‘5 பவுன் நகைகளை உடனே சென்று அடமானம் வையுங்கள்… நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக தள்ளுபடி செய்யப்படும்…..’
‘நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்துக்கு தான்.. அதற்கான சூட்சமம் எங்களுக்கு மட்டும் தெரியும்…’
இதெல்லாம் திமுகவின் சேப்பாக்கம் சேகுவாரா என்று அன்போடு அழைக்கப்படும் உதயநிதி ஸ்டாலின், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு அவிழ்த்துவிட்ட கதைகள்….
இவரது பேச்சை நம்பி அப்பாவி தமிழ் மக்கள் பல லட்சம் பேர், தங்கள் வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்துவிட்டு தள்ளுபடி வரும் என்று காத்திருக்க…. தகுதிவாய்ந்த 13 ஆயிரம் பேருக்குத் தான் தள்ளுபடி (கட்சிக்காரங்களா இருப்பாங்களோ?) அதிரடிக்க… மற்றவர்களை வங்கி படிகளில் இருந்து தள்ளிவிடாத குறைதான்.
மக்கள் காத்திருந்தனர்…. அந்த நாளும் வந்தது…
உள்ளாட்சித்தேர்தல் பிரச்சாரத்திற்காக இளவரசர் வந்த போது, ‘எங்க நகைக்கடன் தள்ளுபடி? எங்கே மாதம் ஆயிரம் ரூபாய் ? என்று கேள்விக்கணைகளில் துளைக்க துவங்கிவிட்டனர்.
சமூகவலைதளங்களில் அவை நேரடியாக ஒளிபரப்பபட… ஒரு காலத்தில் இருந்த தி.மு.க. போல அந்த எதிர்ப்பை கையாள முடியவில்லை..
அதனால் ஏதோ உளறி சமாளித்துவிட்டு சென்றார்…
இதையடுத்து இறுதிக்கட்டப்பிரச்சாரத்தில் தனது யுக்தியை மாற்றினார் உதயநிதி. நகைக்கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நீங்கள் அடுத்து ஆயிரம் ரூபாய் கேட்பீர்கள் என்று தெரியும்.. அதனால், விரைவில் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்று வாண்டடாக கூறி தப்பிக்க முயலுகிறார். அத்தோடு அவரது உரையில் குறிப்பிட்ட சிலவிவரங்களும்… அது குறித்து பொதுமக்கள் மத்தியில் கிளம்பியுள்ள சந்தேகங்களையும் கீழே தருகிறோம்…
- அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த பயந்ததால் தேர்தல் நடத்தவில்லை
சந்தேகம்: அறிவித்த தேர்தலை, தி.மு.க சார்பில் இடஒதுக்கீடு விவகாரத்தை கிளப்பி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்ததால் நிறுத்தப்பட்டது உண்மையில்லையா?
- தமிழகத்தில் நாங்கள் 9 கோடி தடுப்பூசி போட்டதால் கொரோனாவை கட்டப்படுத்த முடிந்தது. இது தி.மு.கவின் சாதனை.
சந்தேகம்: எதிர்கட்சியாக இருந்த போது தடுப்பூசி மீது சந்தேகம் கிளப்பியது உங்கள் தந்தை இல்லையா? 9 கோடி தடுப்பூசியை இலவசமாக அளித்தது நரேந்திரமோடி அரசு இல்லையா? அவர் படத்தைக்கூட வைக்காமல், கொரானாவிற்கு முன்பே இறந்துபோன உங்கள் தத்தாவின் படத்தை வைத்து தடுப்பூசி முகாம் நடத்தியது ஸ்டிக்கர் ஒட்டும் வேலை என்று பொதுமக்கள் கூறுகின்றனரே?
- அ.தி.மு.க. அரசு கடன் சுமையை ஏற்றியதால் சலுகைகளை உடனே வழங்க முடியவில்லை…
சந்தேகம்: ஆண்டுதோறும் பட்ஜெட்டில் இது தெரியுமே.. தேர்தல் வாக்குறுதி அளிக்கும் போது இது குறித்து யோசிக்க உங்கள் கட்சியில் யாருமில்லையா?
- 8 மாத ஆட்சியின் சாதனையால் தான் தைரியமாக தேர்தலை நடத்துகிறோம்…
சந்தேகம்: அப்புறம் ஏன் கிப்ட்பாக்ஸ், கொலுசு, குக்கர், ஓட்டுக்குப்பணம் என்றெல்லாம் உங்கள் கட்சியினர் விநியோகம் செய்கின்றனர். உங்களுக்கு உள்ள நம்பிக்கை உங்கள் கட்சிக்கு இல்லையா?
சொல்லுங்க உதயநிதி… சொல்லுங்க…