தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 13 கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணி அமைத்து, அ.தி.மு.க கூட்டணியைவிட 5 சதவீத ஓட்டுக்களை அதிகம் பெற்று தி.மு.க ஆட்சியை பிடித்தது. நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி சிதறிவிட, அதே கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டி யிட்டு பெரும் வெற்றியினை தி.மு.க பெற்றுள்ளது.
இதனிடையே தி.மு.க அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் கூட்டணிக்கட்சித் தலைவர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் பதவிக்கு தகுதியானவர், டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றப் போகிறார் என்று பேசத் தொடங்கினர். சாதாரணமாக கட்சித் தலைவரை புகழ்ந்து பேசும் பேச்சு என்று கருதிய நிலையில், முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படத்தொடங்கியது.
தேசிய அரசியலில் ஆர்வம் காட்டத்தொடங்கினார். நீட்விவகாரத்தில் எதிர்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுக்கு அவர் எழுதிய கடிதத்திற்கு யாரும் பதில் அளிக்கவில்லை. ஆனாலும் சமூக நீதி கூட்டமைப்புக்கு ஒன்றை ஏற்படுத்த எதிர்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதினார். அதையும் யாரும் பொருட்படுத்தவில்லை.
இதனிடையே ரஷ்யா-உக்ரைன் யுத்தம் துவங்கிய பின்னர், அங்கிருந்த இந்திய மாணவர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வர ஆப்ரேசன் கங்கா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. அதற்காக 4 அமைச்சர்களை உக்ரைனின் அண்டைநாடுகளுக்கு அனுப்பி வைத்தது. 18,000 த்திற்கும் அதிமான மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் திடீரென தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆர்வம் காட்டினார். மத்திய அரசு இலவசமாக அழைத்து வரும் மாணவர்களின் பயணக்கட்டணத்தை தமிழக அரசு ஏற்கும் என்றார். உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க 3 எம்.பிக்கள், ஒரு எம்.எல்.ஏ அடங்கிய குழுவை அமைத்தார். அவர்கள் டெல்லி போய் சேருவதற்குள் பெரும்பாலான மாணவர்கள் நாடு திரும்பிவிட்டனர். அவர்களை டெல்லி விமான நிலையத்தில் வரவேற்று, தமிழகத்திற்கு அனுப்பி வைக்கும் வேலையை அந்த குழு செய்தது.
இதற்குள் சென்னை விமான நிலையத்தில் மாணவர்களை வரவேற்ற அமைச்சர் மஸ்தான், முதல்வர் ஸ்டாலின் முயற்சியால் மாணவர்கள் மீட்கப்பட்டனர். இதற்கு 3.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று கூறி அதிரடித்தார்.
அண்டை நாடுகளில் சிக்கிக்கொள்பவர்களை மத்திய அரசு தான் மீட்க முடியும் என்ற நிலையில், தமிழக அரசு தனிக்குழு அமைத்த விவகாரம் தேசம் முழுவதும் பரபரப்பாக மீடியாக்களில் விவாதிக்கப்பட்டது.
2024 தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெறாது, மாநில கட்சிகளின் ஆதரவோடு நீங்கள் பிரதமராகிவிடலாம் என்று தி.மு.க. தலைவருக்கு நெருக்கமானவர்கள் கூறியிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தலில், உத்திரபிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்து, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மோடி தான் பிரதமராவார் என்று உறுதிப்படுத்தியுள்ளது. 5 மாநிலங்களிலும் தி.மு.க. கூட்டணிக்கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் துடைத்தெறியப்பட்டுள்ளன. இனிமேலாவது முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் நிதிநெருக்கடியில் தள்ளாடும் மாநில அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதோடு, சட்டசபைத்தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அக்கறை செலுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கி