12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி!மோடி அரசு சாதனை!!

நாடு முழுக்க பதின்மவயதினருக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தபடும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்

உலகளவில் பதின்மவயதினருக்கான கொரோனா தடுப்பூசி வெகுசில நாடுகளால் மட்டுமே வழங்கபடுகின்றது, ஏராளமான நாடுகள் செலவுகளை தாங்கமுடியாமல் வயது வந்தோருடன் மட்டும் நிறுத்தி கொண்டன‌

மிக சில நாடுகளே அதை தாங்கும் சக்தியோடு இருக்கின்றன‌

பாரதம் தன் சொந்த தயாரிப்பில் மிக சரியான வகையில் தன் மக்களை காத்து கொண்டிருக்கின்றது, அப்படியே 60 வயதை கடந்தோருக்கு பூஸ்டர் ஊசியும் வழங்கபடுகின்றது

இதெல்லாம் கொரோனாவில் இருந்து விடுபட்டு மேற்கொண்டு பாதுகாப்பினை வலுபடுத்துகின்றோம் எனும் நல்ல முனேற்றமான அறிகுறிகளாகும்

கொஞ்சம் பின்னோக்கி பார்க்கலாம்

இரு ஆண்டுக்கு முன்பு 2020ல் இதே காலகட்டத்தில் கொரொனா உலகை மிரட்ட ஆரம்பித்தது,
இந்தியாவிலும் தாக்கம் அதிகரித்தது

உலகமே அஞ்சி அலறிய வேளையில் உலகிலே ஒரே ஒரு தலைவனின் குரல் கம்பீரமாக ஒலித்தது,
அது மோடியின் குரல்…

“மக்களே அஞ்சவேண்டாம், விரைவில் மருந்து கண்டறிந்து மக்களை காப்போம், அதுவரை கொரோனா பரவாமல் தடுப்போம், விரைவில் இந்த இருள் அகலட்டும் என வீடெல்லாம் விளக்கேற்றுவோம்” என அந்த குரல் நம்பிக்கை ஊட்டியது

அதை ஆளாளுக்கு கலாய்த்தார்கள், மோடி என்ன கிருமி நாசினியா? அவர் என்ன வைரஸ் வித்தகரா என்றெல்லாம் கேள்வி கேட்டார்கள்

விளக்கு வைத்தால் கொரோனா சாகுமா? என பகுத்தறிவு கேள்வி கேட்டோரெல்லாம் உண்டு

ஆனால் மோடி உறுதியாக இருந்தார், தேசத்துக்கான மருந்து தேசத்தால் உருவாக்கபடும் என்பதில் சரியாக இருந்தார்

இதோ சொந்த மருந்து வந்து இந்திய மக்களையும் காத்து உலக மக்களுக்கும் வழங்கபட்டிருக்கின்றது

மிக பெரும் இக்கட்டான நேரத்தில் தேசத்தை சரியாக வழிநடத்திய தலைவன் என உலகம் மோடியினை ஒப்புகொண்டு இந்திய மருந்தினை அங்கீகரித்திருக்கின்றது

குட்டிநாடுகளே கொரோனா மருந்து செலவில் தலைகீழாக கிடக்க பாரதம் மோடி தலைமையில் பெரும் சாதனையினை செய்திருகின்றது

இனி விளக்கேற்றலாம், மோடியால் இத்தேசம் கொரொனாவில் இருந்து மீண்டது, அம்மனிதன் சொன்னபடி தேசம் மருந்து கண்டு கொரோனாவினை விரட்டியது என நன்றிசொல்லி விளக்கேற்றலாம்

இந்த கடைசிகட்ட மருந்து செலுத்துதல் முடியும் நாளில் அதாவது ஒரு மாதத்தில் கொரோனாவினை வென்ற அடையாளத்தின் ஜோதி ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றபட வேண்டும்

பாரத பெருமகன் அந்த ஜோதி ஏற்றும் நிகழ்வினை அறிவிப்பார் என நம்புகின்றோம், மிக சரியான நாளில் அதை செய்தே தீரவேண்டும்

பாரதம் ஒருபோதும் வீழாது, யாராலும் அதை வெல்லமுடியாது!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here