திமுக அரசாங்கத்தால் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறது – அண்ணாமலை ஆவேசம்

50

திமுக ஆட்சி அமைந்த ஒரு மாத காலத்துக்குள் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டது உண்மைதான் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை பொண்ணையராஜபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் முழு மூச்சாக தடுப்பூசி போட்டபோது ஏழு நாட்களில் ஒரு மாநிலம் எவ்வளவு தடுப்பூசி போட்டுள்ளது, எவ்வளவு வீணாகியுள்ளது, எவ்வளவு கொரோனா தொற்று என்பதை பொறுத்து மத்திய அரசு தடுப்பூசிகளை ஒதுக்கி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமானதிலிருந்து தற்போது தடுப்பூசிகள் அதிகமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் 43 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறார்கள். ஜூலை 21-ம் தேதி முதல் மத்திய அரசே தடுப்பூசிகளை நேரடியாக விநியோகிக்கும்.

கோவையை வேறு மாவட்டமாக பார்ரக்கக்கூடாது, தொழில்துறை அதிகம் நிறைந்த கோவையில் நோய் பரவும் தன்மை அதிகம் உள்ளது. கடந்த மூன்று நாட்களாக கோவையில் அதிகபடியான இறப்பு பதிவாகி வருகிறது.

ஒன்றரை மாதமாக தத்தளித்து வரும் கோவைக்கு அரசியல் காழ்புணர்ச்சி இல்லாமல் அதிக தடுப்பூசிகளை வழங்க வேண்டும். 2006-2010 வரை முதல்வராக கருணாநிதி இருந்த போது மத்திய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.

10 வருடங்களுக்கு பிறகு ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள திமுக அரசு புதிதாக ஒன்றிய அரசு என்ற புது வார்த்தையை ஆரம்பித்துள்ளார்கள். தமிழ்நாடு தமிழகமாக, ஒன்றிய அரசா மத்திய அரசா என்பதெல்லாம் தேவையில்லாத பேச்சு.

நிதி அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் அவரவர் துறைகளை பேசமால் வேறு துறைகளை பற்றி பேசி வருகின்றனர். 2006லிருந்து 2010 வரை கருணாநிதி மத்திய அரசு என கூறியதை இந்த திமுகவினர் தவறு என கூறுகிறார்களா? கருணாநிதிக்கு தெரியாத சட்டம், அரசியலமைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டதா? மக்களை திசை திருப்பவுதைதான் பார்க்கிறேன்.

திமுகவின் ஆரம்பகாலமான கடந்த ஒரு மாதகாலமாக கோவை புறக்கணிக்கப்பட்டுத்து உண்மைதான். இப்போது இந்த பிரச்சனை துவங்கியவுடன் தடுப்பூசி தருகின்றனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here