தேசபக்த வேஷத்தில் கம்யூனிஸ்ட்டுகள்

கம்யூனிசம் என்பது ஆட்சியினை கைபற்றி மன்னர்களை ஒழிக்கும் ஒரு சித்தாந்தம், அதிகாரத்தில் இருந்து மன்னனை வெளியேற்றுவது ஆட்சியினை கைபற்றுவது ஒன்றுதான் அதன் குறிக்கோள்

உண்மையில் அது மானிட நேயம், சமத்துவம் , வேறுபாடு இல்லாத உலகத்தை போதிக்குமானால் அந்த கம்யூனிசம் சோவியத்தோடு நின்றிருக்காது

சீனா கொரியா கியூபா என உலகமே ஒரு குடைக்குள் வந்திருக்கும்ஆனால் வரவில்லை

ஏன்?அங்கெல்லாம் ஒவ்வொரு கம்யூனிஸ்டுட்டும் நாட்டு பற்று இருந்தது, ரஷ்ய கம்யூனிஸ்ட் ரஷ்யா முன்னேற்றம் பற்றி சிந்தித்தான் சீன கம்யூனிஸ்ட் சீனநலம் முன்னேற்றம் என மட்டும் சிந்தித்தான்

கியூபாவும் இன்னும் பல நாடுகளின் கம்யூனிஸ்டுகளும் அதையே செய்தார்கள், நாமெல்லாம் கம்யூனிஸ்டுகள் அதனால் கம்யூனிச தேசமாக எல்லை உடைப்போம் ஒன்றாவோம் என அவர்கள் கிளம்பவில்லை

ஆம், உலகில் ஒவ்வொரு கம்யூனிஸ்டும் அவனவன் தேசத்துக்கு உண்மையாக நாட்டுபற்றோடு இருந்தான், இன்றும் சீனன் அப்படியேத்தான் இருக்கின்றான்

உலகிலே நாட்டுபற்றே இல்லாதவர்கள் இந்திய தேசத்து கம்யூனிஸ்டுகளாக இருந்தார்கள்,

ரஷ்யனும் சீனனும் தன் தேசத்தை வளர்க்கும் கம்யூனிஸ்டாக இருந்தபொழுதும் இவர்கள் தாங்கள் இந்தியர் என்பதை மறந்து அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் ஜால்ரா கம்யூனிஸ்டுகளாக இருந்தார்கள்

இன்றும் பல கம்யூனிஸ்டுகள் அப்படித்தான்காலம் காலமாக லெனின், ஸ்டாலின், மாசேதுங், கார்ல் மார்க்ஸ் (இவன் பிறந்த நாட்டிலே அவனுக்கு கல் கூட கிடையாது) என்றுதான் கொண்டாடிகொண்டிருந்தார்கள்

இந்திய கம்யூனிஸ்டுகள் சீனபோரின்பொழுது ஒரு கோஷ்டி சீனாவினை பகிரங்கமாக ஆதரித்த காமெடியெல்லாம் நடந்தது, இன்னொரு கோஷ்டியாவது உருப்படியா என்றால் அவர்கள் சோவியத் யூனியன் படையெடுப்புக்காக காத்திருந்தார்கள்

அப்படிபட்ட கம்யூனிஸ்டுகள் முதல் முறையாக இந்திய அடையாளங்களான பாரதியினையும் வ.உ.சியினையும் தாங்குகின்றார்கள் என்றால் அதுதான் பாஜகவின் மிகபெரிய வெற்றி, மாபெரும் வெற்றி

தன்னை அறியாமல் இந்திய குழப்பவாத கோஷ்டிகளெல்லாம் நாட்டுபற்றில் கரைய ஆரம்பித்திருப்பது நல்ல விஷயம்,

கல்கத்தாவில் மம்தாவும் நேதாஜி என உருக்கமாக கண்ணை துடைத்து கொண்டிருக்கின்றார்

பாஜக எழுப்பிய அலை மிகபெரிய தேச எழுச்சியினை ஏற்படுத்திகொண்டிருக்கின்றது,

தமிழகத்திலும் அந்த அலை அடிக்க ஆரம்பித்துவிட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here