தமிழனின் உயிருக்கு மேலானது பசுவினம்!

பொதுவாக ஊரை காப்பதற்காகவும், ஊரை காக்க தொல்லை தந்த புலியை கொன்றதற்காகவும், அரசனுக்காகவும், கணவனுக்காக தன்னை மாய்த்த மனைவிக்காகவும் நடுகல் எழுப்பி அவர்களை நினைவு கூரும் விதமாக நினைவுச்சின்னம் அமைப்பதும் அவர்களை வழிபடுவதும் தமிழர்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்று.

அவ்வகையில் காளை மாடு ஒன்றிற்கு புலியால் பாதிப்பு ஏற்படப் போவதை அறிந்த வீரன் ஒருவன் அப்புலியுடன் போரிட்டு வீர மரணம் அடைந்ததால் அவ்வீரன் சிவலோக பதவி அடைந்ததை தெரிவிக்கும் விதமாக எடுக்கப்பட்ட நடுகல் புலிக்குத்திப்பட்டான் நடுகல் என்று அழைக்கப்படேகிறது. அந்த நடுகல் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்…!

இப்படி எடுக்கப்பட்ட நடுகற்களானது ஊர்க்காத்தான் கோவில், பெண் மீட்டான் அல்லது சிறைமீட்டான் கல், அறம்காத்தான் கல், சாவாரப் பலிக்கல், புலிக்குத்திப்பட்டான், பன்றிக்குத்திப்பட்டான் கல், கோழிக்கல், நவகண்டம், பாம்பு கடித்து மாண்டார் கல் , யானைகுத்திப்பட்டான் கல், கிளிக்கு எடுத்த நடுகல், எருமைக்காக எடுத்த நடுகல் இவை தவிர எல்லைக்காக- தண்ணீர் உரிமைக்காக-ஊருக்காக-துயரைத்தாங்க முடியாமல் உயிர்நீத்தோர் என்ற பெயரில் நடுகல் எழுப்பப்பட்ட செய்திகள் சங்க இலக்கியங்கள் முதல் நமக்கு அதிகமாக கிடைக்கின்றன…!

இப்போது கிடைத்துள்ள இந்த நடுகல்லும் இரு காளை மாடுகளை தாக்க வந்த ஒரு புலியுடன் போரிட்டு இறந்த ஒரு வீரனின் நினைவாக அவன் சிவலோக பதவி அடைந்த நிகழ்வையும், அவர் சைவர் என்பதை காட்டுவதற்காக சிவலிங்கம் பதிந்த புலிக்குத்திப்பட்டான் நடுகல் கிடைத்துள்ளது….!(இதன்மூலம் பழந்தமிழர்கள் பசு மற்றும் காளைகளை தனது உயிருக்கும் மேலாக கருதி வந்தனர் என்பதை அறியலாம்)

இதுபோல் ஆநிரைகளை மீட்பவர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் சங்க காலங்களிலேயே இருந்ததை அகநானூற்றுப்பாடல் பதிவு செய்கிறது….!

“பல் ஆ தழீஇய கல்லா வல் வில் உழைக் குரல்

கூகை அழைப்ப ஆட்டி, நாகு முலை அன்ன நறும்

பூங் கரந்தை விரகு அறியாளர் மரபின் சூட்ட, நிரை இவண் தந்து,

நடுகல் ஆகிய வென் வேல் விடலை இன்மையின் புலம்பி”-

அகநானூறு.அதாவது வெற்றிவேல் வீரன்பல ஆனிரைகளை தழுவிக்கொண்டு தன் கல்லா வல்வில்லால் ஓட்டிவந்த வீரன் கூகை தன் இனத்தை இரை உண்ண அழைக்கும்படி, தடுத்தவரைக் கொன்ற வீரன் இல்லாமல் பசுவின் முலைக்காம்பு போல் பூத்திருக்கும் கரந்தைப் பூ சூட்டப்பட்டு மரபுப்படி சூட்டப்பட்டுதரம் அறிந்த பெருமக்களால் சூட்டப்பட்டுஆனிரை மீட்டுத்தந்தவன் நடுகல்லாகிவிட்டதால் என்று ஆனிரைகளை மீட்ட வீரனுக்கு நடுகல் எடுத்த நிகழ்வை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிடுகிறார்.

இதுபோல் சங்ககாலத்தில் போர் நடைபெறுவதற்கு முன்பு பசுக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட செய்தியை சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூறு தருகிறது,

“ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும்,

பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு

அருங்கடன் இறுக்கும் பொன்போற்

புதல்வர்ப் பெறாஅ தீரும்”- புறநானூறு.

பொருள் : பசுக்களும், பசுக்களின் இயல்பையுடைய பார்ப்பன இனத்தவர்களும் மகளிரையும், நோய் உடையோரையும் பாதுகாத்து தென் திசையில் வாழும் அவரவர் குடியில் இறந்தோர்க்குச் செய்ய வேண்டிய கிரியை செய்யும் பொன்போன்ற தங்கமான பிள்ளையைப் பெறாத மணமக்களையும் போரின்போது பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்செல்லும் தர்மநெறியுடையவன் என்று நெட்டிம்மையார் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் புகழ்கிறார்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here