பிலிப்பைன்ஸ் நாடு, பாதுகாப்பிற்கான ஹெலிகாப்டர்களை வாங்க தேர்வு நடத்தி வருகிறது.. இதில் ஏர்பஸ் மற்றும் இந்திய தயாரிப்பான துருவ் ஹெலிகாப்டர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றன.
அதில் துருவ் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இரு ஹெலிகாப்டர்களும் ஒரே விலை என்றாலும், விற்பனைக்கு பின்னர் சேவையில் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநேட்டிக்கல் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த ஒப்பந்தம் கிடைத்தால் 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் கடல் பாதுகாப்பு பணியில் திறன் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.