ஜனவரி 1 முதல் சீனா புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதில் எல்லையை காவல் காக்கும் பொறுப்பை எல்லையில் காவல் இருக்கும் வீரர்கள் வசமே ஒப்படைத்து இருப்பதாக அந்த சட்டம் சொல்கிறது.( China new land law)
அதாவது பெய்ஜிங்கிற்கு வேண்டுமானால் இது புதிய சட்டமாக இருக்கலாம். ஆனால் நம் தேசத்தில் நமது அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த சட்டத்திருத்தத்தை கொண்டு வந்து அதனை நடைமுறை படுத்தி இருக்கிறார்கள்.
அந்த வகையில் இது நமக்கு பழைய சட்டம் தான். ஆனால் சீன ராணுவத்தினருக்கு இது புதியது. இதனை அவர்கள் சீனாவோடு தரை எல்லையை பகிர்ந்து கொள்ளும் அனைத்து தேசங்களுக்கும் பொருந்தும் என கதை சொன்னாலும்.மிக முக்கியமாக லடாக் மற்றும் அருணாசலப் பிரதேசத்தில் பிரதியிடவே முயற்சி செய்து பார்ப்பார்கள் என்கிற யூகம் எழுந்துள்ளது.
வீறு கொண்டு எழுந்து நின்ற இந்தியாவை திகைப்புடன் பார்த்து பதுங்கிய சீனா, ஒரு கட்டத்தில் பாய்ந்து தாக்க பல முயற்சிகளை மேற்கொண்டது . ஒவ்வொரு முறையும் மூக்கறுத்து அனுப்பி வைத்தனர் நமது ராணுவத்தினர்.
அந்த வகையில் இந்த ஆண்டு வரும் கோடைக்காலத்தில் எப்படியாவது ஒரு சிறிய தாக்குதலுக்கு தேவைப்படும் அனைத்தையும் மெனக்கெட்டு செய்து கொண்டு இருக்கிறார்கள்.
ஏனெனில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முற்றுகை இட்டு வரும் சீன படை வீரர்களுக்கான செலவு ஏகத்துக்கும் எகிறி வருகிறது. தவிர ஜிங் பிங் எடுத்த ஒரு தவறான பொருளாதார கொள்கை முடிவினால் தற்போது அங்கு வீழ்ச்சியை சந்தித்து வருகிறார்கள் அவர்கள்.
கடந்த பத்தாண்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார மந்தநிலை மற்றும் வளர்ச்சி விகிதம் சரிந்து வருகிறது அங்கு.இதனை நேர் செய்ய, அல்லது மடை மாற்ற இரண்டு வாய்ப்புகள் மாத்திரமே அதற்கு உள்ளது.
ஒன்று முதலீட்டு வர்த்தகம் மீதான தனது பிடியை தளர்த்துவது அல்லது எல்லையில் சிறிய அளவிலான போர் ஒன்றை கொண்டு வந்து மக்களை திசை திருப்புவது.இரண்டுமே அதற்கு கத்தி மேல் நடக்கும் சமாச்சாரங்கள் தான்.
எல்லையில் போர் என்ற ஒன்று வந்தால் அது இந்திய எல்லையாக இருக்காது, தைவானாகதான் இருக்கும். காரணம் இத்தனை நாளும் தங்கள் வசம் இருந்த அத்தனை அதரப்பழசான ஆயுதங்களை கொண்டு தைவானை தாக்குவது…. அதன் மூலம் தைவானை கைப்பற்றவில்லை என்றாலும் கூட பரவாயில்லை…
அடுத்த பத்து ஆண்டுகளுக்கு உண்டான சேதத்தை அங்கு ஏற்படுத்துவது என்கிற திட்ட வியூகம் அதனிடம் உண்டு என்கிறார்கள் சீனாவின் போக்கை நன்கு உணர்ந்தவர்கள். தைவான் காக்க அமெரிக்கா வருவது சந்தேகம் என்கிறார்கள். ஆயுத தளவாடங்களை தருகிறோம். நீங்களே பார்த்து கொள்ளுங்கள் என்கிற தொனி சமீபத்திய நாட்களில் ஜோபைடன் நிர்வாகத்தில் தெரிகிறது என்கிறார்கள்.
ஆஃப்கானிஸ்தான் விஷயத்திற்கு பிறகு உள் நாட்டில் அவரது செல்வாக்கு சரிந்திருப்பது மாத்திரம் அல்ல……. அதன் நட்பு நாடுகளிலும் நம்பகத்தன்மையை அவர்கள் இழந்து நிற்கிறார்கள்.சீனா விஷயத்தில் பைடன் மென் போக்காளராக இருக்கிறார் என்று உளவு துறை வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
இதனை வெளிப்படுத்தும் வகையில் ஜப்பான் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது….. தைவானில் ஏதேனும் பிரச்சினை என்றால் உடனடியாக ஜப்பான் களத்தில் இறங்கும் என்று வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார்கள்.
இது அமெரிக்காவில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் சின்னஞ்சிறிய நாடான ஜப்பான் தோள் தட்ட பைடன் பயந்து நடுங்கிக் கொண்டு இருக்கிறார் என அமெரிக்கர்கள் வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர் அங்கு.
போதாக்குறைக்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நோய் தொற்று மிக வேகமாக எகிறி கொண்டு வருகிறது.பலருக்கும் அவரை…. அவரது பதவி காலம் முடிவதற்கு முன்பாக, அதிபர் பதவியில் இருந்து அகற்றிட வழிவகைகள் இருக்கிறதா என விவாதிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இது உலக அளவில் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.ஆனால் பைடன் தரப்போ இது தந்திரமான காய் நகர்த்தல் என்கிறார்கள்….. கிட்டத்தட்ட நம் திரைபடத்தில் வரும் ஒரு கேரக்டர் சொல்லுமே…… இதுவும் டிசைனில் இருக்கிறது என்று…. அது போல் தெரிகிறது அவரது வாதம். அதாவது பைடன் நிர்வாகம் ரஷ்ய உக்ரைன் மோதலை தொடங்கி அதனை பிரிட்டன் மேற்பார்வையில்… நேட்டோ அங்கத்துவ படைகள் ஊடாக போர் திட்டமிடலை கண்காணிக்க சொல்லி விட்டு…
சீனாவின் ஆதிக்கத்தை அழிக்க தைவானுக்கு அவர்களை வரவழித்து ….. அங்கும் போரில் நேரிடையாக பங்கு பெறாமல்…. அதன் நட்பு நாடுகளை களம் இறக்கி போர் திட்டமிடலை நடத்துவது என்கிறார்கள்…. இதனை கவனிக்க ஆஸ்திரேலியாவை முன் நிறுத்த திட்டமிட்டு அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் சொல்கிறார்கள்.
இது மிகவும் தந்திரமான காய் நகர்த்தும் காரியத்தை செய்து கொண்டு இருப்பதாகவும் சொல்கிறார்கள்.ஏனெனில் ரஷ்ய உக்ரைன் மோதலில்… பிரிட்டன் மேற்பார்வையில் என்று சொன்னாலும்…. நேட்டோ அங்கத்துவ நாடுகள் தான் களத்தில் இறங்க வேண்டி வரும். இன்று ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நேட்டோ ராணுவ படைகளுக்கு பிரான்ஸ் தலைமை ஏற்க இருக்கிறது. காரணம் இது ஒரு சுழற்சி முறையில் வரும் பதவி காலம்.
அந்த வகையில் பிரான்ஸ் தான் யுத்த முஸ்தீப்புகளை மேற்கொள்ள வேண்டி வரும்.இது ஒரு புறம் இருக்க…..தைவானில் வைத்து சீனாவை வழிக்கு கொண்டு வரும் காலங்களில் ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தான் களத்தில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
நேரிடையாக அமெரிக்கா களத்திற்கு வராமல் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.தைவான் மீது தாக்குதல் என்றால் ஜப்பான் உடனடியாக செயலில் இறங்கும் என பகிரங்கமாக அறிவித்ததின் பின்னணி இது தான் என்கிறார்கள்.
ஏனெனில் ஜப்பான் சீனா மோதல் உள்ளது போலவே ஜப்பான் ரஷ்யா மோதல் ஒன்று தீர்க்க படாமல் இருக்கிறது ஒரு தீவு விஷயத்தில்… ஆக மறைமுகமாக ரஷ்யாவை அதன் இரண்டு முனைகளில் போருக்கு கொண்டு போக இருக்கிறார்கள்.
இந்த ஒரு சூழ்நிலையில் ஜப்பான் அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஒன்று இரண்டாம் உலக யுத்த காலம் தொடங்கி அமலில் இருக்கிறது. அது ஜப்பானுக்கு என்று தனியாக ராணுவம் ஒன்றை அதிக அளவில் வைத்து பராமரிக்க கூடாது.
ஜப்பானை யாரேனும் தாக்க வந்தால் அவர்களை அமெரிக்கா எதிர் கொள்ளும் என்று சொல்லி ஒப்பந்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.அந்த வகையில் சீனா அல்லது ரஷ்யா, ஜப்பான் மீது தாக்குதல் நடத்தும் சமயத்தில் உள்ளே வரலாம் என்று விவரமாக காய் நகர்த்தி வருகின்றனர் அமெரிக்கர்கள்.
ஒரு பக்கம் பிரிட்டன் வசம் அமெரிக்காவின் அதி நவீன ஆயுத தளவாடங்கள்…… F35 உட்படமற்றொரு பக்கம் ஜப்பான் வசம் அதி நவீன ஆயுத தளவாடங்கள்…. F35 உட்பட…ஒரு பக்கம் நேட்டோ ராணுவ படைகள்……மறுபக்கம் குவாட் கூட்டணி. இந்த இரண்டிலுமே இந்தியா வருகிறது….. நேரிடையாக மற்றும் மறைமுகமாக….எவ்விதம் எனில் குவாட் கூட்டமைப்பு நாடுகள் என்று பார்த்தால் அதில் இந்தியா அங்கத்துவ நாடு.
தவிர இந்தியாவிற்கு பிரதானமாக குடைச்சல் கொடுக்கும் நாடு என்று பார்த்தால் அது சீனா.நேட்டோ ராணுவ படைகளின் தற்போதைய தலைமை பிரான்ஸ். இந்தியாவின் நட்பு நாடு. நாளைய இந்தோ பசிபிக் பிராந்தியத்தை கட்டி ஆள இந்தியாவின் கூட்டணி நாடு.
அங்கும் தென் சீனக் கடல் பிராந்தியத்தில் பிரச்சினை செய்வது சீனா தான். ஆக கட்டாயம் இந்தியாவை சீனா எதிர் கொள்ள வேண்டி வரும். அப்படி ஒரு திட்டமிடல் செய்து கொண்டு வருகிறது அமெரிக்கா. கொஞ்சம் இடியாப்ப சிக்கலை உண்டாக்கி இருக்கிறது அது.இது அத்தனையும் உருவாக்க நினைக்கும் அமெரிக்கா இந்த மேற்படி சூழ்நிலையில் என்ன செய்ய உத்தேசித்து இருக்கிறது என்பதில் தான் விஷயமே அடங்கி இருக்கிறது.
ஒதுங்கி இருக்க நினைக்கிறது… குறைந்த பட்சம் ஆறு ஆண்டுகள்…. தன் தேசத்தை தனிமைப்படுத்திக் கொண்டு….. வளப்படுத்திக் கொண்டு மீண்டு வர இத்தனை காலம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது அந்த தேசம்…… அதனை நோக்கி தனது தேசத்தினை நகர்த்தி சென்று கொண்டுயிருக்கிறார் ஜோபைடன் என்கிறார்கள்.
அவரது திட்டமிடலுக்கு மீண்டும் அவரே பதவிக்கு வந்தால் தான் சரிபடும் என்பது போலான மாயையை உருவாக்க பிரம்ம பிரயத்தனங்களை செய்துக் கொண்டு இருக்கிறார்கள் அங்கு உள்ள சில விஷநரிகள். அவர்களின் அதிகாரமும், செல்வாக்கும்…. பொருளாதார வளமும் மிக பெரியது என மதிப்பிடப்பட்டுள்ளது.
சாமானியர்களின் கண்களுக்கு புலப்படாத மாய வலையைபின்னிக் கொண்டு இருக்கிறார்கள்.இது அத்தனையும் எதிர் கொள்ளும் விதமாக நம்மவர்களின் மதி நுட்பம் வாய்ந்த ராஜதந்திர நடவடிக்கைகள் இருப்பதாக உளவுத்துறை வட்டாரங்களில் தகவல் உண்டு.
எது எப்படி இருப்பினும்….இந்த ஆண்டு உலக அளவில் மிகப் பெரிய பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்பதற்கு உண்டான அனைத்து சமிக்ஞைகளும் தென்பட ஆரம்பித்து விட்டது.அதில் நாம் பிரதான பங்கு வகிக்க… பலம் பெற….. எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற வலிமையான பாரதத்தை கட்டமைக்க….. நம் தேசத்தோடு ஒன்றுபட்டு நிற்க உறுதி ஏற்போம். உறுதுணையாக இருப்போம்.