சீனா நாட்டின் யுகான் மாநிலத்திலிருந்து பரவி உலகையே அதிர வைத்திருக்கும் கொரோனா வைரஸ்க்கு எதிராக இந்தியாவில் கோவேக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் கண்டுப்பிடித்து சாதனை புரிந்தது.
இதன் மூலம் நம் நாட்டின் மக்களின் உயிரை காப்பாற்றியதோடு, உலகின் பல்வேறு ஏழை நாடுகளின் மக்களும் காப்பாற்றப்பட்டனர். ஒட்டுமொத்த அலோபதி மருந்து உற்பத்தியும் சில குறிப்பிட்ட நிறுவனங்கள் வசம் இருக்கும் நிலையில், இந்தியாவின் தடுப்பூசி மருந்து தயாரிப்பு சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கொரோனா பரவலை வைத்து பல லட்சம் கோடி சம்பாதிக்க திட்டமிட்டிருந்த நாடுகளின் எண்ணத்தில் மண் விழுந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் தடுப்பூசிகளை அங்கீகரித்த உலக சுகாதார அமைப்பு வேண்டும் என்றே நம் நாட்டு தயாரிப்புக்கு அனுமதியளிக்காமல் இழுத்தடித்தது.
இது குறித்து கவலைப்படாத பிரதமர் மோடி, தானே கோவேக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். இப்போது உலக சுகாதார அமைப்பு வழிக்கு வந்துள்ளது. கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
சர்வதேச அளவில் மருந்து உலகில் மிகப்பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தியுள்ளது. இனி கோவேக்சின் செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாட்டு பயணத்திற்கு தடை ஏதும் இருக்காது.
அப்படி வாங்க வழிக்கு…..மருந்து மாபியா முடிவுக்கு வரட்டும்