மார்க்சிஸ்ட் பேச்சு! வீரமணி அலறல்!!

தமிழர்கள் மெல்ல மெல்ல விழித்துக் கொண்டு வருகிறார்கள். இது மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் பதட்டத்தின் மூலமே அறிந்து கொள்ள முடியும்.

தமிழர்கள் என்பவர்கள் இந்துக்கள் அல்ல, தமிழர்கள் வேறு இந்துக்கள் வேறு என்று பல பத்து ஆண்டுகளாக தமிழகத்தில் விஷக்கருத்துக்களை திராவிட இயக்கங்களும், கம்யூனிஸ்ட்டுகளும், முஸ்லீம், கிருஸ்தவ அமைப்புகளும் பரப்பி வருகின்றன.

ஆனாலும் அவர்களால் தமிழர்களின் கடவுள் நம்பிக்கையை சிதைக்க முடியவில்லை. தமிழர்களின் பண்பாடு, வழிபாடு என்று எதை எடுத்து பார்த்தாலும் அது இந்து தர்மத்திலேயே வந்து நின்றது. திருமாவளவன் போன்றோர் மதமாற்ற சக்திகளின் கைக்கூலிகளாகி ‘சனாதான தர்மத்தை’ ஒழிப்போம் என்று கூவினாலும், அதற்கான போஸ்டர்களில் விபூதி தரித்த கட்சித் தொண்டர்களின் படம் இடம்பெறுவதை தவிர்க்க முடியவில்லை.

ஆனாலும் தமிழர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தாலும் பெரும்பாலானவர்கள் மதப்பற்று இல்லாதவர்களாகவே இருந்தனர். அதனால் தாங்கள் வழிபடும் கோயிலுக்கு ஆபத்து வந்தாலும் வேடிக்கை பார்ப்பவர்களாகவோ அல்லது சத்தமில்லாமல் கண்ணீர் விட்டு அழுதுவிட்டு செல்பவர்களாகவோ இருந்து வந்தனர்.

K.Balakrishnan CPM

எத்தனைக்காலம் தான் மக்களை ஏமாற்ற முடியும்? இப்போது மெல்ல மெல்ல தமிழர்களிடையே விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கிவிட்டது. பட்டிதொட்டியெல்லாம் அது பரவத்தொடங்கிவிட்டது. இதனை இந்து அமைப்பினர் உணர்ந்து கொண்டார்களோ இல்லையோ கம்யூனிஸ்ட்டுகள் உணர்ந்து கொண்டுள்ளனர். அதன் வெளிப்பாடாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,

‘கோவில் திருவிழாக்களை கம்யூனிஸ்டுகளாகிய நாம் ஏன் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது? பண்பாட்டு ரீதியான பிரச்சினையை கம்யூனிஸ்டுகள் – இடதுசாரிகள் ஏன் கையில் எடுக்கக் கூடாது? அவற்றை ஏன் பிஜேபியிடம் விட்டுவிட வேண்டும்?’ என்று பேசியதோடு, இனி கடவுள் பணிகளிலும் ஈடுபடுவோம் என்று பேசினார். இதை அனைத்து இந்து அமைப்பினரும் வரவேற்றனர். ஆனால் கம்யூனிஸ்ட்டுகளின் கூட்டாளியான தி.க தலைவர் வீரமணிக்கு தான் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனே வழக்கம் போல வீரமணி தனது அறிக்கையில் புலம்பி தள்ளியுள்ளார்… அதன்விபரம் வருமாறு:

பாலகிருஷ்ணன் பேசியதாக வந்த தகவல் உண்மையாக இருக்கக் கூடாது என்றும் கூட எண்ணினோம்.
ஆனால் ‘வாட்ஸ் அப்’பில் அவர் அவ்வாறு பேசிய பேச்சு ஒளிபரப்புவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்.

இது மார்க்சிய தத்துவத்துக்கு எதிரானது என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. தேர்தலில் தோற்கலாம் – சித்தாந்தத்தில் தோற்கக் கூடாதே!
இது பொதுவாக இளைஞர்களை, ஏன் சி.பி.எம்.மில் உள்ள இளைஞர்களைக்கூடத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்லுவதாகும். வடக்கே ராம பக்தி அதிகம் – அதற்காக ராமன் கோயில் கட்டுவதை ஆதரிக்கப் போகிறோமா?
மத விழாக்களை நாம் கையில் எடுத்துக் கொள்வது என்றால் தேரின் வடம் பிடிக்க வேண்டுமா? காவடி எடுக்கப் போகிறோமா? சைவக் கோயில்களுக்குச் சென்றால் திருநீறு பூசிக் கொள்ள வேண்டுமே! வைணவக் கோயில் திருவிழா என்றால் நாமம் தரித்துக் கொள்ளப் போகிறோமா?
பண்பாட்டை மீட்பது என்றால் கோயில் திருவிழாக்களை நாம் நம் கையில் எடுத்துக் கொள்ளும் வழி – பகுத்தறிவைச் சார்ந்ததாக இருக்க முடியாது.
அப்படியே கம்யூனிஸ்டுகள் முயன்றாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதும் இல்லை. வீண் பழிதான் வந்து சேரும்.
‘கம்யூனிஸ்டுகளே எங்கள் வழிக்கு வந்து விட்டார்கள்’ என்று சங்பரிவார் சக்திகள் பிரச்சாரம் செய்யவும், அதன் மூலம் அவர்கள் பலனடையவும்தான் பயன்படும்…..

இது சாதாரண அலட்சியப்படுத்தக் கூடிய ஒன்றல்ல. காலா காலத்திற்கும் பதில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டிய சித்தாந்த ரீதியான பிரச்சினை. உரிமையோடும், தோழமையோடும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமையாகும் என்று புலம்பியுள்ளார்…

கம்யூனிஸ்டுகள் திமுகவிடம் கூட்டணி பேரத்தில், 2 சீட்டும் 10 கோடி ரூபாயும் வாங்கிவிட்டு காலகாலத்திற்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், அப்போது வீரமணி எந்த அறிக்கையும் வெளியிட வில்லையே என்றெல்லாம் வாசகர்கள் கேட்கக்கூடாது. அது வேறு… இது வேறு….

1 COMMENT

  1. இடது சாரி கம்யூனிஸ்ட் தலைவர் தனது மனைவியுடன் ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்யும் பொழுது நான் நேரில் பார்த்தேன். மாற்றம் என்பது தவிர்க்க இயலாதது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here