்த பிறகு நம் தேசத்து நெட்டில்ஸ்…..

போலி எதற்கு….
நிஜம் எப்படி இருக்கும் என்று பார்க்கிறீர்களா…. என கேள்வி கேட்டு 2018 IPS பேட்ச் அங்கிட்டா சர்மா என்பவரது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இவர் நக்ஸலைட்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழந்து வருகிறார்.

இந்த நக்ஸல் பாரி அமைப்பினருக்கு கடந்த காலத்தில் நிதியுதவி செய்து அவர்களை வளர்த்து விட்டது சாட்சாத் சீனாவே தான். கம்யூனிஸ்ட் சித்தாந்தம் என்கிற பெயரில் இவர்களை ஒருங்கிணைத்து நிதியுதவி அளித்து இந்தியாவிற்கு எதிராக போராட தூண்டி விட்டு வந்தது சீனா.
இவர்களை ஒன்றும் செய்ய முடியாது…. மீறினால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும்…. இவர்கள் பதுங்கி இருக்கும் காடுகள் முற்றிலும் அழிக்கப்படும்….. வன விலங்குகள் தவிக்கும்…. ஊருக்குள் வந்து விடும் என்றெல்லாம் கதை விட்டு கொண்டு வர விலங்குகளை கொன்று அவற்றின் உள்ளுறுப்புகளை திருட்டு தனமாக சீனாவிற்கு மருந்து தயாரிப்பு என்று சொல்லி ஏற்றுமதி செய்து கொண்டு இருந்தார்கள்.

தற்போதைய அரசு பொறுப்பேற்றதும் முற்று முழுதாக அவர்களை துடைத்து எறிந்து இருக்கிறார்கள்.விமானப்படை ஹெலிகாப்டர்களை கொண்டு காட்டின் உட்பகுதியில் தரை இறங்கி அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகரங்களை நோக்கி வெளியேற மறைந்திருந்த நக்ஸலைட்களுக்கு வேறு வழி இன்றி சரண் அடைந்து இருக்கிறார்கள்…. மீறியவர்களுக்கு பரலோக ராஜ்யம் சொந்தமாகி இருக்கிறது.

இந்த வேட்டையில் ஒரு பிரிவுக்கு இவர்… இந்த அங்கிட்டா சர்மா தலைமை தாங்கி இருக்கிறார். ஒரு இடத்தில் 47 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் இவரை தாக்க வர.. உடன் இருந்த இரண்டு காவலர் உட்பட மூன்று பேர் மட்டுமே இருந்திருக்கிறார்கள் இவர்கள்….. சற்றும் யோசிக்காமல் நக்சலைட் களை நோக்கி சுட்டு இருக்கிறார். பொங்கி வந்த பெருங் கூட்டத்தில் மூன்று பேரை சம்பவ இடத்திலேயே பொசுங்கி விட…. மற்றவர்கள் பதைபதைக்க சரண் அடைந்து இருக்கிறார்கள்….
அவர்களை ஒட்டுமொத்தமாக மடக்கி பிடித்து ஆயுதங்களை பறிமுதல் செய்து நடத்தியே அழைத்து வந்திருக்கிறார் இவர். இது என்ன பிரமாதம் என்பவர்களுக்கு…… அந்த சமயத்தில் அவருடைய துப்பாக்கியில் குண்டுகளே இல்லை …… தீர்ந்து விட்டு இருக்கிறது… இது அவருக்கு மட்டுமல்லாமல் உடன் வந்த காவலர்களுக்கும் மிக நன்றாகவே தெரியும் என்கிறார்கள். ஆனாலும்கூட இறந்தவர்கள் உட்பட எவரையும் விட்டு விடாமல்….. அவர்களை விட்டே சுமக்க செய்து நடத்தியே சுமார் இரண்டரை கிலோமீட்டர் அழைத்து வந்திருக்கிறார் அவர்.
அந்த வனாந்தரத்தில்…
அந்த சாயங்கால வேளையில்… புலியின் உறுமல் சத்தம் போன்ற இவரது குரல் தான் அந்த காடுகளில் எதிரொலித்தது என்கிறார்கள் கைது செய்யப்பட்ட நக்ஸலைட்கள். இவர் சுட்டுக் கொன்ற நக்ஸல்பாரிகளில் ஒருவன் தனி ஆளாக ஒரு கிராமத்தை கொளுத்தி அங்கு இருந்த 13 பேரை எரித்துக் கொன்று இருக்கிறான்.
அவனையே இவர் நடு நெற்றி பொட்டில் குறி பார்த்து ஒரே தோட்டாவில் சுட்டு கொன்றது தான் இவர்களை அசைத்து விட்டது என்பது பின்னாளில் தான் தெரியவந்தது. இவருக்கும் அந்த விஷயம் சுடும் சமயத்தில் தெரியாது என்பது தான் ஹைலைட். ஒரு குண்டு கூட வீணாக கூடாது…. அதேசமயம் அவர்களின் மன உறுதியை குலைக்க வேண்டும் என்கிற நினைப்பு மாத்திரமே அந்த சமயத்தில் தனக்கு இருந்ததாக இவர் பதிவு செய்து இருக்கிறார்.
இந்த தகவலோடு பகிர்ந்து வரும் நெட்டிஸின்கள்…… உங்களுக்கு ஏதேனும் சாம்பிள் பார்க்க வேண்டுமா என
கண்ணா ……. லட்டு தின்ன ஆசையா…
என்கிற பாணியில் வெளிநாடுகளில் வாழும் சீனர்களை டேக் செய்து கலாய்த்து வர பேய் அறைந்தார் போல அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள் அவர்கள்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் சீனர்களை குஷி படுத்த பெய்ஜிங் செய்த ஏற்பாடு….. தற்போது அவர்கள் நினைத்து பார்க்காத பின் விளைவுகளை உண்டாக்கி இருக்கிறது என்பது இதில் உள்ள நகைமுரண்.

நம்மவர்கள் இப்படி செய்ததற்கு பின்னணியில் ஒரு விஷயம் இருக்கிறது. சீனாவில் சமீபத்தில் சக்கை போடு போட்ட இந்திய திரைப்படம் பாகுபலி என்கிறார்கள். கிட்டத்தட்ட 900 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது அந்த சமயத்தில்… ராஜ மாதா கதாபாத்திரம் மீது தனி ஈர்ப்பே ஏற்பட்டு இருக்கிறது அங்கு உள்ள சீனர்கள் மத்தியில்….. அதனைத் தொடர்ந்தே இவர் பற்றின செய்திகளை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.
நொந்து நூடுல்ஸாக இருக்கிறது பெய்ஜிங். யாருகிட்ட…என்பது போலான தோற்றத்தை இது ஏற்படுத்தி விட்டது.
அவை நிஜம் தானே….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here